முகப்பு

Showing posts with label books. Show all posts
Showing posts with label books. Show all posts

புதுப்பாய்ச்சல்

6 ஆகஸ்ட், 2020
மாற்றுத்திறனாளிகள் வரலாற்றில் அவர்களால் அவர்களுக்காகப் படைக்கப்பட்ட முதல் கிண்டில் மின்னிதழ் சவால்முரசு.
இன்று (6.ஆகஸ்ட்.2020) பிற்பகல் 1.30 முதல், நாளை (7.ஆகஸ்ட்.2020) பிற்பகல் 1.29 வரை இலவசம், இலவசம், முற்றிலும் இலவசம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்கிப் பதிவிறக்கிப் படியுங்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கும் பொதுச்சமூகத்திற்கும் இடையேயான உரையாடல் தொடங்கட்டும். உலகெல்லாம் பரவட்டும்.
சவால்முரசு: நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்.
சவால்முரசு மின்னிதழ்: ஜூன் மற்றும் ஜூலை 2020 இதழ்கள் (Tamil Edition)
இதழைப் பதிவிறக்க,
https://www.amazon.in/dp/B08F83441X/ref=cm_sw_r_wa_awdb_t1_Dl1kFb2JZHK7J
 சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

விரல்மொழியர் 25: வெற்றிவிழா அழைப்பிதழ்

11 ஜூலை, 2020
graphic விரல்மொழியரின் சின்னம்
அன்புடையீர்! பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழான விரல்மொழியரின் 25-ஆம் இதழ் வெளிவருவதை ஒட்டி வெற்றி விழாக் கொண்டாட்டம் நாளை 12-07-2020 ஙாயிற்றுக்கிழமை அன்று சூம் (Zoom) அரங்கில் நடைபெற உள்ளது.

அரங்கமுகவரி:
Meeting ID: 890 2994 2706
 இதழுக்குப் பங்காற்றிய சேவையாளர்களின் வாழ்த்துரைகளோடு, பார்வை மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சிகளும் விழாவில் களைகட்டவிருக்கின்றன. உங்கள் அனைவரையும் வரவேற்க அன்போடு காத்திருக்கிறோம்.
நன்றி.
இங்ஙனம்
ஆசிரியர் குழு
விரல்மொழியர் மின்னிதழ்
www.viralmozhiyar.com
உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு’.
நாள்: 12-07-2020 ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை 10 மணி
இடம் சூம் அரங்கம்
 இணைந்து வழங்குவோர்
சூம் அரங்கம்: பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர்கள் பேரவை & அந்தகக் கவிப் பேரவை
பரிசுகள்: அகவிழி தர்மசேவை அறக்கட்டளை & தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கம்
விரல்மொழியர் மின்நூல் உருவாக்க உதவி: துல்கல் நூலகம்:
பார்வையற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை ஆவணப்படுத்துதல்: அந்தகக் கவிப் பேரவை
ஊடகப் பங்காளர்: சவால் முரசு
 அனைவரும் வருக! ஆதரவு தருக!
 -விரல்மொழியர் மின்னிதழ் (பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழ்)
"உணர்ந்ததைச் சொல்கிறோம் உலகிற்கு"
இணையதளம்:   https://www.viralmozhiyar.com
 முகநூல்: https://www.facebook.com/Viralmozhiyar14/
கீச்சு: https://twitter.com/viralmozhiyar

யுடியுப் சேனல்: https://www.youtube.com/channel/UC5T7XluFXmi1J0sCWZG7 https://youtu.be/q3x

சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

நன்றி இந்து தமிழ்த்திசை: 100 நாவல்களின் ஒலி நூல் வெளியீடு

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்
பார்வை மாற்றுத் திறனாளிகள் இணையதளத்தில் படிக்கலாம்
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாவல்களின் ஒலி நூலை மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார் வெளியிட, பெற்றுக் கொள்கிறார் ஜெகஜோதி பார்வையற்றோருக்கான தன்னார்வ வாசிப்பாளர் வட்ட நிர்வாகி பிரபா வெங்கட்ராமன்.படம்: எம்.நாத்
திருச்சி
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் தமிழின் சிறந்த 100 நாவல்களின் ஒலி நூல் நேற்று வெளியிடப்பட்டது.
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு கணினி மற்றும் பிற உபகரணங்கள் மூலம் ஒலி நூல்கள், மின் நூல்களைப் பயன்படுத்த பயிற்சி கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு செய்த தமிழின் சிறந்த 100 நாவல்களை மின் நூல் மற்றும் ஒலி நூல் வடிவில், வாசிப்போம் இணைய நூலகம் என்ற அமைப்பு உருமாற்றியுள்ளது. இந்த மின் நூல் மற்றும் ஒலி நூல் வெளியீட்டு விழா மாவட்ட மைய நூலகத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார் தலைமை வகித்து, ஒலி நூலை வெளியிட, ஜெகஜோதி பார்வையற்றோருக்கான தன்னார்வ வாசிப்பாளர் வட்ட நிர்வாகி பிரபா வெங்கட்ராமன் பெற்றுக்கொண்டார். விழாவில், வாசிப்போம் இணைய நூலகம் அமைப்பின் நிறுவனர் எஸ்.ரவிக்குமார், மைய நூலக முதல்நிலை நூலகர் சி.கண்ணம் மாள், வாசகர் வட்ட துணைத் தலைவர்கள் நன்மாறன், இல.கணேசன், ரோட்டரி பீனிக்ஸ் தலைவர் நடராஜ சுந்தரம், நிர்வாகி செல்வக்குமார் ஆகியோர் பேசினர்.
இந்த ஒலி நூல்கள் மற்றும் மின் நூல்களை www.vaasippom.blogspot.com என்ற இணையதளத்தில் பார்வை மாற்றுத் திறனாளிகள் படிக்கலாம். விழாவை, இரண்டாம் நிலை நூலகர் ஆ.தர்மர் ஒருங்கிணைத்தார். முன்னதாக, வாசிப்போம் இணைய நூலகம் அமைப்பின் நிர்வாகி சிவசந்திரன் வரவேற்றார். 

நன்றி இந்து தமிழ்த்திசை: மைய நூலகத்தில் ஒலிப் புத்தகம் வெளியீடு

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்
திருச்சி

திருச்சி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் மற்றும் பீனிக்ஸ் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிப் புத்தகம் வெளியீட்டு விழாவை இன்று (அக்.13) நடத்துகின்றன.

இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பிரிவு செயல் பட்டு வருகிறது. இங்கு பார்வை மாற்றுத் திறனாளிகளுக்காக கணினி மற்றும் பிற உபகரணங்களைப் பயன் படுத்தி ஒலிப் புத்தகங்களை பயன்படுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு உதவிடும் வகையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒலிப் புத்தகங்கள் இங்கு உள்ளன.

இந்நிலையில், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு செய்த தமிழின் சிறந்த நூறு நாவல்களின் ஒலிப் புத்தக வெளி யீட்டு விழா மாவட்ட மைய நூலக வளாகத்தில் நாளை (அக்.13) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பார்வை மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று பயன்பெறலாம்.

“பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாசிப்பார்வத்திற்குத் தலைவணங்குகிறோம்” கெ.கெ. மகேஷ் உருக்கம்: என்ன நடந்தது?

graphic மாபெரும் தமிழ்க்கனவு நூலைக் கையில்  ஏந்தியபடி ப. சரவணமணிகண்டன்
பிரபல செய்தி ஊடகமான தி இந்து குழுமம், பேரறிஞர் அண்ணாவைப் போற்றும் வகையில், மாபெரும் தமிழ்க்கனவுஎன்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. முன்பதிவு தொடங்கிய கடந்த மார்ச் 15 அன்று அதிகாலையே நான் புத்தகத்தை இணையவாயிலாக முன்பதிவு செய்து காத்திருந்தேன்.
ஏப்ரல் நான்காம் தேதி என் கைகளுக்கு அந்த தடித்த புத்தகம் கிடைத்தபோது அளவற்ற மகிழ்ச்சியடைந்தேன். அதேசமயம், தெற்கிலிருந்து ஒரு சூரியன்என்கிற அவர்களின் முந்தைய புத்தகத்தை அமேசான் கிண்டிலில் வெளியிட்டதால் பல பார்வையற்றவர்கள் படித்துப் பயன்பெற்றோம். அதுபோலவே, இந்த புத்தகத்தையும் கிண்டிலில் வெளியிட வேண்டுமென எனது முகநூல் வழியாக கோரிக்கை வைத்தேன்.
நான் எனது முகநூல் பக்கத்தில், “800 பக்கங்கள் கொண்ட மாபெரும் வரலாற்றுப் பொக்கிஷத்தை, வாசிப்பாளர்களைத் தேடிப்பிடித்தேனும் வாசித்தாகவேண்டும் என்பதே எனது இப்போதைய பெருங்கனவு.
தரமான ஒரு வரலாற்று ஆவணத்தைத் தக்க தருணத்தில் வழங்கியிருக்கிற இந்து குழுமத்திற்கு உளமார்ந்த நன்றிகள்.
அப்படியே கோரிக்கை ஒன்று.
தங்களின் தெற்கிலிருந்து ஒரு சூரியன்புத்தகத்தை கிண்டிலில் வழங்கியதுபோல, இந்தப் புத்தகத்தையும் வழங்கினால், அதிகமான பார்வை மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவோம்.எனக் குறிப்பிட்டிருந்தேன்.
graphic சமஸ்
 எனது இந்தப் பதிவினைக் கவனமாகப் படித்த சகோதரர் பழூரான் விக்ணேஷ் ஆனந்த் அவர்கள், இதனை இந்து தமிழ்த்திசையின் நடுப்பக்க ஆசிரியரான திரு. சமஸ் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லுமாறு திரு. ரவிசங்கர் ஐயாக்கண்ணு அவர்களைக் கேட்டுக்கொண்டார். அவரும் உடனடியாக சமஸ் அவர்களிடமிருந்து நிச்சயம் செய்கிறோம்என்ற மகிழ்ச்சி தரக்கூடிய பதிலைப் பெற்றுத் தந்தார்.
graphic கெ.கெ. மகேஷ்
அதேவேளையில், எனது நண்பர் திரு. கா. செல்வம் அவர்கள், எனது பதிவை திரு. கெ.கெ. மகேஷ் அவர்களின் கவனத்திற்குஎனக் குறிப்பிட்டு,  தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்து தமிழ்த்திசையின் நிருபர்களில் ஒருவரும், இந்த புத்தக ஆக்கத்தில் பங்காற்றியவருமான திரு. கெ.கெ. மகேஷ் அவர்கள், நிச்சயமாக செய்கிறோம், பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாசிப்பார்வத்திற்குத் தலைவணங்குகிறோம்என உருக்கமாக பதில் அளித்திருந்தார்.
 திரு. சமஸ் மற்றும் கெ.கெ. மகேஷ் அவர்களுக்கு அனைத்துப் பார்வைமாற்றுத்திறனாளிகள் சார்பாக எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், எனது இந்தக் கோரிக்கையின் நியாயத்தை உள்வாங்கிகொண்டு, அதை உரியவர்களிடம் கொண்டு சேர்த்த சகோதரர் பழூரான் விக்ணேஷ் ஆனந்த், திரு. ரவிசங்கர் ஐயாக்கண்ணு அவர்கள், எனது இதுபோன்ற முயற்சிகளுக்கு எப்போதுமே தன் வழிகாட்டலையும் ஒத்துழைப்பையும் வழங்கிவரும் நண்பர்  கா. செல்வம், இந்த முகநூல்ப்பதிவிற்காகப் படங்கள் எடுத்துத் தந்துதவிய நண்பர்கள் செல்வராஜ் மற்றும் பாஸ்கர் என அனைவருக்கும் நன்றிகள்.
graphic நூலை சரவணமணிகண்டனுக்கு வாசித்துக் காட்டுகிறார் பாஸ்கர்
இருதியாக ஒன்று, படைப்பாளிகளே! பதிப்பாளர்களே! பார்வை மாற்றுத்திறனாளிகளாகிய நாங்களும் படித்துப் பயன்பெறும் வகையில், தங்களின் புதிய அச்சு வெளியீடுகளை ஒருங்குறி மின்னூலாகவோ, அல்லது ஒலிவடிவிலோ விற்பனைக்கு கொண்டுவந்து, வாசிப்புத் தளத்தில் மாற்றுத்திறனாளிகளின் சமபங்கேற்பை உறுதிசெய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ப. சரவணமணிகண்டன்
தொடர்புக்கு vaazhgavalluvam@gmail.com
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்