காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, அதன் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களால் வெளியிடப்பட்டது. விவசாயத்திற்கான, தனி பட்ஜெட், பள்ளிக்கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும், தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் போன்ற மக்களால் பெரிதும் வரவேற்க்கப்படக்கூடிய அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன. அதுபோலவே, அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது காங்கிரஸ். அவை;
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்
1. ஊனத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படுவதைத் தடுக்க, அரசியல் சாசன பிரிவுகள் 15, 16 ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
2. அனைத்து பொதுச்சேவைகள், பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் கட்டிடங்கள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் மாற்றப்படும்.
3. புதிய உரிமைகள் சட்டம் மற்றும் 21 வகை ஊனமுற்றோர் குறித்த தகவல்களை எளிதாக பெறும் வகையில் தகவு(portal) உருவாக்கப்படும்.
4. ஊனமுற்றோர் உரிமைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் ஒப்புதல் அளிக்கும் வகையில் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசுத்துறைகளும் தங்களுடைய திட்டங்கள், கொள்கை அறிவிப்புகளை விரைவாக மறு ஆய்வு செய்ய உத்தரவிடப்படும்.
5. பிரெயில் அச்சு வடிவம் மற்றும் செய்கை மொழி ஆகியவைகளும், மொழிகளாக அங்கீகரித்திட அரசியல் சாசன திருத்தத்திற்கு காங்கிரஸ் கட்சி முன்மொழியும்.
6. மாற்றுத்திறனாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப தரமான கல்வி அளித்திட "சிறப்புக் கல்விக்கான தேசிய ஆராய்ச்சி சிறப்பு மையம் -National Centre of Research and Excellence for Special Education" என்ற நிறுவனம் உருவாக்கப்படும்.
7. மாற்றுத்திறனாளிகளுக்காக அரசுத் திட்டங்கள், கொள்கைகள் ஆகியவை வருடாந்திர சமூக தணிக்கை செய்யப்படும்.
8. மாற்றுத்திறனாளிகளின் உடமை உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்புகளிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படும்.
இவை வெறும் அறிவிப்புகளாகவே தங்கிவிடாமல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், இவற்றை வலியுறுத்திப் பெறவேண்டிய பணிகளை மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கங்கள் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அறிவிப்புகள் அடங்கிய ஆங்கிலப் பக்கம்வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்
No comments:
Post a Comment