![]() |
நன்றி இந்து தமிழ்த்திசை |
சேலம்
மக்களவைத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, சேலம் சிஎஸ்ஐ சிறப்பு பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.
விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆட்சியர் ரோஹிணி தொடங்கிவைத்து கூறும்போது, “மக்களவைத் தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் வாக்குப்பதிவு செய்ய தடையற்ற சூழலுடன் வாக்குப்பதிவு மையத்துக்கு வந்து வாக்களித்து செல்ல தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கால்கள் செயலிழந்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குப்பதிவு மையம் சென்று வாக்குப்பதிவு செய்ய வாக்குப்பதிவு மையங்களில் சாய்வு தளம் அமைக்கப்பட்டும், சக்கர நாற்காலி மற்றும் உதவியாளருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு செய்ய வசதியாக மின்னணு இயந்திரத்தில் சின்னம் குறித்து தொட்டுப்பார்த்து உணர்ந்து கொள்ளும் பிரய்லி முறையிலான எழுத்து வடிவம் சேர்க்கப்பட்டுள்ளன” என்றார்.
இதையொட்டி, மாற்றுத் திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.
முன்னதாக, மனவளர்ச்சி குன்றியோருக்கான தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி நடந்தது. 6 வயதுக்கு உட்பட்ட மனவளர்ச்சி குன்றிய சிறார்கள் தேர்தல் விழிப்புணர்வு குறித்த டாட்டுக்களை உடலில் வரைந்திருந்தனர். 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய சிறார்களின் தேர்தல் விழிப்புணர்வு நாடகம் நடந்தது.
இதில், உதவி ஆட்சியர் (பயிற்சி) வந்தனா கார்க், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்ரமணி, சிஎஸ்ஐ பள்ளி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்
No comments:
Post a Comment