26 ஜூலை, 2020
அன்புள்ள மாற்றுத்திறனாளிகள் நல விரும்பிகளே!
இன்னும் சில மணிநேரங்களில் தொடங்கவிருக்கிற, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் முதல் இணையவழி கருத்தரங்கிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
தலைப்பு: ‘கரோனா பேரிடருக்குப் பிறகான, பார்வை மாற்றுத்திறனாளிகளின் சிக்கல்களும் அதன் தீர்வுகளும்’
நாள்: இன்று, (ஜூலை 26, 2020 ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை பதினோரு மணி
இடம்: சூம் (zoom) அரங்கம்.
Meetingஇணைப்பு:
https://us02web.zoom.us/j/89012128318Meeting ID: 890 1212 8318
வணக்கம்!
தனியாள் இடைவெளி என்கிற பதம் கரோனா பேரிடர் காலத்திலும், பேரிடருக்குப் பின்னான நாட்களிலும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் அன்றாடத்தில், அதிலும் குறிப்பாக சுயதொழில் மற்றும் வணிகம் செய்யும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்முறையில் ஏற்படுத்தப்போகிற எதிர்த் தாக்கங்கள், பாதிப்புகள் யாவை?
அவற்றிற்கான தீர்வுகள்தான் என்ன?
அவர்களிடமே கேட்போம், நமக்குத் தோன்றுவதையும் தீர்வாக முன்வைப்போம்.
முன்னிலை: உயர்திரு. ஜானி டாம் வர்கிஸ் இ.ஆ.ப.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள்
மற்றும்
துறை அலுவலர்கள்.
வரவேற்புரை: செல்வி U. [சித்ரா
தலைவர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்
கரோனா பேரிடர் காலத்தில் நமக்கு நாமே:
தொகுப்புரை: ரா. பாலகணேசன்
ஆசிரியர், விரல்மொழியர் மின்னிதழ்
களத்தில் கண்டதும் முன் வைக்கும் கோரிக்கைகளும்:
அனுபவ உரை: சுய தொழில் மற்றும் வணிகம் செய்யும் பார்வை மாற்றுத்திறனாளிகளான திரு. சு. கொலஞ்சிநாதன், திருமதி. தா. கஸ்தூரி மற்றும் திரு. க. செல்லமுத்து.
பேரிடரின் பிந்தைய பாதிப்புகளும் அதன் தீர்வுகளும்:
அழைப்பாளர்கள் உரை:
திரு. T. முத்துச்சாமி M.A.B.Ed
தலைவர், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்.
திரு. A. ரமேஷ் பட்டதாரி ஆசிரியர்
மாநிலப் பொதுச்செயலாளர், பார்வையற்றோர் ஆசிரியர் சங்கம்.
திருமதி. முத்துச்செல்வி பாண்டியராஜன்
துணைத்தலைவர், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு.
திரு. முனைவர் கு. முருகானந்தன்
ஒருங்கிணைப்பாளர்: பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை.
திரு. சங்கர்
மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நுட்ப ஆலோசகர்.
முன்னிலை உரை: உயர்திரு. ஜானி டாம் வர்கிஸ் இ.ஆ.ப.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள்.
நன்றி உரை: திரு. S. [சுரேஷ்குமார்
துணைத்தலைவர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
நிகழ்ச்சி தொகுப்பு: திரு. ப. சரவணமணிகண்டன்
இணைச்செயலர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
வாருங்கள்!
எல்லோரும் இணைவோம், இடுக்கண் களைவோம்.
இணைந்து வழங்குவோர்,
சவால்முரசு: ‘நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்’
குறிப்பு: கருத்தரங்கில் இணைய இயலாதவர்கள், எங்கள் சவால்முரசு யூட்டூப் தளத்தில் நேரலையைக் காணலாம். அதற்கான இணைப்பு நிகழ்வு தொடங்கும் தருணத்தில் பகிரப்படும்.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்
கண்டிப்பாக கலந்து கொள்கிறேன் தகவலுக்கு நன்றி
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteதரமான அமைப்புகளை ஒருங்கிணைக்கும் உங்களுக்கு வணக்கங்கள்.
அழைப்பிதழ் மிக மிக அருமை நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டாயம் பலருடைய இடுக்கண் களையப்பட வேண்டும். முயற்சிக்கு வாழ்த்துகள்.
ReplyDelete