முகப்பு

Showing posts with label cochlear implant. Show all posts
Showing posts with label cochlear implant. Show all posts

"மாற்றுத்திறனாளிகளுக்கு யாரும் இல்லை என நினைக்கவேண்டாம்" டிசம்பர் 3 தீபக்நாதன் கொந்தளிப்பு

4 ஜூலை, 2020
graphic சாத்தான்குளம் காவல்த்துறை
மாற்றுத்திறனாளியைத் தாக்கிய காவலர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிசம்பர் 3 இயக்கத்தின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்கள் காவல்த்துறை கண்காணிப்பாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தந்தை மகன் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சாத்தான்குளம் காவல்த்துறையின் அத்துமீறலை உலகமே கண்டித்து வருகிறது. இந்நிலையில், வழக்கில் சிக்கியுள்ள அதே காவலர்கள் சில மாதங்களுக்கு முன்பு, மாற்றுத்திறனாளி ஒருவரையும் கடுமையாகத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இராமநாதபுரத்தைச் செர்ந்த பாதிரியார் தன் குழுவினருடன் மத வழிபாட்டுக் கூடுகைக்காக கடந்த பிப்பரவரி மாதம் தூத்துக்குடி வந்துள்ளார். இந்தக் குழுவினர் கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள் என பொன்னையா என்பவர் கொடுத்த புகாரின்பேரில், ஒன்பது பேரும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து, துணைக்காவல்ஆய்வாளர் ரகுகணேஷ் உள்ளிட்ட காவலர்களால்  கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவில் இருந்த அப்பாதுரை என்ற மாற்றுத்திறனாளியும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
csr.org என்ற லண்டனைச் சேர்ந்த இணையதளம், கடந்த பிப்பரவரி 28ஆம் தேதியன்று இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ஜூனியர்விகடன்,தி நியூஸ் மினிட்  போன்ற ஊடகங்களிலும் கடந்தவாரம் இந்தச் செய்தி வெளியானது. இதனை மேற்கோள் காட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையருக்குக் கடிதம் எழுதியிருந்தார் டிசம்பர் 3 இயக்கத்தின் பொதுச்செயலாளர் திரு. தீபக்நாதன் அவர்கள்.
graphic தீபக்நாதன்
தீபக்நாதன்
திரு. தீபக்நாதனைத் தொடர்புகொண்டு கேட்டோம். “உண்மையில் தாக்கப்பட்ட அப்பாதுரையை எனக்குத் தெரியாது. ஆனால், தாக்கப்பட்டிருப்பது ஒரு மாற்றுத்திறனாளி என்பதால், நாம் குரல்கொடுக்கிறோம். இப்போதுகூட, காவல்த்துறை தனது ஆட்டோவைப் பறிமுதல் செய்துவிட்டதால், ஒரு மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்துவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. கேட்பதற்கு யாருமில்லை என்கிற அலட்சியத்தின் வெளிப்பாடுகள் இவை” என்றார் கொந்தளிப்புடன்.
லத்திகளுக்குத் தெரியாதுதான் அவர் மாற்றுத்திறனாளி என்று. காவலர்களுக்குமா? உண்மையில் லத்திகள் யார்?
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

“காக்லியர் இம்ப்லாண்ட் அறுவைசிகிச்சை தொடர்பான ஜிஎஸ்டி வரிகளைக் குறைக்க வேண்டும்.” ராகுல் வலியுறுத்தல்.

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

graphic ராகுல்காந்தி

செவித்திறன் குறையுடைய குழந்தைகளுக்கான காக்லியர் இம்ப்லான்ட் (cochlear implant)  அறுவைசிகிச்சைக்கு ஜிஎஸ்டியில் ஐந்து விழுக்காடு வரியும், அதன் உபகரணங்களுக்கு 12 மற்றும் 18 விழுக்காடு வரியும் விதிக்கப்படுவதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் முன்னால் தலைவரான திரு.  ராகுல்காந்தி  கடிதம் எழுதியுள்ளார். மேலும், நாட்டில் 1.26 மில்லியன் பேர் செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுள் பெரும்பாலோர்வறுமைப்பின்னணியைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆகவே, இந்த அறுவைசிகிச்சைக்குவிதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட வேண்டும் என தனது கடிதத்தின்  வாயிலாக ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.