முகப்பு

சவால்முரசு ஜூன் மற்றும் ஜூலை இதழ்கள் 2020

சவால்முரசு ஜூன் மற்றும் ஜூலை இதழ்கள் பிடிஎஃப் வடிவில் படிக்க
சவால்முரசு ஜூன் மற்றும் ஜூலை இதழ்களை கிண்டிலில் படிக்க

ஜூன் 2020 இதழ்

இதழில்...

தலையங்கம்

graphic களப்பணி வீரனுக்கு இதழின் அஞ்சலி

களப்பணி வீரனுக்கு இதழின் அஞ்சலி

ஐயா அருணாச்சலம் அவர்களுக்கு ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகள் சார்பில், சவால்முரசு தனது இரங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. இதழின் முதல் தலையங்கமே, ஐயாவிற்கான அஞ்சலியாக அமைவதில் பெருமிதம் கொள்கிறது சவால்முரசு.
graphic தெறிப்பும் திறப்பும்

தெறிப்பும் திறப்பும்

அன்புக்குரிய வாசகர்களே! உங்களுக்கும் இதுபோல மாற்றுத்திறனாளிகளின் சவாலான வாழ்வியல் குறித்து, ஏதேனும் நறுக்கென்று சொல்லத் தோன்றுகிறதா? உடனே உங்களின் படைப்புகளை பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிட்டு, எங்கள் நறுக்ஸ் நீதி பகுதிக்கு அனுப்பி வையுங்கள்.

சவால் களம்

graphic செய்தி உலா

செய்தி உலா

இந்தியப் பார்வையற்றோர் கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் ஷேகர் நாயக்கிற்கு இந்திய கிரிக்கெட் சங்கம் ஒரு லட்சம் ரூபாய் வழங்கி உதவ முன்வந்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த ஷேகர் நாயக் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ வென்றவர்.

கல்வி

graphic ஏற்றத்தாழ்வை வளர்க்கும் இணையவழிக் கற்றல்

ஏற்றத்தாழ்வை வளர்க்கும் இணையவழிக் கற்றல்

கரோனா ஊரடங்கினால் மூடப்பட்டிருக்கின்றன மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் உண்டு உறைவிட சிறப்புப் பள்ளிகள். இனி பள்ளி எப்போது திறக்கும்? நாம் எப்போது விடுதிக்குச் செல்லப்போகிறோம் போன்ற விடை தெரியாத கேள்விகளுடன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் சொந்த ஊரில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில், ஆறு முதல் 12ஆம் வகுப்புப் படிக்கும் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்புப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு சுற்றறிக்கையின் மூலம் உத்தரவிட்டிருக்கிறார் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள்.

அணுகல்

graphic ஒரு பார்வையற்ற வாசகனின் தினசரி கனவு

ஒரு பார்வையற்ற வாசகனின் தினசரி கனவு

அன்றிலிருந்து இன்றுவரை மக்களிடம் அருகிவிடாமல் தொடர்வது காலையில் தினசரிகள் படிப்பது என்கிற பழக்கம். ஆனால், அதுவும் நம் தலைமுறையோடு முடிந்து போகுமோ என்ற கவலையும் இல்லாமல் இல்லை. எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல், எங்கள் வீட்டிற்கு காலை ஏழு மணிக்குள் தினமலரோ, தினகரனோ காலத்திற்கேற்ப தினசரிகள் மாறியிருக்கலாம் தினம் வருவது நிற்கவில்லை. அப்பாவும் அம்மாவும் பக்கங்கள் திருப்பிப் படிக்கிற சத்தம் என்னை என்னவோ செய்யும்.

விளையாட்டு

graphic உன்னத உரிமைக்களம்

உன்னத உரிமைக்களம்

எந்த ஒரு மூவும் செய்யாதபடிக்கு, ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் கரோனா செக் வைத்துவிட்டது. பார்வையற்றோருக்கு சோசியல் டிஸ்டன்ஸ் என்கிற டபுல் செக் வேறு. நம் ஆட்கள்தான் சவாலை திவாலாக்கப் பிறவியெடுத்தவர்களாயிற்றே.

சமூகம்

விரைவான நீதி வேண்டும், விளிம்புநிலை மனிதர்க்கெல்லாம்

விரைவான நீதி வேண்டும், விளிம்புநிலை மனிதர்க்கெல்லாம்

அடையாள அட்டை வைத்திருக்கும் 13.35  லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு கால நிவாரணமாக ரூ. 1000 வழங்கப்படும்  என தமிழக முதல்வர் அவர்களால் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஊரடங்கு கால நிவாரணமாக ரூ. 5000 கேட்டுப் போராடியவர்களுக்கு ரூ. 1000 என்பது போதாத தொகைதான் என்றாலும், முதல்வரின் இந்த அறிவிப்பை ஒரு துவக்கமாகவும், தங்களின் தொடர் வலியுறுத்தல்களுக்குக் கிடைத்திருக்கிற சிறிய வெற்றியாகவும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காய் போராடும் சங்கங்கள் கருதுகின்றன.

ஜூலை 2020 இதழ்

இதழில்...
graphic சொல்லுங்கள்! என்ன செய்யலாம்?

சொல்லுங்கள்! என்ன செய்யலாம்?

தலையங்கம்
பொதுத்தேர்வு முடிவுகளைத் தாங்கி வந்த கடந்த ஜூலை மாதமானது,, ஓவியா, காவியா என்ற இரண்டு திறமையான எதிர்கால நம்பிக்கைகளை பார்வை மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு அறிமுகம் செய்து சென்றிருக்கிறது.
graphic "ஆணையருக்கு சத்து இருக்குமானால், அந்தச் சட்டம் புத்துயிர் பெற்று முறையாக நடைமுறைக்கு வரும்தானே?"

"ஆணையருக்கு சத்து இருக்குமானால், அந்தச் சட்டம் புத்துயிர் பெற்று முறையாக நடைமுறைக்கு வரும்தானே?"

பேட்டிகள்
மகிழ்ச்சி. முதலில் நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் இந்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் முதல் பார்வையற்றவர் மட்டுமல்ல; இந்தப்  பொறுப்பு வகிக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கும் முதல் ஊனமுற்றவரும்கூட. எனக்கு முன்னர் இந்தியாவில் எவரும் இந்தப் பொறுப்பைப் பெறவில்லை.
graphic யாருக்காக அழுதபோதும் தலைவனாகலாம்

யாருக்காக அழுதபோதும் தலைவனாகலாம்

ஆளுமைகள்
ஜூலை 26 ஞாயிற்றுக்கிழமை காலை, டில்லியில் ஒரு தனியார் மருத்துவமனையில் தனது இறுதி மூச்சை சுவாசித்தார் ஊனமுற்றோருக்கான நடுவண் மேனாள் தலைமை ஆணையர் (Chief Commissioner for Persons with Disabled) திரு. பிரசன்னக்குமார் பின்ச்சா அவர்கள். இந்தச் செய்தியைக் கேட்ட ஒட்டுமொத்த இந்திய ஊனமுற்றோர் சமூகமும் துடித்துப்போனது. சமூகவலைதளங்களில் அவருக்கு இரங்கல் செய்திகள் பகிரப்பட்டதோடு, ஊனமுற்றோருக்கான நடுவண் ஆணையராக அவர் மேற்கொண்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் நினைவுகூரப்பட்டன.
graphic வங்கி மேலாளர்களே! உங்களுக்கு என்னதான் பிரச்சனை?

வங்கி மேலாளர்களே! உங்களுக்கு என்னதான் பிரச்சனை?

உரிமைக்குரல்
பார்வையற்றவர்களுக்கு ஏடிஎம் வழங்குவதே தவறு என்று உங்களுக்குச் சொன்னது யார்? ஒரு உடல்க்குறைபாடுடைய அதிலும் குறிப்பாகப் பார்வைக்குறைபாடுடையவர்களுக்கு நீங்கள் செய்கிற மறுப்பின் வழியிஏ, ஏடிஎம் வசதியின் முழுப் பலனையும் பார்வையற்றவர்களாகிய நாங்கள் அனுபவிக்கத் தகுதியற்றவர்கள் என்று சொல்லவருகிறீர்களா?
graphic நிஜத்தாரகை ஓவியா

நிஜத்தாரகை ஓவியா

கல்வி
பெருமிதம் என்கிற வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தெரியாத அந்த வயதில், கை வலிக்க வலிக்க, பிரெயிலில் எனக்கான தேர்வினை நானே எழுதினேன். ஒருபோதும் அது எனக்கு சுமையாகவோ, வலியாகவோ, ஏன் பெருமிதமாகவும்கூட உறைத்ததே இல்லை. ஆனால், சிறப்புப் பள்ளியை விட்டு, சாதாரணப்பள்ளிக்கு இடம் பெயர்ந்து, ஒன்பதாம் வகுப்பின் முதல் இடைத்தேர்வினை நான் சொல்லச் சொல்ல ஒருவர் எழுதும் தருணம் வாய்த்தபோதே என் இழப்பை உணர்ந்தேன்.
graphic அன்பு மனங்களின் ஆழம்

அன்பு மனங்களின் ஆழம்

மறுவாழ்வு
தனது மேல்நிலைக் கல்வியின் இறுதி நாட்களில் அந்தப் பெண்ணுக்கு ஒரு அழைப்பு வருகிறது. தன்னார்வ வாசிப்பாளராக ஒருமணி நேரம் வந்துவிட்டுப் போகவேண்டும். சரி போகலாம் என்று புறப்பட்டவர்தான் இன்னும் திரும்பவே இல்லை. அவர்தான் செல்வி கோமதி குப்புசாமி. பள்ளி கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வாசிப்பாளராகத் தொடங்கிய தனது பயணத்தை அவர் சேவை என்று சொல்லி சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை.
graphic சட்ட திருத்தம் இல்லை, நீதித் திரிப்பு

சட்ட திருத்தம் இல்லை, நீதித் திரிப்பு

சட்டம்
ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நூறு நாட்கள் கடந்த பின்னும், அதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கு, மத்திய மாநில அரசுகள் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. மாற்றுத்திறனாளி அமைப்புகளின் தொடர்ச்சியான வலியுறுத்தல்கள் மற்றும் சட்டப் போராட்டத்தின் விளைவாக, தற்போது தமிழக அரசு அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்து அதனை வினியோகிக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. அவற்றிலும் ஏகப்பட்ட குளறுபடிகள்.
graphic நம்பிக்கை மொழி

நம்பிக்கை மொழி

சவால் களம்
வணக்கம் என் பெயர் கௌதமி. சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம். எனக்குப் பிறந்ததிலிருந்தே பார்வையில பிரச்சனை இருந்துச்சு. கொஞ்சம் வருஷத்துக்கு முன்னால ஒரு ஆப்பிரேஷன் பண்ணினாங்க. அதுக்கு அப்புறம் இருந்த கொஞ்சப் பார்வையும் போயிடுச்சு. படிப்பும் அதிகம் இல்லை