முகப்பு

Showing posts with label special schools. Show all posts
Showing posts with label special schools. Show all posts

சவால்முரசு வழங்கும் ஆசிரியர் தின கொண்டாட்டம்: 'மீண்டும் பள்ளிக்குப் போகலாம்'

2 [செப்டம்பர், 2020
Meeting link:
https://us02web.zoom.us/j/88507507045
Meeting ID: 885 0750 7045
நேரம்: மாலை 5.45 மணி.
யூட்டூப் நேரலை:
https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public  
இன்று: செப்டம்பர் 2 2020புதன்கிழமை:
 பங்கேற்கும் பள்ளிகள்:
1. இந்தியப் பார்வையற்றோர் சங்கம் (IAB) முன்னால் மாணவர்கள் மட்டும்.
2. T.E.L.C. பார்வையற்றோர் பள்ளி திருப்பத்தூர்
(சிவகங்கை மாவட்டம்) முன்னால் மாணவர்கள் மட்டும்.
3. செயின்ட் ஜோசப் பார்வையற்றோர் பள்ளி பரவை. முன்னால் மாணவர்கள் மட்டும்.
4. C.S.I. பார்வையற்றோர் பள்ளி அயர்னியபுரம் முன்னால் மாணவர்கள் மட்டும்.
5. நேத்ரோதயா பார்வையற்றோர் பள்ளி சென்னை.
 தமிழகமெங்கும் உள்ள அன்பார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி தோழர்களே!
ஆசிரியர் தினம் என்றவுடன் நீங்கள் பயின்ற பள்ளியும், உங்களால் மறக்கவே முடியாத ஆசிரியர்களின் நினைவுகளும் உங்களுக்குள் அலைமோதுகின்றனவா?
அப்படியானால், அதைப் பகிர்ந்துகொள்ள வாருங்கள் எங்களின் ஜூம் அரங்கிற்கு.
குறிப்பு: அன்மியூட் செய்யும் வாய்ப்பு பங்கேற்பாளர்களிடமே இருக்கும் என்பதால், தயவுகூர்ந்து உங்கள் சூழலை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களைச் சார்ந்ததாகும்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாலரின் வினாக்களுக்கு சுருக்கமாகவும், சுவாரசியமாகவும் பதிலளித்து, சிறப்புப் பள்ளிகளின் சிறப்பை இந்த உலகிற்கு உரத்துச் சொல்வோம் வாருங்கள்.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

சவால்முரசு வழங்கும் ஆசிரியர் தின கொண்டாட்டம்: 'மீண்டும் பள்ளிக்குப் போகலாம்'

1 செப்டம்பர், 2020

savaalmurasu logo with slogan.jpg
இன்று: செப்டம்பர் 1 2020 செவ்வாய்க்கிழமை:
திருச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நீங்களாக, பூவை, தஞ்சை உள்ளிட்ட ஏனைய 9 அரசு சிறப்புப் பள்ளி முன்னால் மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.
Meeting link:
https://us02web.zoom.us/j/88507507045
 Meeting ID: 885 0750 7045
நேரம்: மாலை 5.45 மணி.
தமிழகமெங்கும் உள்ள அன்பார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி தோழர்களே!
ஆசிரியர் தினம் என்றவுடன் நீங்கள் பயின்ற பள்ளியும், உங்களால் மறக்கவே முடியாத ஆசிரியர்களின் நினைவுகளும் உங்களுக்குள் அலைமோதுகின்றனவா?
அப்படியானால், அதைப் பகிர்ந்துகொள்ள வாருங்கள் எங்களின் ஜூம் அரங்கிற்கு.
 english board.png
 குறிப்பு: நிகழ்ச்சி தொடங்கி ஐந்து நிமிடங்களுக்குள், அதாவது 5.50க்குள் இணையும் நபர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் இணைத்துக்கொள்ளப்படுவர்.
அன்மியூட் செய்யும் வாய்ப்பு பங்கேற்பாளர்களிடமே இருக்கும் என்பதால், தயவுகூர்ந்து உங்கள் சூழலை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களைச் சார்ந்ததாகும்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாலரின் வினாக்களுக்கு சுருக்கமாகவும், சுவாரசியமாகவும் பதிலளித்து, சிறப்புப் பள்ளிகளின் சிறப்பை இந்த உலகிற்கு உரத்துச் சொல்வோம் வாருங்கள்.

சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

சவால்முரசு வழங்கும் ஆசிரியர் தின கொண்டாட்டம்: 'மீண்டும் பள்ளிக்குப் போகலாம்'

31 ஆகஸ்ட், 2020
Meeting link:
https://us02web.zoom.us/j/88507507045
 Meeting ID: 885 0750 7045
 நாட்கள்: 1 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை முதல்
4 செப்டம்பர் 2020 வெள்ளிக்கிழமை வரை. (நான்கு நாட்கள்)
நேரம்: மாலை 5.45 மணி.

தமிழகமெங்கும் உள்ள அன்பார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி தோழர்களே!
ஆசிரியர் தினம் என்றவுடன் நீங்கள் பயின்ற பள்ளியும், உங்களால் மறக்கவே முடியாத ஆசிரியர்களின் நினைவுகளும் உங்களுக்குள் அலைமோதுகின்றனவா?

 அப்படியானால், அதைப் பகிர்ந்துகொள்ள வாருங்கள் எங்களின் ஜூம் அரங்கிற்கு.

நெகிழ்வும் நிறைவுமாய் நான்கு நாட்கள் நடைபெறும் உரையாடலில்,
தினமும் சில சிறப்புப் பள்ளிகளைத் தெரிந்துகொண்டு,
தெவிட்டாத நினைவடுக்கின் தித்திப்பை திக்கெட்டும் வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

அந்த வகையில், தேதி வாரியாக உரையாடலில் பங்கேற்க வேண்டிய பள்ளிகளின் பட்டியல் இதோ!

நாள்-ஒன்று. செப்டம்பர் 1 செவ்வாய்க்கிழமை:
தமிழகத்தின் அனைத்து அரசு சிறப்புப் பள்ளி முன்னால் மாணவர்கள் மட்டும்.

நாள்-இரண்டு. செப்டம்பர் 2 புதன்கிழமை:

1. இந்தியப் பார்வையற்றோர் சங்கம் (IAB) முன்னால் மாணவர்கள் மட்டும்.
2. T.E.L.C. பார்வையற்றோர் பள்ளி திருப்பத்தூர்
(சிவகங்கை மாவட்டம்) முன்னால் மாணவர்கள் மட்டும்.
3. செயின்ட் ஜோசப் பார்வையற்றோர் பள்ளி பரவை. முன்னால் மாணவர்கள் மட்டும்.
4. C.S.I. பார்வையற்றோர் பள்ளி அயர்னியபுரம் முன்னால் மாணவர்கள் மட்டும்.
5. நேத்ரோதயா பார்வையற்றோர் பள்ளி சென்னை.

நாள்-மூன்று. செப்டம்பர் 3 வியாழக்கிழமை:
1.            C.S.I. பார்வையற்றோர் பள்ளி பாளையங்கோட்டை முன்னால் மாணவர்கள் மட்டும்.
2. I.E.L.C. பார்வையற்றோர் பள்ளி பர்குர் முன்னால் மாணவர்கள் மட்டும்.
3. அமலராகினி பார்வையற்றோர் பள்ளி ஆரணி முன்னால் மாணவர்கள் மட்டும்.
4. சேவா சமாஜம் பார்வையற்றோர் பள்ளி வேலூர் முன்னால் மாணவர்கள் மட்டும்.
5. செயின்ட் லூயிஸ் பார்வையற்றோர் பள்ளி சென்னை முன்னால் மாணவர்கள்.
6. தமிழகமெங்கும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் பயின்ற முன்னால் மாணவர்கள் மட்டும்.

savaalmurasu logo with slogan.jpgநாள்-நான்கு. செப்டம்பர் 4வெள்ளிக்கிழமை:
1.            அரசு மகளிர் பார்வையற்றோர் பள்ளி திருச்சி.
2.            தஞ்சை உள்ளிட்ட இதர அரசு பார்வயற்றோர் பள்ளியில் பயின்ற முன்னால் மாணவிகள் மட்டும்.
3.            சிறுமலர் பார்வையற்றோர் பள்ளி சென்னை முன்னால் மாணவிகள் மட்டும்.
4.            தமிழகமெங்கும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் பயின்ற முன்னால் மாணவிகள் மட்டும்.

வாருங்கள்! காற்றின் வழியே காலத்தால் பின் சென்று,
கற்பித்த ஆசிரியர்களின் கரம் பற்றி, நினைவுத் தாழ்வாரத்தில் சில நிமிடங்கள் செலவிடுவோம்.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

ஆக்கபூர்வ உரையாடலுக்கு அழைக்கிறது சங்கம்

9 ஆகஸ்ட், 2020
graphic கருத்தரங்க அழைப்பிதழ்
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் நடத்தும்
இணையவெளி கருத்தரங்கம்
புதிய கல்விக் கொள்கையில் பார்வையற்றோர் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்
நாள் : இன்று 09.08.2020.
நேரம் : காலை 10. 45 மணி.
இடம் : ஜூம் (Zoom) அரங்கம் / வலையொளி (youtube) நேரலை.
சிறப்பு விருந்தினர்கள் :
கல்வியாளர் எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராஜன் அவர்கள்.
சமூக செயல்பாட்டாளர் ஜெகதீஸ்வரன் அவர்கள்.
கருத்தாளர்கள் :
Mrs. M. முத்துச்செல்வி, துணைத் தலைவர், அகில இந்திய பார்வையற்றோர்
கூட்டமைப்பு (AICB). மேலாளர், இந்தியன் வங்கி.
Ms. திப்தி பாட்டியா, தலைமை நிர்வாக அலுவலர் (CEO), தேசிய
பார்வையற்றோருக்கான சங்கம், தமிழ்நாடு (NAB Tamilnadu).
Dr. T. நடராஜன், மாநில செயற்குழு உறுப்பினர், பார்வையற்ற ஆசிரியர்கள்
சங்கம். உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, திருவாரூர்.
Mr. K.R.P. சரவணமணிகண்டன், மாநில துணைச் செயலர், ஹெலன் கெல்லர்
மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம். தமிழ் பட்டதாரி ஆசிரியர், பார்வையற்றோர் அரசு மேல்நிலைப் பள்ளி, சென்னை.
Dr. K. முருகானந்தன், சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் (Advocacy Committee
Member), பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்.
அமைப்புக்கஉழு உறுப்பினர், பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை.
Zoom Meeting link :
https://us02web.zoom.us/j/84052429610?pwd=QThyTTRuK2tsTzFGZm84ZVVRUG1DUT09
Meeting ID: 840 5242 9610
Passcode: csgab
ஜூம் அரங்கில் இணைய முடியாதவர்கள் csgab info hub வலையொளி (youtube)
நேரலையில் இணையலாம்.
https://www.youtube.com/channel/UCiIerT9kXUyCGVTgK30dfkw
அனைவரும் வருக!
தலைவர்
V. முத்துசாமி.
பொதுச்செயலாளர்
A.மணிக்கண்ணன்.
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்
தொலைபேசி எண் : 044–24348628, 044-48548628.
மின்னஞ்சல் : tncsgab@gmail.com
இணையதளம் : www.csgab.org
நன்றி.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

+2 தேர்வு முடிவுகள் - மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கூடுதல் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க கோரிக்கை

17 ஜூலை, 2020
graphic நம்புராஜன்
நம்புராஜன்
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் சுமார் 2835 மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. இறுதித் தேர்வினை எழுதாத 34 ஆயிரம் மாணவர்களில் எத்தனை மாற்றுத்திறனாளி மாணவர்கள் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
இந்நிலையில், தேர்வு முடிவு வெளியான 520 பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களில் 497 பேரும், 592 செவித்திறன் குறையுடைய மாணவர்களில் 486 மாணவர்களும் வெற்றிபெற்றனர். 983 உடல்ச்சவால் மாற்றுத்திறனாளிகளில் 860 பேர் மற்றும் 740 இதர மாற்றுத்திறனாளிகளில் 664 பேரும் தேர்ச்சி பெற்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 51 பார்வையற்றவர்களும், சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 129 செவித்திறன் குறையுடைய மாணவர்களும் தேர்வெழுதியுள்ளனர்.
அரசு சிறப்புப் பள்ளிகளைப்பொருத்தவரை,பூவிருந்தவல்லி, திருச்சிமற்றும் தஞ்சைப் பார்வைத்திறன் குறையுடையோருக்கான பள்ளிகளில் மாணவர்கள் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல்,தஞ்சை செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளியில் தேர்வெழுதிய  12 மாணவர்களும், தர்மபுரி செவித்திறன் குறையுடையோருக்கான அரசுசிறப்புப் பள்ளியில் 10ல் 9 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மாற்றுத்திறனாளிகளின் கல்வியை மேம்படுத்தும் பொருட்டு சில கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து நேற்று அறிக்கையினை வெளியிட்டது. அந்த அறிக்கையில்,
நேற்று வெளியிடப்பட்ட +2 முடிவுகளின்படி, தேர்வு எழுதியவர்களில் பார்வைத்திறன்-95.58%,  செவித்திறன்-82.09%, உடல்ஊனமுற்றோர்- 89.59 மாணாக்கர்களும் ஏனைய வகை மாற்றுத்திறனாளர்-87.49% என்ற விகிதத்தில் மாணாக்கர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு வாழ்த்துக்களையும், பாடுபட்ட அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். என குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளின் கல்வி மேம்பட அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ø  அரசு இணையதளத்தில் அனைத்துப் பாடங்களையும் யுனிக்கோட் முறையில் டெக்ஸ்டாக பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் மூலம் பார்வைத்திறன் மாணாக்கர்கள் எளிதாகவும் முழுமையாகவும் கற்க வழிவகை செய்ய வேண்டும்.

Ø  தமிழக அரசு வழங்கும் மடிக்கணினியுடன், டெக்ஸ்டில் இருந்து பிரெயில் முறைக்கு மாற்றித்தரும் ‘ஆர்பிட் ரீடர்’ கருவி போன்றவை பார்வைத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்க வேண்டும். பிரெயில் புத்தகங்களை காலதாதமின்றி வழங்க வேண்டும்.

Ø  தற்போது இல்லாத கணிதம் உள்ளிட்ட பாடங்களை, தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி பார்வைத்திறன் மாணாக்கர்கள் படிக்க முடியும் என்பதால், அப்படிப்பட்ட பாடங்களையும் புகுத்த வேண்டும்.

Ø  பொதுப்பள்ளிகளில்  பார்வைத்திறன், செவித்திறன் உள்ளிட்ட அனைத்து மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு  ஒவ்வொரு பாடத்திற்கும் தேவையான உரிய சிறப்பாசிரியர்கள் நியமிக்க வேண்டும். மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு தேவைப்படும் கருவிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும்.

Ø  தற்போது பொதுப்பள்ளிகளில் மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கான போதிய கட்டமைப்பு வசதி இல்லாததால், உயர்நிலை மேல்நிலை கல்விக்காக  சிறப்பு பள்ளிகளுக்கும் மாற்றுத்திறன் மாணாக்கர்கள் அதிக அளவில் வருகின்றனர்.  எனவே, சிறப்பு பள்ளிகளில் சிறப்பாசிரியர்களை தேவைக்கேற்ப கூடுதலாக நியமிக்க வேண்டும்.

Ø  பார்வைத்திறன் மாணாக்கர்களுக்கு பார்வைத்திறன் ஆசிரியர்களையும், செவித்திறன் மாணாக்கர்களுக்கு செவித்திறன் ஆசிரியர்களையும் கூடுதலாக நியமிப்பது பயன்படும்.

இவைகள் எல்லாம் மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு சட்டபூர்வ உரிமை என்பதை உணர்ந்து பள்ளிக்கல்வித்துறையும், தமிழக அரசும் செயலாற்ற வேண்டும்.

                                           (பா. ஜான்ஸிராணி) தலைவர்                                            
(எஸ். நம்புராஜன் பொதுச்செயலாளர்
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

600க்கு 571, "ஐஏஎஸ் எனது வாழ்நாள் கனவு" அடித்துச் சொல்கிறார் காவியா


16 ஜூலை, 2020
graphic பிரெயில் படித்தபடி மாணவி காவியா
மாணவி காவியா
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கிவருகிறது திருச்சி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இன்று வெளியான பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அந்தப் பள்ளி நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது.
அந்தப் பள்ளியில் தங்கிப்பன்னிரண்டாம் வகுப்பு படித்த  நாமக்கல் மாவட்டம் குமாரபாளயத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகள் காவியா 600 மதிப்பெண்களுக்கு  571 மதிப்பெண்கள் எடுத்து சாதனைபடைத்துள்ளார். ஆறு பாடங்களிலுமே தொன்னூறுக்கு மேல் பெற்றுள்ள காவியா, தமிழில் 98, வரலாறு 99 மற்றும் அரசியல் அறிவியலில் 97 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இத்தனைக்கும் அரசியல் அறிவியல் பாடத்திற்கு கடந்த நவம்பர் மாதத்தில்தான் முறையாக ஆசிரியர் நியமிக்கப்பட்டா.
காவியாவைத் தொடர்புகொண்டு பேசினோம். “ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஐஏஎஸ் ஆகனுங்கிறது என்னோட வாழ்நாள் கனவு. சென்னையில நல்ல கல்லூரில சேர்ந்து இளங்கலை வரலாறு படிக்கப்போறேன்” என்றவரிடம், ஆசிரியர்கள் உங்களை எப்படி ஊக்கப்படுத்தினார்கள் என்று கேட்டால், “நிறைய உற்சாகம் கொடுத்தாங்க. அதேநேரத்தில, பொருளியல் போன்ற முக்கியமான பாடங்களுக்கு டீச்சர் இல்லைங்கிறதும் ஒரு குறையா இருந்துச்சு. நாங்க ரொம்ப ஆர்வமா எதிர்பார்த்த மடிக்கணினியும் வரல. இந்த ஆண்டாவது எனக்கு அரசுகிட்ட இருந்து மடிக்கணினி கிடைச்சா, அது என் காலேஜ் படிப்புக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்" என்கிறார் நம்பிக்கையோடு.
அந்த மாணவியின் கனவு நிறைவேற, வாசகர்களோடு இணைந்து சவால்முரசு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
 சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்