முகப்பு

Showing posts with label differently abled department. Show all posts
Showing posts with label differently abled department. Show all posts

ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சஞ்கத்தின் மூன்றாவது கருத்தரங்கு

30 ஆகஸ்ட், 2020
graphic மூன்றாவது ஜூம் கருத்தரங்கு
ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் வழங்கும்
மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான கருத்தரங்கு:



மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் அவற்றைப் பெறும் வழிமுறைகளும்:

நாள்: ஆகஸ்ட் 30, 2020 காலை 11:00 மணி
MEETING link:
https://us02web.zoom.us/j/81769213161
Meeting ID: 817 6921 3161

யூட்டூப் நேரலை:
https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public
அன்புடையீர் வணக்கம்!
மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு அமல்ப்படுத்தியுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் யாவை? அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன? இவை குறித்து விளக்குகிறார்கள் சேலம், நாமக்கல் மற்றும் சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள்.
நிகழ்ச்சி நிரல்:
வரவேற்புரை: திருமதி. V. விசித்ரா
செயற்குழு உறுப்பினர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
சிறப்பு அழைப்பாளர்கள் உரை:
திரு. ஸ்ரீநாத்
மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலர் அவர்கள்
சேலம் மாவட்டம்.
திருமதி. ஜான்சி
மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான  நல அலுவலர் அவர்கள்
நாமக்கல் மாவட்டம்.
திரு. சரவணக்குமார்
மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலர் அவர்கள்
சிவகங்கை மாவட்டம்.
திரு. கணேசன்
பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம்
சிவகங்கை மாவட்டம்.
கேள்வி நேரம் ஒருங்கிணைப்பு: திரு. M. ஜெயபாண்டி
செயற்குழு உறுப்பினர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
நன்றி உரை: திரு. D. விஜை ஆனந்த்
செயற்குழு உறுப்பினர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
நிகழ்ச்சி தொகுப்பு: திரு. S. சுரேஷ்குமார்
துணைத்தலைவர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
பங்கேற்றுப் பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.
இணைந்து வழங்குவோர், சவால்முரசு
நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

எல்லோரும் இணைவோம், இடுக்கண் களைவோம்!

26 ஜூலை, 2020
graphic ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் லோகோ
அன்புள்ள மாற்றுத்திறனாளிகள் நல விரும்பிகளே!
இன்னும் சில மணிநேரங்களில் தொடங்கவிருக்கிற, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் முதல் இணையவழி கருத்தரங்கிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
தலைப்பு: ‘கரோனா பேரிடருக்குப் பிறகான, பார்வை மாற்றுத்திறனாளிகளின் சிக்கல்களும் அதன் தீர்வுகளும்’
நாள்: இன்று, (ஜூலை  26, 2020  ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை பதினோரு மணி
இடம்: சூம் (zoom) அரங்கம்.
Meetingஇணைப்பு:
https://us02web.zoom.us/j/89012128318
 
Meeting ID: 890 1212 8318

graphic zoom
வணக்கம்!
தனியாள் இடைவெளி என்கிற பதம் கரோனா பேரிடர் காலத்திலும், பேரிடருக்குப் பின்னான நாட்களிலும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் அன்றாடத்தில், அதிலும் குறிப்பாக சுயதொழில் மற்றும் வணிகம் செய்யும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்முறையில் ஏற்படுத்தப்போகிற எதிர்த் தாக்கங்கள், பாதிப்புகள் யாவை?
அவற்றிற்கான தீர்வுகள்தான் என்ன?
அவர்களிடமே கேட்போம், நமக்குத் தோன்றுவதையும் தீர்வாக முன்வைப்போம்.

முன்னிலை: உயர்திரு. ஜானி டாம் வர்கிஸ் இ.ஆ.ப.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள்
மற்றும்
துறை அலுவலர்கள்.

வரவேற்புரை: செல்வி U. [சித்ரா
தலைவர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்

கரோனா பேரிடர் காலத்தில் நமக்கு நாமே:
தொகுப்புரை: ரா. பாலகணேசன்
ஆசிரியர், விரல்மொழியர் மின்னிதழ்

களத்தில் கண்டதும் முன் வைக்கும் கோரிக்கைகளும்:
அனுபவ உரை: சுய தொழில் மற்றும் வணிகம் செய்யும் பார்வை மாற்றுத்திறனாளிகளான திரு. சு. கொலஞ்சிநாதன், திருமதி. தா. கஸ்தூரி மற்றும் திரு. க. செல்லமுத்து.

பேரிடரின் பிந்தைய பாதிப்புகளும் அதன் தீர்வுகளும்:

அழைப்பாளர்கள் உரை:
திரு. T. முத்துச்சாமி M.A.B.Ed
தலைவர், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்.

திரு. A. ரமேஷ் பட்டதாரி ஆசிரியர்
மாநிலப் பொதுச்செயலாளர், பார்வையற்றோர் ஆசிரியர் சங்கம்.

திருமதி. முத்துச்செல்வி பாண்டியராஜன்
துணைத்தலைவர், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு.

திரு. முனைவர் கு. முருகானந்தன்
ஒருங்கிணைப்பாளர்: பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை.

திரு. சங்கர்
மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நுட்ப ஆலோசகர்.

முன்னிலை உரை: உயர்திரு. ஜானி டாம் வர்கிஸ் இ.ஆ.ப.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள்.

நன்றி உரை: திரு. S. [சுரேஷ்குமார்
துணைத்தலைவர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.

நிகழ்ச்சி தொகுப்பு: திரு. ப. சரவணமணிகண்டன்
இணைச்செயலர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.

வாருங்கள்!
எல்லோரும் இணைவோம், இடுக்கண் களைவோம்.

இணைந்து வழங்குவோர்,
சவால்முரசு: ‘நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்’

குறிப்பு: கருத்தரங்கில் இணைய இயலாதவர்கள், எங்கள் சவால்முரசு யூட்டூப் தளத்தில் நேரலையைக் காணலாம். அதற்கான இணைப்பு நிகழ்வு தொடங்கும் தருணத்தில் பகிரப்படும்.
 சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

நன்றிகளும் வாழ்த்துகளும்


9 ஜூலை, 2020
graphic சித்ரா உபகாரம்
ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 அத்தியாயம் 16ல் பிரிவு 89, 92, 93 ஆகிய பிரிவுகளின்கீழ் மேற்கொள்ளவிருந்த சட்ட திருத்த நடவடிக்கையினைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது நடுவண் அரசு.
கரோனாவுக்குப் பின்னான காலகட்டத்தில், நாட்டின் தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்கும்பொருட்டு, நடுவண் அரசால் இயற்றப்பட்ட 19 சட்டங்களில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்தது நடுவண் அரசு. அதன்படி, ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின் உயிர்ப்பாகமான ‘குற்றமும் தண்டனைகளும்’ என்கிற 16ஆம் அத்தியாயத்தின் பிரிவுகளான 89, 92, 93 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராகப் பல்வேறு வகைகளில் இழைக்கப்படும் குற்றங்களுக்கான தண்டனைகளை குறைப்பதோடு, அவற்றின் விசாரணை நடைமுறைகளிலும் பல்வேறு மாற்றங்களைப் பரிந்துரைத்தது நடுவண் அரசு.
இது தொடர்பாக திருத்தத்தின் மீதான கருத்துக் கேட்பு என்கிற சம்பிரதாய நடவடிக்கைக்காக ஏழு மாற்றுத்திறனாளி அமைப்புகளுக்கு மட்டும் ஊனமுற்றோருக்கான அதிகாரமளித்தல் துறையால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. மிகக் குறுகிய கால அவகாசத்தை வழங்கும் வகையில், ஜூலை 10ஆம் தேதிக்குள் இந்த திருத்தங்களின் மீதான தங்களின் கருத்துகளைத் தெரிவிக்குமாறு அதில் கூறப்பட்டிருந்தது. நடுவண் அரசின் பரிந்துரையைக் கடுமையாக எதிர்த்த NCPED பிற அமைப்புகளின் கருத்துகளைத் திரட்டிடும் நோக்கத்தோடு அந்தக் கடிதத்தை வெளியிட்டது. கடிதம் வெளியானது முதலாகவே, பல மாற்றுத்திறனாளி அமைப்புகள் தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வந்தனர். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான மேடை (NPRD) மிகக் காத்திரமான முறையில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்ததோடு, ஏழு அமைப்புகளுக்கு மட்டும் கடிதம் அனுப்பிய நடுவண் அரசின் செயலை வன்மையாகக் கண்டித்திருந்தது.
தமிழகத்தில் இது தொடர்பான கருத்து கேட்பு மற்றும் கலந்துரையாடலை கடந்த 6.ஜூலை.2020 அன்று ஜூம் வாயிலாக முன்னெடுத்தது தமிழ்நாடு பார்வையற்றோர் முற்போக்கு சிந்ந்தனையாளர் பேரவை. அத்தோடு, மாநிலத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பினையும் ஒன்று திரட்டும் முயற்சியாக, திருத்தங்களுக்கு எதிரான வரைவினைத் தயாரித்தது. இந்த சட்டப் பிரிவு குறித்தும், நடுவண் அரசு மேற்கொள்ள விரும்புகிற திருத்தங்கள் குறித்தும் சட்ட திருத்தம் இல்லை, நீதித் திரிப்பு  என்ற தலைப்பில் சவால்முரசு மின்னிதழில், கடந்த 5.ஜூலை.2020 அன்று விரிவான கட்டுரையும் வெளியானது. இந்நிலையில், ஊனமுற்றோர் அதிகாரமளித்தல் துறையினால் நேற்று (ஜூலை 8) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருத்தங்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கைவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடுவண் அரசின் இந்த அறிவிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்குக் கிடைத்த முக்கியமான வெற்றியாகும். இதற்காகப் போராடிய பல்வேறு அமைப்புகள், தமிழகத்தில்இது தொடர்பான ஆழமான விவாதங்களை முன்னெடுத்த பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவை, ஜூம் கருத்தரங்கில் மட்டுமின்றி, தங்களுக்கு வாய்ப்புக் கிடைத்த தளங்கள் அனைத்திலும் திருத்தம் தொடர்பான புரிதல்களை ஏற்படுத்திய அனைத்திந்திய பார்வையற்றோர் சம்மேளனத்தின் துணைத்தலைவர் திருமதி. முத்துச்செல்வி பாண்டியராஜன், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் திரு. சிவக்குமார், பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவையின் முனைவர் திரு. முருகானந்தன் மற்றும் டிசம்பர் 3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் தீபக்நாதன் ஆகியோருக்கு ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது. மேலும், சமூகவலைதளங்களில் இந்தத் திருத்தங்களுக்கு எதிராக எதிர்வினை ஆற்றிய அத்தனை பேருக்கும்நன்றிகளும் வாழ்த்துகளும்.
வெற்றியைக் கொண்டாடுவோம், விழிப்பினைக் கைவிடாது.
U. சித்ரா உபகாரம்; தலைவர்
ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்
 சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

"மாற்றுத்திறனாளிகளுக்கு யாரும் இல்லை என நினைக்கவேண்டாம்" டிசம்பர் 3 தீபக்நாதன் கொந்தளிப்பு

4 ஜூலை, 2020
graphic சாத்தான்குளம் காவல்த்துறை
மாற்றுத்திறனாளியைத் தாக்கிய காவலர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிசம்பர் 3 இயக்கத்தின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்கள் காவல்த்துறை கண்காணிப்பாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தந்தை மகன் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சாத்தான்குளம் காவல்த்துறையின் அத்துமீறலை உலகமே கண்டித்து வருகிறது. இந்நிலையில், வழக்கில் சிக்கியுள்ள அதே காவலர்கள் சில மாதங்களுக்கு முன்பு, மாற்றுத்திறனாளி ஒருவரையும் கடுமையாகத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இராமநாதபுரத்தைச் செர்ந்த பாதிரியார் தன் குழுவினருடன் மத வழிபாட்டுக் கூடுகைக்காக கடந்த பிப்பரவரி மாதம் தூத்துக்குடி வந்துள்ளார். இந்தக் குழுவினர் கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள் என பொன்னையா என்பவர் கொடுத்த புகாரின்பேரில், ஒன்பது பேரும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து, துணைக்காவல்ஆய்வாளர் ரகுகணேஷ் உள்ளிட்ட காவலர்களால்  கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவில் இருந்த அப்பாதுரை என்ற மாற்றுத்திறனாளியும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
csr.org என்ற லண்டனைச் சேர்ந்த இணையதளம், கடந்த பிப்பரவரி 28ஆம் தேதியன்று இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ஜூனியர்விகடன்,தி நியூஸ் மினிட்  போன்ற ஊடகங்களிலும் கடந்தவாரம் இந்தச் செய்தி வெளியானது. இதனை மேற்கோள் காட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையருக்குக் கடிதம் எழுதியிருந்தார் டிசம்பர் 3 இயக்கத்தின் பொதுச்செயலாளர் திரு. தீபக்நாதன் அவர்கள்.
graphic தீபக்நாதன்
தீபக்நாதன்
திரு. தீபக்நாதனைத் தொடர்புகொண்டு கேட்டோம். “உண்மையில் தாக்கப்பட்ட அப்பாதுரையை எனக்குத் தெரியாது. ஆனால், தாக்கப்பட்டிருப்பது ஒரு மாற்றுத்திறனாளி என்பதால், நாம் குரல்கொடுக்கிறோம். இப்போதுகூட, காவல்த்துறை தனது ஆட்டோவைப் பறிமுதல் செய்துவிட்டதால், ஒரு மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்துவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. கேட்பதற்கு யாருமில்லை என்கிற அலட்சியத்தின் வெளிப்பாடுகள் இவை” என்றார் கொந்தளிப்புடன்.
லத்திகளுக்குத் தெரியாதுதான் அவர் மாற்றுத்திறனாளி என்று. காவலர்களுக்குமா? உண்மையில் லத்திகள் யார்?
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு இணைய வகுப்புகள், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் சுற்றறிக்கை சொல்வது என்ன?



graphic சுற்றறிக்கை
சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள் சிறப்புப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
“மாற்றுத்திறனாளிகளுக்கான நல ஆணையரக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவரும் மாற்றுத்திறனாளிகள் நல அரசு சிறப்புப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் சிறப்புப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி 2020-21 ஆம் கல்வியாண்டில் சிறப்புப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தமது பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை இணைய வழியில் நடைமுறைப்படுத்த ( covid 19 காலங்களில் ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கல்வித் தொலைக்காட்சி செயலி
செயலியைப் பதிவிறக்க படத்தைக் க்லிக் செய்யவஉம்
அதுசமயம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையாக ஒவ்வொரு வகுப்பிற்கும் தனியாக புலனக் குழுக்களை ( Whatsapp Group ) உருவாக்கிட வேண்டும். அக்குழுவில் பள்ளி தலைமையாசிரியர் , வகுப்பு ஆசிரியர் , பாட ஆசிரியர்கள் Admin ஆக கொண்டு வகுப்பு மாணவர்களின் திறன்பேசி எண்கள் உறுப்பினர்களாகக் கொள்ள வேண்டும். மாணவர்கள் பயனுறும் வகையில் , எளிதில் புரியும் வண்ணமாக 15 முதல் 20 நிமிடங்கள் கொண்ட காணொலிகளாக பாடக் கருத்துகள் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பார்வை திறன் குறைவுற்ற மாணவர்களுக்கு ஒலி வடிவிலும் , செவித்திறன் குறைவுற்ற மாணவர்களுக்கு சைகை மற்றும் ஒளி வடிவிலும் பாடம் பதிவேற்றப்பட வேண்டும். மேலும் தமிழக அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி ( Kalvi Tv ) சேனலில் ஒளிபரப்பாகும் பாடங்களையும் , https://e-learn.tnschools.gov.in/welcome  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள | முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்பொருள் சார்ந்த காணொலிகளைக் கண்டு மாணவர்கள் பயன்பெற போதிய அறிவுரையும் வழிகாட்டுதலையும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் கிரமமாக அனைத்து வகுப்பிற்கும் நடைபெறுவதையும் , அனைத்து மாணவர்களும் பங்கேற்று பயன்பெறுவதை உறுதி செய்து தொடர் கண்காணிப்பு செய்து தலைமை ஆசிரியர்கள் அதன் சார்பான அறிக்கையை இயக்ககத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். மேலும் வருங்காலங்களில் zoom , google meet , webinar jam , big blue button போன்ற செயலிகள் மூலம் கற்பித்தல் பணி மேற்கொள்ள ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் ,” இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்