முகப்பு

மாற்றுத்திறனாளி விவரங்களை மாநகராட்சியில் பதிவு செய்யலாம்

graphic இந்து தமிழ்த்திசை
நன்றி இந்து தமிழ்த்திசை


சென்னை
சென்னை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் தங்கள் விவரங்களை 94454 77699 என்ற கைபேசி எண்ணில் பதிவு செய்தால், அவர்கள் வாக்களிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட தேர்தல் அலுவலகம் செய்து கொடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிர காஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாவட்டத்தில் 913 அமைவிடங்களில் 3 ஆயிரத்து 754 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
இம்மையங்களில் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்கு சென்று சிரமமின்றி எளிதில் வாக்களிக்க சக்கர நாற்காலிகள், சாய்தள வசதி, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக வாக்குப் பதிவு இயந்திரத்தில் தொட்டு உணரக்கூடிய வகையில் பிரெய்லி முறை போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள மாற்றுத் திறனாளி வாக்காளர்களை அடையாளம் காணவும், அவர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யவும் 94454 77699 என்ற கைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு மாற்றுத்திறனாளி வாக்காளரோ, அவர்களது பெற்றோரோ, காப்பாளரோ, சமூக ஆர்வலர்களோ தொடர்புகொண்டு மாற்றுத்திறனாளிகளின் வாக்கா ளர் அட்டை எண், முகவரி மற் றும் வாக்குச்சாவடி மையம் போன்ற விவரங்களை தெரிவிக் கலாம். மிஸ்டு கால் கொடுத்தோ, வாட்ஸ் அப் மூல மாகவோகூட தகவல்களை தெரிவிக்கலாம்.
தகவல் பெறப் பட்டதும் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி அலுவலர்கள், மாற்றுத் திறனாளிகளைத் தொடர்பு கொண்டு தேர்தலில் வாக்களிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
  வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

No comments:

Post a Comment