முகப்பு

Showing posts with label agitation. Show all posts
Showing posts with label agitation. Show all posts

Blind Community Coordinating Committee

pamphlets
pamphlets                           


Last week, on 11th July 2022 to be exact, more than 150 self-employed blind people, not belonging to any popular organization, have come together and staged a protest at the premises of State Commissioner for the Welfare of Differently abled persons Tamilnadu. The primary objective of the protest is to oppose the government's refusal to recognize the blind people with more than 80 percent disability as severely disabled and to create a proper understanding of the government in this regard.

They have come together under the name Blind Community Coordinating Committee. Amicable talks have also been held with the newly appointed commissioner.

In the agitation field, they have insisted some of their livelihood grievances such as Blind sellers, traveling from town to town should be exempted from baggage charges in buses for the loads they carry, and withholding old age pension for the blind people saying any reason in many districts should be avoided.

Above all, more than 80 percent of blind people are self-employed. Therefore, they have requested the government to appoint one of the self-employed blind persons as a member of the Disabled Persons Welfare Board and the Disabled Persons Advisory Board, who want to provide adequate advice on the schemes of the government and ensure that the marginally blind people can enjoy its full benefit.

The fact that more than 150 blind people have gathered together and the protest has been going on constructively without any media light or warmth from the leading organizations has given rise to new hopes.

Congratulations! For the Blind Community Coordination Committee.

P. Saravanamanikandan

"பார்வையற்றோர் வங்கிக் கணக்கு வைத்திருப்பது சட்டவிரோதம்" வங்கி மேலாளரின் அராஜகப் பேச்சு, போராட்டம் நடத்தப்போவதாக டாராடாக் அறிவிப்பு

19 ஜூலை, 2020
graphic அஷோக்பாலா என்கிற ஐயப்பன்
அஷோக்பாலா என்கிற ஐயப்பன்
திருவாரூர் மாவட்டம் திருத்தரைப்பூண்டி வட்டம் பாண்டிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அஷோக்பாலா என்கிற ஐயப்பன். பார்வை மாற்றுத்திறனாளியான இவர், தான் கணக்கு வைத்திருக்கும் திருத்தரைப்பூண்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர், தன்னைப் பிற வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், மிகக் கடுமையாகவும், தரக்குறைவாகத் திட்டியதோடு, பார்வையற்றவர்கள் வங்கிக்கணக்கு வைத்திருப்பதே சட்டப்படி தவறு” என கண்டபடி பேசியதாக ஒரு வாட்ஸ் ஆப் குரல்ப்பதிவை வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து, தொடர்புடைய வங்கி மேலாளரின் செயலைக் கண்டித்து, எதிர்வரும் 20.ஜூலை.2020 அன்று அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  
graphic அஷோக்பாலா என்கிற ஐயப்பன்
"திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவை சேர்ந்த அஷோக்பாலா என்கிற ஐயப்பன் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவர் திருத்துறைப்பூண்டி இந்தியன் ஓவர்சீஸ்  வங்கியில் பிரதான் மந்திரி வங்கி கணக்கு திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கியுள்ளார். அந்தக் கணக்கில் ஏடிஎம் மற்றும் பாஸ்புக் எதுவும் கிடையாது. அதனால் பொது சேமிப்பு கணக்கின் கீழ் மாற்றியுள்ளார். இப்போது கணக்கிற்கான ஏடிஎம் கார்ட் பெறுவதற்காக மேனேஜரிடம் மனு கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக்கொண்ட மேனேஜர், 15 நாளில் குறுஞ்செய்தி அதாவது எஸ்எம்எஸ் வரும் என்று கூறியுள்ளார், மேற்படி 20 நாள் ஆகியும் எஸ்எம்எஸ் வராத காரணத்தினால் மேனேஜரை அணுகியுள்ளார். அதற்கு மேனேஜர், “ஒரு பார்வையற்றவருக்கு எதற்கு ஏடிஎம்? நீ அக்கவுண்ட் ஓபன் பண்ண கூடாது, இது சட்டப்படி தவறு, உன்னால் எப்படி கையெழுத்து இடமுடியும்?” என்று மிகவும் தரக்குறைவாக மற்றும் கண்ணியமற்ற முறையில் பேசியுள்ளார். இதற்கு மாற்றுத்திறனாளியான ஐயப்பன், “நான் செய்தது என்ன தேசவிரோத குற்றமா?” என்று கேட்டுள்ளார். இதனால் மிகுந்த கோபம் அடைந்த மேனேஜர் மற்றும் அங்கு இருந்த வங்கி அதிகாரிகளும் “வங்கியை விட்டு வெளியே செல்” என்று மிகவும் தரக்குறைவாக அவரை மரியாதையற்ற முறையில் நடத்தியுள்ளனர்.
இதனால் அம் மாற்றுத்திறனாளி மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார்.
மேனேஜர் மற்றும் அங்குள்ள வங்கி அதிகாரிகளின் அதிகாரப் போக்கு மற்றும் அத்து மீறல்களை கண்டித்து
 20 /7/2020 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நல சங்கத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

திருத்தத்திற்கெதிரான தமிழகத்தின் குரல்கள்; திரட்டும் முயற்சியில் பேரவை

7 ஜூலை, 2020
graphic Zoom
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 அத்தியாயம் 16ல் பிரிவு 89, 92 மற்றும் 93 ஆகியவற்றில் நடுவண் அரசு சில திருத்தங்களைச் செய்ய முடிவெடுத்துள்ளது. அந்த திருத்தங்கள் எவை, அரசின் முடிவை மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு எதிர்கொள்வது போன்ற விவாதங்களை முன்னெடுக்கிற முதல் களமாய் அமைந்தது பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவையின் ஜூம் வழிக் கருத்தரங்கு. அந்த நிகழ்வின் சில துளிகள் இங்கே.
“எல்லாச் சட்டங்களும், அவற்றை மேம்படுத்தும் பொருட்டு திருத்தப்படும். நமது ஊனமுற்றோருக்கான உரிமைகள் சட்டம் 2016 மட்டும்தான் நீர்த்துப் போவதற்கென்றே திருத்தப்படுகிறது.”
திருமதி. முத்துச்செல்வி பாண்டியராஜன்
துணைத்தலைவர்; அகில இந்திய பார்வையற்றோர் சம்மேளனம்.
"இந்தச் சட்டத்தால் நாம் உரிமைகளைப் பெற்றோம் என்று சொல்ல முடியாது. ஆனால், உரிமைகளை வலியுறுத்திப் பெறுகிற வாய்ப்பினையாவது வழங்கியது இந்தச் சட்டம். அதற்குள்ளாகவே திருத்தம் என்பது வேடிக்கையாக உள்ளது."
முனைவர். முருகானந்தம்
பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவை
“இருக்கிற இந்தச் சட்டத்திலேயே எதுவுமில்லை. இதை ஏன் திருத்த வேண்டும். ஒட்டுமொத்தமாக இல்லாமல் செய்துவிடுங்கள்.”
பேராசிரியர் சிவக்குமார்
வழக்கறிஞர் பிரிவு; பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்
“ஒரு சட்டம் யாருக்காக இயற்றப்பட்டதோ அவர்களை அது வலுப்படுத்துகிறதா அல்லது அரசை வலுப்படுத்துகிறதா எனப் பார்க்க வேண்டும். இந்த ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 அரசைத்தான் வலுப்படுத்துகிறது."
பேராசிரியர் தீபக்நாதன்
டிசம்பர் 3 இயக்கம்
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

பன்மடங்கு அதிகரித்து வரும் கொரோனா பேரபாயம் காரணமாக ஜுன் -10 காலவரையற்ற போராட்டம் ஒத்திவைப்பு

graphic போராட்டம்
கரோனா பேரிடர் கால ஊரடங்கின்போது பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு ரூ. 5000 நிவாரணமாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று ஜூன் 10 முதல் மாற்றுத்திறனாளி உரிமைகள் கூட்டு இயக்கத்தால் அறிவிக்கப்பட்ட காலவரையற்ற போராட்டம், பன்மடங்காகப் பெருகிவரும் கரோனா தொற்று காரணமாகக் கைவிடப்படுவதாக கூட்டு இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், " கொரோனா பேரிடர் ஊரடங்கு நிவாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மாதம் . ரூ .5000 / - வழங்க வேண்டுமென்ற நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி ஜுன் -10 முதல் கோரிக்கை நிறைவேறும் வரை மாநிலம் தழுவிய அளவில் காலவரையற்ற போராட்டம் நடத்த மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் ஜுன் -2 அன்று அறிவித்திருந்தது .
இந்நிலையில் , போராட்டம் அறிவித்த நாள் முதல் , கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்புகளும் , உயிரிழப்புகளும் பன்மடங்கு தொடர்ந்து அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி , மருத்துவத்துறையினரும் , மாற்றுத்திறனாளிகள் மீது நல்லெண்ணம் கொண்ட சமூக , ஜனநாயக சக்திகளும் , ஆர்வலர்களும் , பேரபாயம் காரணமாக போராட்டத்தை ஒத்தி வைக்குமாறு எமது கூட்டு இயக்கத்துக்கு வேண்டுகோள் வைத்து வருகின்றனர் .
இந்த வேண்டுகோள்களை கணக்கில் கொண்டு போராட்டத்தை ஒத்தி வைக்க மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டியக்கம் இன்று ஜுன் -9 மாலை நடந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளதை இதன் மூலம் அறிவிக்கின்றோம் .
அதே நேரத்தில் , நீடிக்கும் கொரோனா பேரிடர் ஊரடங்கு காரணமாக அல்லல் படும் மாற்றுத்திறனாளிகளின் துயர் துடைக்க தமிழக அரசு மாதம் ரூ .5000 / - வழங்க மீண்டும் எமது கூட்டியக்கம் வலியுறுத்துகிறது . இந்தக் கோரிக்கையை அனைத்து ஜனநாயக சக்திகளும் வலியுறுத்த வேண்டுமென நமது கூட்டியக்கம் வலியுறுத்துகிறது .
தற்போதைக்கும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் நடத்திட மாற்றுத்திறனாளிகளையும் , ஆர்வலர்களையும் எமது கூட்டியக்கம் வேண்டுகோள் வைக்கிறது . கொரோனா பேரிடர் அபாயம் நீங்கியவுடன் , களத்திற்கு வந்துப் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் ." என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு கால நிவாரணம் மாதம் ரூ.5000/- ஜுன்-10 முதல் கோரிக்கை நிறைவேறும் வரை மாநிலம் முழுவதும் போராட்டம்! மாற்றுத்திறனாளிகள் கூட்டு இயக்கம் அறிக்கை

graphic மாற்றுத்திறனாளிகள் கூட்டு இயக்கம் அறிக்கை
 மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு காலத்தில் குறைந்தபட்சம் ரூ. 5000 வழங்க வேண்டுமென வலியுறுத்தி, கோரிக்கை நிறைவேறும்வரை காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டு இயக்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
"கொரோனா பேரிடர் ஊரடங்கு 5 - வது முறையாக ஜுன் -30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் எவ்வளவு காலம் நீட்டிக்கப்படும் என்பதும் தெரியவில்லை. கடந்த இரண்டரை மாதங்களாக ஏற்கனவே கிடைத்து வந்த குறைந்தபட்ச வருவாய்களைக்கூட இழந்து , மாற்றுத்திறனாளிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். மருந்து , மாத்திரை மற்றும் அத்தியாவசிய உபகரணங்கள்கூட வாங்க முடியாமல் மாற்றுத்திறனாளிகளும் , அவர்களின் குடும்பங்களும் துயரத்தில் உள்ளனர். பல்வேறு ஊடகங்களும் இந்த தவிப்புகளை படம்பிடித்துக் காட்டியுள்ளன.

இந்த துயரங்களை துடைக்கவும் , பொருளாதார தேவைகளை ஈடு செய்யவும் , குறைந்தபட்சம் இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதம் தலா ரூ .5000 / - வழங்க வேண்டுமெனக் கோரிக்கை எமது கூட்டு இயக்கம் சார்பில் வைக்கப்பட்டது. மற்றவர்களைவிட மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களுக்கு கூடுதல் செலவு ஆவதை அரசாங்கங்கள் ஈடு செய்ய வேண்டுமென 2007 ஆம் ஆண்டு ஐநா உடன்படிக்கை சுட்டிக்காட்டுவதையும் , பேரிடர் காலங்களில் அரசுகள் சிறப்பு கவனம் செலுத்தி மாற்றுத்திறனாளிகளைப் பாதுகாக்கவும் ஐ.நா. உடன்படிக்கை மற்றும் நமது நாட்டு உரிமைகள் சட்ட சரத்துக்கள் உள்ளதை எல்லாம் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனால் , மாற்றுத்திறனாளிகளின் இந்த கோரிக்கைகளை செவிமடுக்காமல் , உதாசீனப்படுத்தும் வகையிலேயே மத்திய , மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றும் விதங்களிலேயே உண்மைக்கு புறம்பான செய்திகளை தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் பரப்பி வருகின்றன. சென்னை உயர்நீதிமன்றமே இதனை சுட்டிக்காட்டியுள்ளது. அரசின் இந்தப் போக்குகள் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் கடும் அதிருப்தியையும் , கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே , கொரோனா பேரிடர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளை ஈடு செய்ய குறைந்தபட்சம் மாதம் ரூ .5000 / - இந்த ஊரடங்கு காலத்தில் வழங்க வலியுறுத்தி , ஜுன் -10 முதல் சென்னையில் மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையர் அலுவலகம் முன்பாகவும் , மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்கள் முன்பாகவும் கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டங்கள் நடத்தப்படும் என மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் முடிவு செய்துள்ளதை இதன் மூலம் அறிவிக்கின்றோம்." என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவால்முரசு: நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்

"கொரோனா பேரிடர் நிவாரண நிதி குறைந்தபட்சம் ரூ . 5000 வழங்காவிட்டால்... மாற்றுத்திறனாளிகள் போராட்டம் தீவிரமடையும்" தலைவர்கள் எச்சரிக்கை


graphic போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தினர்
 கொரோனா பேரிடர் மற்றும் ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்து தவிக்கும் குடும்பங்களில் இடம்பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க குறைந்தபட்சம் ரூ . 5000 வழங்க வலியுறுத்தி கருப்பு சின்னம் அணிந்து அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டங்கள் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வியாழன் (மே 7, 2020) அன்று நடைபெற்றன. காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் மிரட்டல் மற்றும் அடக்குமுறைகளை மீறி மாநிலம் முழுவதும் சுமார் 400 மையங்களில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் மற்றும் பாலக்கோடு வட்டங்களில் 5 மையங்களில் நடைபெற்ற போராட்டங்களில் மாற்றுத்திறனாளிகளை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
 graphic உடுமலைப்பேட்டையில் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள்
சென்னை கிண்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில தலைவர் பா ஜான்ஸிராணி , என் . சாந்தி பங்கேற்றனர். டிசம்பர் - 3 இயக்க தலைவர் பேரா . தீபக் கலந்துகொண்டு போராட்டத்தை வாழ்த்திப் பேசினார். எழும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுரேந்தர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுச்செயலாளர் எஸ் நம்புராஜன் மாவட்ட செயலாளர் மனோன்மணி பங்கேற்றனர்.
graphic அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போருக்கான நலச்சங்கத்தின் அறிக்கை

மாற்றுத்திறனாளிகள் எளிதில் தொற்றுக்கு ஆளாகக்கூடியவர் என்பதால் சத்தாண உணவு வழங்கி மாற்றுத்திறனாளிகளை அனைத்து அரசாங்கங்களும் இந்த கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்ற வேண்டுமென ஐ . நா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரோஸ் சுட்டிக்காட்டியிருப்பதை சுட்டிக்காட்டிப் பேசிய மாற்றுத்திறனாளி சங்கத் தலைவர்கள் , நமது நாட்டில் சத்தான உணவு வழங்குவது இருக்கட்டும் , வலிப்பு நோய் உள்ளிட்ட உயிர்காக்கும் மருந்துகள் , உபகரணங்கள் வாங்கவாவது அரசுகள் உதவ வேண்டாமா என கேள்வி எழுப்பினர்
2லட்சம் கோடிக்கு மேல் ஆண்டுக்கு வரவு செலவு செய்யும் தமிழக அரசு இந்தப் பேரிடர் காலத்தில் 200கோடி ரூபாய் செலவு செய்து மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்கக் கூடாதா எனவும் வினவினர் . ஹெல்ப்லைன் மூலம் லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்துள்ளதாக சமூகநலத்துறை அமைச்சரும் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் தம்பட்டம் அடிப்பது உண்மைக்கு மாறானது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். பல மாவட்டங்களில் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் வேண்டுகோள் வைப்பதை ஏற்று தற்காலிகமாக இந்தப் போராட்டங்களை ஒத்தி வைக்கிறோம். ஆனால் , மத்திய மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று நிவாரணம் ரூ. 5000 உடன் வழங்காவிட்டால் போராட்டங்கள் இன்னும் தீவிரமாகும் என எச்சரித்தனர்.
 சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

தலைமைச்செயலரோடு பேச்சு வார்த்தை: - முடிவுக்கு வந்தது போராட்டம்:

graphic தலைமைச்செயலர்
 “மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 ஐ முறையாக அமல்படுத்திட, சிறப்பு ஆணையரை நியமிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சுமார் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற கோட்டை முற்றுகைப் போராட்டம் தலைமைச்செயலரின் சுமூகமான பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவுக்கு வந்தது.
graphic போராடும் மாற்றுத்திறனாளிகள்
graphic கைதாகும் மாற்றுத்திறனாளிகள்
graphic போராட்டம்
   கடந்த 29.ஆகஸ்ட்.2019 அன்று நடைபெற்ற போராட்டமும் அதற்குப் பிறகான கைது நடவடிக்கைகள் குறித்து பல பத்திரிக்கைகளிலும் செய்திகள் வெளிவந்துள்ளன.
  graphic தினகரன்
graphic டைம்ஸ் ஆஃப் இந்தியா
கோட்டையை முற்றுகையிடச் சென்ற மாற்றுத்திறனாளிகளை இடைமறித்துக் கைது செய்த காவல்த்துறையினர் அவர்களை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் அடைத்துவைத்தனர்.
அன்றைய இரவே தலைமைச்செயலர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இனிமேல் மாற்றுத்திறனாளிகளோடு தானே நேரடியாகப் பேசுவேன் என்ற உறுதியை அளித்ததோடு, கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் வாக்குறிதியளித்தார். தலைமைச்செயலரின் சுமூகமான அணுகுமுறையைக் கருத்தில்கொண்டு, போராட்டம் தற்காளிகமாக திரும்பப் பெரப்பட்டது.
graphic மனித உரிமைகள் ஆணையத்தின் கடிதம்
இதனிடையே, மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன்வந்து மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுமாறு தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்குநாமே ஊடகம்