நன்றி இந்து தமிழ்த்திசை நாளிதழ் 08.மார்ச்.2019
மாற்றுத்திறனாளிகள் சங்கங்க ளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற தேர்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத் திறனா ளிகள் நல அலுவலகத்தில் நடை பெற்றது.
திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு தலைமை வகித்தார். தேர்தல் வட்டாட்சியர் சுப்பிரமணியபிரசாத் வரவேற்றார்.
கூட்டத்தில், தகுதியுள்ள விடுபட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி, சக்கர நாற்காலி வசதி உள்ளிட்டவை செய்துதரப்படவுள்ளது. மாற்றுத் திறனாளிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்
No comments:
Post a Comment