முகப்பு

Showing posts with label braille education in general schools. Show all posts
Showing posts with label braille education in general schools. Show all posts

ஆக்கபூர்வ உரையாடலுக்கு அழைக்கிறது சங்கம்

9 ஆகஸ்ட், 2020
graphic கருத்தரங்க அழைப்பிதழ்
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் நடத்தும்
இணையவெளி கருத்தரங்கம்
புதிய கல்விக் கொள்கையில் பார்வையற்றோர் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்
நாள் : இன்று 09.08.2020.
நேரம் : காலை 10. 45 மணி.
இடம் : ஜூம் (Zoom) அரங்கம் / வலையொளி (youtube) நேரலை.
சிறப்பு விருந்தினர்கள் :
கல்வியாளர் எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராஜன் அவர்கள்.
சமூக செயல்பாட்டாளர் ஜெகதீஸ்வரன் அவர்கள்.
கருத்தாளர்கள் :
Mrs. M. முத்துச்செல்வி, துணைத் தலைவர், அகில இந்திய பார்வையற்றோர்
கூட்டமைப்பு (AICB). மேலாளர், இந்தியன் வங்கி.
Ms. திப்தி பாட்டியா, தலைமை நிர்வாக அலுவலர் (CEO), தேசிய
பார்வையற்றோருக்கான சங்கம், தமிழ்நாடு (NAB Tamilnadu).
Dr. T. நடராஜன், மாநில செயற்குழு உறுப்பினர், பார்வையற்ற ஆசிரியர்கள்
சங்கம். உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, திருவாரூர்.
Mr. K.R.P. சரவணமணிகண்டன், மாநில துணைச் செயலர், ஹெலன் கெல்லர்
மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம். தமிழ் பட்டதாரி ஆசிரியர், பார்வையற்றோர் அரசு மேல்நிலைப் பள்ளி, சென்னை.
Dr. K. முருகானந்தன், சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் (Advocacy Committee
Member), பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்.
அமைப்புக்கஉழு உறுப்பினர், பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை.
Zoom Meeting link :
https://us02web.zoom.us/j/84052429610?pwd=QThyTTRuK2tsTzFGZm84ZVVRUG1DUT09
Meeting ID: 840 5242 9610
Passcode: csgab
ஜூம் அரங்கில் இணைய முடியாதவர்கள் csgab info hub வலையொளி (youtube)
நேரலையில் இணையலாம்.
https://www.youtube.com/channel/UCiIerT9kXUyCGVTgK30dfkw
அனைவரும் வருக!
தலைவர்
V. முத்துசாமி.
பொதுச்செயலாளர்
A.மணிக்கண்ணன்.
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்
தொலைபேசி எண் : 044–24348628, 044-48548628.
மின்னஞ்சல் : tncsgab@gmail.com
இணையதளம் : www.csgab.org
நன்றி.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

+2 தேர்வு முடிவுகள் - மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கூடுதல் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க கோரிக்கை

17 ஜூலை, 2020
graphic நம்புராஜன்
நம்புராஜன்
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் சுமார் 2835 மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. இறுதித் தேர்வினை எழுதாத 34 ஆயிரம் மாணவர்களில் எத்தனை மாற்றுத்திறனாளி மாணவர்கள் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
இந்நிலையில், தேர்வு முடிவு வெளியான 520 பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களில் 497 பேரும், 592 செவித்திறன் குறையுடைய மாணவர்களில் 486 மாணவர்களும் வெற்றிபெற்றனர். 983 உடல்ச்சவால் மாற்றுத்திறனாளிகளில் 860 பேர் மற்றும் 740 இதர மாற்றுத்திறனாளிகளில் 664 பேரும் தேர்ச்சி பெற்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 51 பார்வையற்றவர்களும், சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 129 செவித்திறன் குறையுடைய மாணவர்களும் தேர்வெழுதியுள்ளனர்.
அரசு சிறப்புப் பள்ளிகளைப்பொருத்தவரை,பூவிருந்தவல்லி, திருச்சிமற்றும் தஞ்சைப் பார்வைத்திறன் குறையுடையோருக்கான பள்ளிகளில் மாணவர்கள் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல்,தஞ்சை செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளியில் தேர்வெழுதிய  12 மாணவர்களும், தர்மபுரி செவித்திறன் குறையுடையோருக்கான அரசுசிறப்புப் பள்ளியில் 10ல் 9 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மாற்றுத்திறனாளிகளின் கல்வியை மேம்படுத்தும் பொருட்டு சில கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து நேற்று அறிக்கையினை வெளியிட்டது. அந்த அறிக்கையில்,
நேற்று வெளியிடப்பட்ட +2 முடிவுகளின்படி, தேர்வு எழுதியவர்களில் பார்வைத்திறன்-95.58%,  செவித்திறன்-82.09%, உடல்ஊனமுற்றோர்- 89.59 மாணாக்கர்களும் ஏனைய வகை மாற்றுத்திறனாளர்-87.49% என்ற விகிதத்தில் மாணாக்கர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு வாழ்த்துக்களையும், பாடுபட்ட அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். என குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளின் கல்வி மேம்பட அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ø  அரசு இணையதளத்தில் அனைத்துப் பாடங்களையும் யுனிக்கோட் முறையில் டெக்ஸ்டாக பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் மூலம் பார்வைத்திறன் மாணாக்கர்கள் எளிதாகவும் முழுமையாகவும் கற்க வழிவகை செய்ய வேண்டும்.

Ø  தமிழக அரசு வழங்கும் மடிக்கணினியுடன், டெக்ஸ்டில் இருந்து பிரெயில் முறைக்கு மாற்றித்தரும் ‘ஆர்பிட் ரீடர்’ கருவி போன்றவை பார்வைத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்க வேண்டும். பிரெயில் புத்தகங்களை காலதாதமின்றி வழங்க வேண்டும்.

Ø  தற்போது இல்லாத கணிதம் உள்ளிட்ட பாடங்களை, தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி பார்வைத்திறன் மாணாக்கர்கள் படிக்க முடியும் என்பதால், அப்படிப்பட்ட பாடங்களையும் புகுத்த வேண்டும்.

Ø  பொதுப்பள்ளிகளில்  பார்வைத்திறன், செவித்திறன் உள்ளிட்ட அனைத்து மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு  ஒவ்வொரு பாடத்திற்கும் தேவையான உரிய சிறப்பாசிரியர்கள் நியமிக்க வேண்டும். மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு தேவைப்படும் கருவிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும்.

Ø  தற்போது பொதுப்பள்ளிகளில் மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கான போதிய கட்டமைப்பு வசதி இல்லாததால், உயர்நிலை மேல்நிலை கல்விக்காக  சிறப்பு பள்ளிகளுக்கும் மாற்றுத்திறன் மாணாக்கர்கள் அதிக அளவில் வருகின்றனர்.  எனவே, சிறப்பு பள்ளிகளில் சிறப்பாசிரியர்களை தேவைக்கேற்ப கூடுதலாக நியமிக்க வேண்டும்.

Ø  பார்வைத்திறன் மாணாக்கர்களுக்கு பார்வைத்திறன் ஆசிரியர்களையும், செவித்திறன் மாணாக்கர்களுக்கு செவித்திறன் ஆசிரியர்களையும் கூடுதலாக நியமிப்பது பயன்படும்.

இவைகள் எல்லாம் மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு சட்டபூர்வ உரிமை என்பதை உணர்ந்து பள்ளிக்கல்வித்துறையும், தமிழக அரசும் செயலாற்ற வேண்டும்.

                                           (பா. ஜான்ஸிராணி) தலைவர்                                            
(எஸ். நம்புராஜன் பொதுச்செயலாளர்
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

நன்றி ஒன் இந்தியா: ஆசிரியர் பயிற்சி முடித்த ஒரு மாற்றுத்திறனாளிக்குகூட பணி வழங்காத அரசு உதவி பெறும் கல்லூரிகள்

மாற்றுத்திறனாளிகள் வழக்கு:
graphic one india
  சென்னை:
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வரும் 26ம் தேதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை தியாகராய நகரில் காலேஜ் ஸ்டூடன் அண்ட் கிராஜுவேட் அசோசியேசன் ஆப் தி பிளைண்ட் உள்ளிட்ட சங்கங்களின் சார்பாக மணிக்கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தேசிய தகுதி தேர்வில் (NET) சுமார் 4 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி பெற்றனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு எந்த பணியும் வழங்கவில்லை. அரசு உதவி பெறும் கல்லூரிகளி்ல் மாற்றுத்திறனாளிகளுக்காக 4 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஷேஷசாயி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக உரிய ஆவணங்களுடன் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை செப்டம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனற்.
இது தொடர்பாக பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. அ. மணிக்கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

"ஊனமுற்றோர் சட்டம் 1995 மற்றும் ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் 2016
அமல்படுத்தப்பட்டும், மாற்றுத் திறனாளிகளுக்கான குறிப்பாக
பார்வையற்றோருக்கான ஒரு சதவிகித இட ஒதுக்கீடானது அரசு உதவிப் பெற்று, இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் மறுக்கப்பட்டு வருவது நாம் அனைவரும்் அறிந்ததே.

இந்த உரிமை மீறலை எதிர்த்து நம் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள்
மற்றும் பட்டதாரிகள் சங்கமும், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பும் இணைந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கானது கடந்த ஆகஸ்ட் மாதம்  இருபதாம் தேதி பதிவு செய்யப்பட்டு, இன்று (செப்டம்பர் ஆறு) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கை பிரபல
உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், மாற்றுத் திறனாளிகளின் உரிமைக்காக குரல் கொடுப்பவருமான திருமிகு. பிரபாகரன் ஐயா அவர்கள் நம் இரண்டு சங்கங்களின் சார்பில் வாதாடி வருகிறார்.

இவ்வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீடு அமுல்படுத்தியதற்கான அறிக்கையை நான்கு
வாரத்திற்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். மேலும், இந்த நான்கு
சதவிகித இட ஒதுக்கீட்டினை பின்பற்றாத கல்வி நிறுவனங்களுக்கு அரசால் வழங்கப்படும் நிதியினை ரத்து  செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று சங்கங்களின் சார்பில் முறையிடப்பட்டுள்ளது."
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பிரெய்லி கற்க முடியாமல் தவிப்பு சிறப்பாசிரியர்களை நியமிக்க கோரிக்கை

graphic six dots
 நன்றி இந்து தமிழ்த்திசை 21.ஆகஸ்ட்.2019
மு.யுவராஜ்
சென்னை 
சாதாரணப் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பிரெய்லி கற்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, பயிற்சி பெற்ற சிறப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 10 லட்சத் துக்கும் மேற்பட்ட பல்வேறு வகை யான மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். இவர்களில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்காக 10 அரசு சிறப்பு பள்ளிகள் பிரத்யேகமாக செயல்பட்டு வருகின்றன.
இப்பள்ளிகளில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி எழுத்துகள் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதற்கிடையே, சாதாரண பள்ளிகளிலும் பார்வை குறைபாடு மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவி கள் சேர்க்கப்படுகின்றனர். ஆனால், இங்குள்ள ஆசிரியர்களுக்கு பிரெய்லி குறித்து தெரிவதில்லை.
இதனால், அத்தகைய மாணவ, மாணவிகள் கற்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, சாதாரண பள்ளிகளில் படிக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பிரெய்லி எழுத்து கற்பிக்கும் வகையில் பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியர் களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பூவிருந்த வல்லியில் உள்ள பார்வையற்றோ ருக்கான அரசு பள்ளியின் ஆசிரியர் யு.சித்ரா கூறியதாவது:
பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பிரெய்லி முறையில் படித்தால்தான் எழுத்து களின் வடிவத்தை அறிய முடியும். ஆனால், சாதாரண பள்ளிகளில் படிக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்று கொடுக்கும் ஆசிரி யர்கள் தங்களுக்கு பிரெய்லி தெரியாததால் வாய்மொழியாக சொல்லி கொடுப்பது மற்றும் குரலை பதிவு செய்து மீண்டும் மீண்டும் கேட்பதன் மூலம் மனப்பாடம் செய்ய வைக்கின்றனர்.
பள்ளி, கல்லூரி வரை இம் முறையில் கற்பதில் மாணவ, மாணவிகளுக்கு சிக்கல் இருக்காது. அதன் பிறகு, எழுத்தின் வடிவம் தெரியாததால் சிந்தனையில் தாக் கம் ஏற்பட்டு ஆளுமைத் திறன் பாதிக்கப்படுகிறது. இதனால், பணி யிடங்கள், தொழில்நுட்பங்களைக் கையாளுதல் என அனைத்திலும் பின்தங்கும் சூழல் ஏற்படுகிறது.
ஒரு வட்டாரத்தில் 8 மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஒரு சிறப்பு ஆசிரியர் என நியமிக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களும் பார்வையற்றோர் மற்றும் பார்வை குறைபாடுடையோர், காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர், உடல் இயக் கம் குறைபாடு மற்றும் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகளில் எதாவது ஒரு பிரிவில்தான் பயிற்சி பெற்றவர்களாக இருக்கின்றனர்.
எனவே, ஒரு வட்டாரத்தில் எத்தனை மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் படிக்கின்ற னர் என்பதை அறிந்து அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பாசிரி யர்களை நியமிக்க வேண்டும்.
வீட்டுக்கு அருகில் இருப்பதால்தான் சாதாரண பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவ, மாண விகள் அதிக அளவில் சேர்க்கப் படுகின்றனர். எனவே, மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகை பிரித்து பயிற்சி பெற்ற சிறப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும்என்றார். 
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்