முகப்பு

ஆறு நாட்கள் சிறப்புத் தற்செயல் விடுப்பு: அரசாணை சொல்வது என்ன?

கடந்த 17.03.2020 அன்று, மீன்வளம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத் துறை அமைச்சரான மாண்புமிகு ஜெயக்குமார் அவர்கள் சட்டமன்றத்தில் ஓர் முக்கிய அறிவிப்பினைச் செய்தார். அதன்படி,
சிறப்புத் தேவைகள் கோருகிற குழந்தைகளின்  (children with special needs) பெற்றோர் அரசு ஊழியராக இருந்தால், அவர்களுக்கு அரசு ஊழியர்களின் அடிப்படை விதி 85 ன் கீழ் ஓராண்டில் வழக்கமாக வழங்கப்படும் 12 நாட்கள் தற்செயல் விடுப்போடு மேலும் ஆறு நாட்கள் சிறப்புத் தற்செயல் விடுப்பு (special casual leave) வழங்கப்படும்.

நடுவண் அரசால் இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 (RPD act 2016) பிரிவு 49 ல் வரையறுக்கபட்டுள்ளபடி, உரிய அதிகாரியிடம் தனது குழந்தை அன்றாடத் தேவைகளுக்காகப் பிறரின் உதவி தேவைப்படும் சிறப்புத் தேவையுடைய குழந்தை என்கிற சான்றிதழைப் பெறுவது கட்டாயமாகும். இதற்காக அடிப்படை விதிகள் 85ல் உரிய திருத்தங்கள் பின்னர் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணையைப் பார்க்க மற்றும் பதிவிறக்க
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

No comments:

Post a Comment