தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கென ப்ரத்யேக 24 மணிநேர தொலைப்பேசி உதவி எண்களை அமல்படுத்தியுள்ளது.
COVID19 - கொரோனா 24x7 உதவி எண் (மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும்) - 18004250111
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில்,
பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள் வாட்ஸ்ஆப் வீடியோ காலிங் கொண்டு செய்கை மொழியில் உரையாடலாம் என்றும், மாற்றுத்திறனாளிகள் கொரோனா தொற்று நோய் பற்றிய தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ய உதவிகள் தேவையெனில் இந்த எண்களை தொடர்புகொண்டு பயன்பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் வீடியோ காலிங் எண் (பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள்) மட்டும்
9700799993
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்
No comments:
Post a Comment