முகப்பு

பார்வையற்ற பட்டதாரிகளுக்கு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம்


நன்றி இந்து தமிழ்த்திசை

கோவை
பார்வையற்ற பட்டதாரிகளுக்கு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம் தொடங்கியது.
தேசிய பார்வையற்றோர் இணையம் மற்றும் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவை இணைந்து நடத்தும், மத்திய மற்றும் மாநில அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம், வரதராஜபுரத்தில் நேற்று தொடங்கியது.
முகாமுக்கு தேசிய பார்வையற்றோர் இணைய ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் தலைமை வகித்து வரவேற்றுப் பேசினார். அம்பேத்கா் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் கணேஷ், தணிக்கையாளர் சோமசுந்தரம், எல்ஐசி மேலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலைவாய்ப்பு அலுவலக இணை இயக்குநர் லதா, துணை இயக்குநர் ஜோதிமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இது குறித்து தேசிய பார்வையற்றோர் இணைய ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் கூறும்போது, 'பார்வையற்ற பட்டதாரிகள் மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தேர்வு நேரத்தில் முழுநேர வகுப்புகள் தொடங்கும். பார்வையற்ற பட்டதாரிகள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். பிளஸ் 2 முடித்தவர்கள் ரயில்வே பணிகளுக்கான தேர்வுக்கு பயிற்சி பெறலாம். மேலும் விவரங்களுக்கு 8903001608 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

No comments:

Post a Comment