முகப்பு

Showing posts with label seminar. Show all posts
Showing posts with label seminar. Show all posts

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான தொடர் பயிற்சி வகுப்புகள்


9 செப்டம்பர், 2020

தொடக்க நாள்: செப்டம்பர் 9:
நேரம்: மாலை 7 மணி முதல் 8 மணி வரை.

அன்பார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி தோழர்களே!
பார்வையற்றோரின் பணிவாய்ப்பை அதிகரிக்க, அதிகமான பார்வை மாற்றுத்திறனாளிகள் போட்டித் தேர்வில் வென்றிட ஒரு சிறிய களத்தை அமைத்துச் செயலாற்ற விரும்புகிறது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம். அதன்படி, போட்டித் தேர்வு எழுத விரும்பும் பார்வை மாற்றுத்திறனாளிகளை ஊக்குவித்து, தேர்வுகள் தொடர்பான பல பரிணாமங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாக, இணைய வழியில் தொடர் பயிற்சி வகுப்புகளைத் தொடங்குகிறது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம். ஏற்கனவே முன்பதிவு செய்துகொண்ட  40 பார்வை மாற்றுத்திறனாளி தேர்வர்கள் இந்தத் தொடர் வகுப்பில் பங்கேற்க உள்ளனர். இவர்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு, ‘Coaching Centre for Competitive Exams by Helenkeller Association’ என்ற வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

தொடக்க நாள் நிகழ்வுகள்:

பயிற்சி வகுப்புகள் அறிமுக உரை – செல்வி. சித்ரா உபகாரம், தலைவர் ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.

போட்டித் தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் தேர்வர்களுக்கான ஊக்க உரை – திரு. பாலநாகேந்திரன் இந்தியக் குடிமைப்பணிகள்.

பல்வேறு போட்டித் தேர்வுகள் குறித்த அறிமுக உரை – செல்வி. ஷியாமலா, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை.

இந்தப் பயிற்சி களத்தில் தன்னார்வமாக வகுப்பெடுக்க முன்வந்த பயிற்றுனர்கள்:

1.       இந்தியப் பொருளாதாரம் மற்றும் அரசியல் – திரு. கோவர்த்தனன், ஆய்வாளர் கைத்தறித்துறை.

2.       அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் – திரு. பத்மநாபன், அறிவியல் அலுவலர் இந்திய உணவுக் கழகம்.

3.       இந்தியப் புவியியல் – திரு. சௌண்டப்பன், ஆய்வாளர் கூட்டுறவுத்துறை.

4.       இந்திய வரலாறு – திரு. செல்வம், உதவியாளர் பள்ளிக்கல்வித்துறை.

5.       நடப்பு நிகழ்வுகள், ஆப்டிடியூட் மற்றும் ரீசனிங் – திரு. பாலநாகேந்திரன், இந்திய குடிமைப்பணிகள்.

6.       பொதுவான ஆங்கிலம் – செல்வி. ஷியாமலா, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை.

நுண்மதி கொள்வோம்,
முன்விதி வெல்வோம்.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்            

சவால்முரசு வழங்கும் ஆசிரியர் தின கொண்டாட்டம்: 'மீண்டும் பள்ளிக்குப் போகலாம்'

1 செப்டம்பர், 2020

savaalmurasu logo with slogan.jpg
இன்று: செப்டம்பர் 1 2020 செவ்வாய்க்கிழமை:
திருச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நீங்களாக, பூவை, தஞ்சை உள்ளிட்ட ஏனைய 9 அரசு சிறப்புப் பள்ளி முன்னால் மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.
Meeting link:
https://us02web.zoom.us/j/88507507045
 Meeting ID: 885 0750 7045
நேரம்: மாலை 5.45 மணி.
தமிழகமெங்கும் உள்ள அன்பார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி தோழர்களே!
ஆசிரியர் தினம் என்றவுடன் நீங்கள் பயின்ற பள்ளியும், உங்களால் மறக்கவே முடியாத ஆசிரியர்களின் நினைவுகளும் உங்களுக்குள் அலைமோதுகின்றனவா?
அப்படியானால், அதைப் பகிர்ந்துகொள்ள வாருங்கள் எங்களின் ஜூம் அரங்கிற்கு.
 english board.png
 குறிப்பு: நிகழ்ச்சி தொடங்கி ஐந்து நிமிடங்களுக்குள், அதாவது 5.50க்குள் இணையும் நபர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் இணைத்துக்கொள்ளப்படுவர்.
அன்மியூட் செய்யும் வாய்ப்பு பங்கேற்பாளர்களிடமே இருக்கும் என்பதால், தயவுகூர்ந்து உங்கள் சூழலை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களைச் சார்ந்ததாகும்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாலரின் வினாக்களுக்கு சுருக்கமாகவும், சுவாரசியமாகவும் பதிலளித்து, சிறப்புப் பள்ளிகளின் சிறப்பை இந்த உலகிற்கு உரத்துச் சொல்வோம் வாருங்கள்.

சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சஞ்கத்தின் மூன்றாவது கருத்தரங்கு

30 ஆகஸ்ட், 2020
graphic மூன்றாவது ஜூம் கருத்தரங்கு
ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் வழங்கும்
மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான கருத்தரங்கு:



மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் அவற்றைப் பெறும் வழிமுறைகளும்:

நாள்: ஆகஸ்ட் 30, 2020 காலை 11:00 மணி
MEETING link:
https://us02web.zoom.us/j/81769213161
Meeting ID: 817 6921 3161

யூட்டூப் நேரலை:
https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public
அன்புடையீர் வணக்கம்!
மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு அமல்ப்படுத்தியுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் யாவை? அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன? இவை குறித்து விளக்குகிறார்கள் சேலம், நாமக்கல் மற்றும் சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள்.
நிகழ்ச்சி நிரல்:
வரவேற்புரை: திருமதி. V. விசித்ரா
செயற்குழு உறுப்பினர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
சிறப்பு அழைப்பாளர்கள் உரை:
திரு. ஸ்ரீநாத்
மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலர் அவர்கள்
சேலம் மாவட்டம்.
திருமதி. ஜான்சி
மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான  நல அலுவலர் அவர்கள்
நாமக்கல் மாவட்டம்.
திரு. சரவணக்குமார்
மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலர் அவர்கள்
சிவகங்கை மாவட்டம்.
திரு. கணேசன்
பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம்
சிவகங்கை மாவட்டம்.
கேள்வி நேரம் ஒருங்கிணைப்பு: திரு. M. ஜெயபாண்டி
செயற்குழு உறுப்பினர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
நன்றி உரை: திரு. D. விஜை ஆனந்த்
செயற்குழு உறுப்பினர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
நிகழ்ச்சி தொகுப்பு: திரு. S. சுரேஷ்குமார்
துணைத்தலைவர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
பங்கேற்றுப் பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.
இணைந்து வழங்குவோர், சவால்முரசு
நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

இளையோருக்கான இரண்டாவது கருத்தரங்கு

18 ஆகஸ்ட், 2020
graphic ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்
 graphic zoom conference
 graphic for school and college students


நினைவூட்டும் பொருட்டு:

இன்னும் ஓரிரு மணி நேரங்களில்,

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் வழங்கும் இளையோருக்கான இணையவழி கருத்தரங்கு:


தலைப்பு: பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்கான கல்வி உதவித்தோகைகள்,
உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள்,
போட்டித் தேர்வு குறித்த வழிகாட்டல்கள்
நாள்: இன்று, Aug 18, 2020 செவ்வாய்க்கிழமை
நேரம்: மாலை நான்கு மணி

Meeting இணைப்பு:
https://us02web.zoom.us/j/86427568221
 
Meeting ID: 864 2756 8221
யூட்டூப் நேரலை:
https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public
 
அன்புள்ள மாணவர்களே!
பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம்? எந்தப் படிப்பு படித்தாலும் செலவாகுமே என்ன செய்வது? கல்லூரியில் படித்துக்கொண்டே போட்டித்தேர்வுகள் எழுதலாமா? ஆம் என்றால், நம் முன்னே இருக்கும் போட்டித்தேர்வு வாய்ப்புகள் என்னென்ன?
உங்கள் மனதைக் குடையும் இந்தக்  கேள்விகளுக்கெல்லாம் விரிவாக விடையளிக்கிறார் வரலாற்றுத்துறையில் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றும் திருச்சியைச் சேர்ந்த திரு. J. அப்துல்ஜாஃபர் (M.A. M.Phil, M.Ed) அவர்கள்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் கணினி அல்லது அலைபேசியில் ஜூம் (zoom) செயலியைத் தரவிறக்கி, மேலே தரப்பட்டுள்ள இணைப்பை ஜூம் வழியாகத் திறந்து, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் நடத்தும் இந்தக் கருத்தரங்கில் திரளாய்ப் பங்கேற்பது மட்டுமே.

மொபைலுக்கான செயலியைப் பதிவிறக்க:
https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings 
கணினிக்கான செயலியைப் பதிவிறக்க:
https://zoom.us/download
 
சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களான திரு. M. ஜெயப்பாண்டி அவர்கள், நிகழ்விற்கான வரவேற்புரை வழங்கி, கேள்வி நேரத்தை ஓருங்கிணைக்க,
திரு. D. விஜய் ஆனந்த் அவர்கள் நன்றி உரை நவில,
இவர்களோடு இணைந்து நிகழ்வைத் தொகுத்து வழங்குகிறார் சங்கத்தின் தலைவர் செல்வி. சித்ரா உபகாரம் அவர்கள்.

நிகழ்வில் பங்கேற்க இயலாதவர்கள் சவால்முரசு யூட்டூப் தளத்தில் நேரலையைக் கண்டு பயன்பெறலாம்.


எதிர்காலம் புதிர் என்ற மனத்தடை களைய,
இளைய சமூகமே எழுந்து வா!

இணைந்து வழங்குவோர் சவால்முரசு:

நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்.



சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்