முகப்பு

நன்றி இந்து தமிழ்த்திசை: 3-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது 

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவி ஒருவர் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் ஆசிரியர் பாஸ்கர், முதல்நாள் நடத்திய பாடத்தில் இருந்து மாணவியிடம் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு மாணவி சரிவர பதிலளிக்காததால், ஆத்திரமடைந்த ஆசிரியர் பாஸ்கர், மாணவியின் இடது கையில் கத்தியால் குத்தினார். இதில், படுகாயமடைந்த மாணவியை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் செம்பனார்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் பாஸ்கரை கைது செய்தனர். 
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

No comments:

Post a Comment