முகப்பு

15 நிமிடங்களுக்கு முன்பாக அளுவலகத்திலிருந்து வேளியேற மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி

page 1 460: 1 சுருக்கம் பணியமைப்பு - உடல் ஊனமுற்ற அரசுப் பணியாளர்கள் - முன் அனுமதி - உடல் ஊனமுற்ற அரசுப்பணியாளர்கள் தினமும் மாலை நேரத்தில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவலகத்தை விட்டுச் செல்ல அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது. பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த (எ) துறை அரசாணை (நிலை) எண்: 149 நாள்:19.08.2003 திருவள்ளுவர் ஆண்டு 2039 அ வெரி 3 படிக்கப்பட்டது: . ஊனமுற்றோருக்கான மாநில ஆணையரின் நேர்முக கடித எண். 6546/உ.ம். 3 (3) 2007, நாள் 05.06.2008. ஆணை : உடல் ஊனமுற்ற அரசுப்பணியாளர்கள், மாலை 5.45 மலரிக்கு அலுவலகம் முடிந்து வீட்டிற்குத் திரும்பும் போது போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசலில் பேருந்தில் பயணம் செய்து இல்லத்திற்கு செல்வதற்கு மிகவும் அல்லல்படுவதால் ஊனமுற்ற அரசுப்பணியாளர்கள் மாலையில் முன்னதாக அலுவலகம் விட்டு இல்லம் செல்ல அனுமதி வழங்குமாறு அரசை வேண்டிக் கொண்டனர். 2. இது தொடர்பாக ஊனமுற்றோருக்கான மாநில ஆணையரிடம் குறிப்புரை கேட்டபோது பார்வையற்றோர் மற்றும் உடல் ஊனமுற்ற பணியாளர்கள் தினமும் மாலையில் 15 நிமிடங்கள் முன்னதாகச் செல்ல அனுமதி வழங்கலாம் என பார்வையில் கண்டுள்ள கடிதத்தில் பரிந்துரை செய்துள்ளார். 3. ஊனமுற்றோருக்கான மாநில ஆணையரின் கருத்துருவை அரசு கருணையுடன் பரிசீலனை செய்தது. அதன் அடிப்படையில் பார்வையற்றோர் மற்றும் உடல் ஊனமுற்ற அரசுப் பணியாளர்கள் தினமும் மாலையில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்ல அனுமதி அளித்து ஆணையிடப்படுகிறது. 4. தலைமைச் செயலக அலுவலக நடைமுறை மற்றும் அரசு அலுவலக நடைமுறை நுால்களுக்கு தக்க திருத்தம் பின்னர் வெளியிடப்படும். (ஆளுநரின் ஆணைப்படி) எல். கே. திரிபாதி தலைமைச் செயலாளர் பெறுநர் அனைத்து தலைமைச் செயலகத் துறைகள், சென்னை - 9.
page 2 அனைத்து துறைச் செயலர்கள், தலைமைச் செயலகம், சென்னை - 9 அனைத்து துறைத் தலைவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் / அனைத்து மாவட்ட நீதிபதிகள் பதிவாளர், உயர்நீதிமன்றம், சென்னை - 104, ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர், 15/1 மாதிரி பள்ளிச் சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 6. செயலாளர், சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை, சென்னை - 9. செயலாளர், தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், சென்னை - 2. நகல் : முதலமைச்சரின் செயலாளர், சென்னை - 9 முதுநிலை நேர்முக உதவியாளர், அமைச்சர் (மின்சாரம்) சென்னை - 9. முதுநிலை நேர்முக உதவியாளர், அமைச்சர் (சமூகநலம்) சென்னை - 9. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறையின் அனைத்து அதிகாரிகள் மற்றும் பிரிவுகள், சென்னை - 9. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறைச் செயலரின் தனிச் செயலாளர், சென்னை - 9. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த (பயிற்சி) துறை செயலரின் தனிச்செயலர். சென்னை - 9 //ஆணைப்படி அனுப்பப்படுகிறது// - 08 - 14 (6எச். வில்வ ம்) பிரிவு அலுவலர்
அரசாணையைப் பதிவிறக்க
 வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

No comments:

Post a Comment