முகப்பு

தலைமைச்செயலரோடு பேச்சு வார்த்தை: - முடிவுக்கு வந்தது போராட்டம்:

graphic தலைமைச்செயலர்
 “மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 ஐ முறையாக அமல்படுத்திட, சிறப்பு ஆணையரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சுமார் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற கோட்டை முற்றுகைப் போராட்டம் தலைமைச்செயலரின் சுமூகமான பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவுக்கு வந்தது.
graphic போராடும் மாற்றுத்திறனாளிகள்
graphic கைதாகும் மாற்றுத்திறனாளிகள்
graphic போராட்டம்
   கடந்த 29.ஆகஸ்ட்.2019 அன்று நடைபெற்ற போராட்டமும் அதற்குப் பிறகான கைது நடவடிக்கைகள் குறித்து பல பத்திரிக்கைகளிலும் செய்திகள் வெளிவந்துள்ளன.
  graphic தினகரன்
graphic டைம்ஸ் ஆஃப் இந்தியா
கோட்டையை முற்றுகையிடச் சென்ற மாற்றுத்திறனாளிகளை இடைமறித்துக் கைது செய்த காவல்த்துறையினர் அவர்களை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் அடைத்துவைத்தனர்.
அன்றைய இரவே தலைமைச்செயலர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இனிமேல் மாற்றுத்திறனாளிகளோடு தானே நேரடியாகப் பேசுவேன் என்ற உறுதியை அளித்ததோடு, கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் வாக்குறிதியளித்தார். தலைமைச்செயலரின் சுமூகமான அணுகுமுறையைக் கருத்தில்கொண்டு, போராட்டம் தற்காளிகமாக திரும்பப் பெரப்பட்டது.
graphic மனித உரிமைகள் ஆணையத்தின் கடிதம்
இதனிடையே, மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன்வந்து மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுமாறு தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்குநாமே ஊடகம்

No comments:

Post a Comment