முகப்பு

Showing posts with label PTFB. Show all posts
Showing posts with label PTFB. Show all posts

ஐந்தாவது கருத்தரங்கிற்கு அழைக்கிறது பேரவை

பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவையின் ஐந்தாவது மாதாந்திர இணையவழிக் கருத்தரங்கம்
இன்று (16 August-2020,  நியாயிரு) காலை 11 மணிக்கு!
இந்தியத் திரைப்படங்களில் பார்வையற்றோர் குறித்த சித்தரிப்புகளின் அரசியல்.
ZOOM இணைப்பு:
https://us02web.zoom.us/j/84865754775
Meeting ID: 848 6575 4775
வணக்கம். பொது சமூகத்தில் ஊனமுற்றோர் குறித்த சரியான புரிதலை ஆழப்படுத்தி, பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் இடையே முற்போக்கு அரசியல், சமூக, பண்பாட்டு கருத்துக்களை விரிவாகக் கொண்டுசெல்வதை இலக்காகக் கொண்டு பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை  செயல்பட்டு வருகிறது. எமது பேரவையின் ஐந்தாவது மாதாந்திர இணையவழிக் கருத்தரங்கம் "இந்தியத் திரைப்படங்களில் பார்வையற்றோர் குறித்த சித்தரிப்புகளின் அரசியல்" என்ற பொருண்மையில் இன்று 16 August 2020 நியாயிரு காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
பார்வையின்மை மற்றும் பார்வையற்றோர் குறித்த சித்தரிப்புகள் பாலிவுட் மற்றும் கோலிவுட் திரைப்படங்களில் எவ்வாறு அமைந்திருக்கின்றன, அத்தகைய சித்தரிப்புகள் வெளிப்படுத்தும் சமூகப் பண்பாட்டு அரசியல் நிலைப்பாடுகள் யாவை போன்றவற்றை ஆழமாக விவாதிக்கும் இக்கருத்தரங்கில், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பின் துணைத்தலைவரும், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியருமான அனில் அநூஜா, ஈரோடு செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்புப்பள்ளி ஆசிரியரும் எழுத்தாளருமான க. செல்வம் ஆகியோர் கருத்தாளர்களாகப் பங்கேற்று உரையாற்றுகின்றனர். தொடர்ந்து பங்கேற்பாளர்களின் உரையாடலும் இடம்பெறுகிறது!
பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவையின் பூபதி வரவேற்பு மற்றும் அறிமுக உரை வழங்க, மகேந்திரன் நன்றியுரை ஆற்றுகிறார், நிகழ்வினை முருகானந்தன் ஒருங்கிணைத்து நெறிப்படுத்துகிறார்.
பார்வையற்றோர் மற்றும் பிற ஊனமுற்றோர் பற்றிய சினிமா ஊடகப் பதிவுகள், திரைப்படங்களின் வழியாகக் கட்டமைக்கப்படும் கருத்தியல்கள், ஊனமுற்றோர் குறித்த சமூகப் பண்பாட்டுச் சித்தரிப்புகள் என சமூக மாற்றத்திலும் ஊனமுற்றோர் நலனிலும் அக்கறை கொண்ட அனைவரையும் இக்கருத்தரங்கில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்!
வாருங்கள், இணய வழியில் சந்திப்போம், சமூக மாற்றத்திற்கான கருத்துப் பரிமாற்றத்தில் நம்மை இணைத்துக்கொள்வோம்! தொடர்புக்கு: ptfb.tn@gmail.com,
9787871008
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

1 ஆகஸ்ட் 2020: இன்றைய முக்கிய நிகழ்வுகள்

நிகழ்வு 1:
தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் வீட்டருகே வறுமையால் தாய், மாற்றுத்திறனாளி மகன் இருவர் தற்கொலை சம்பவம்!

மாற்றுத்திறனாளிகள்உரிமைக்குரல் முகநூல் பக்கத்தில் குடும்பத்தினருடன் நேரடி விவாதம்!



இன்று ஆகஸ்ட் 1, சனிக்கிழமை காலை 11 மணிக்கு.

செவித்திறன் பாதித்த மாற்றுத்திறனாளிகள் காண சைகை மொழியும் உண்டு!

நிகழ்வு 2:
கோவை ஞானி அவர்களுக்கு பார்வையற்றோர் அமைப்புகளின் நினைவேந்தல்
நாள் : 01.08.2020 சனிக் கிழமை.
நேரம் : மாலை 05.45 மணி.
ஜூம் அரங்கில் இணைவதற்கான தொடுப்பு :
https://us02web.zoom.us/j/81210885876?pwd=TUJ3cUllT0drS3N6UmdtRFhUd0F4Zz09
கூட்டத்திற்கான எண் : 812 1088 5876
கடவு எண் : 010820.
ஞானியும் நானும் :
முனைவர் சுகுமாரன், பேராசிரியர் (ஓய்வு) கோயம்புத்தூர்.
இரங்கற்பா : மார்க்சிய சூரியன் மறைந்தது
கவிஞர் முனைவர் கோ. கண்ணன் (குழல்வேந்தன்) தர்மபுரி.
தடைகளைத் தாண்டியச் சின்தனையாளர் ஞானி :
முனைவர் க. ஜெவகர், உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்
கழகம், திருவாரூர்.
இறங்கட்பா : இருளை நோக்கிய ஞானம்
கவிஞர் முனைவர் மு. ரமேசு, உதவிப் பேராசிரியர், ஆடவர் அரசு கலைக் கல்லூரி, சென்னை.
ஞானி என்னும் பேராசான் :
முனைவர் கு. பத்மநாபன், உதவிப் பேராசிரியர், திராவிட பல்கலைக் கழகம், ஆந்திரா.
ஒருங்கினைப்பு
அந்தகக்கவிப் பேரவை.
பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை.
விரல்மொழியர் மின்னிதழ்.
நிகழ்வு 3:
பார்வையற்ற பள்ளி மாணவர்களின் அனுகுதலுக்கு ஏற்ற கணிதம் கற்றல் சார்ந்த இணையவெளி கறுத்தறங்கம்!
தமிழகம் முழுவதும் உள்ள, 3ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான
பள்ளி மாணவர்களுக்கு, கணிதத்தை எளிதில் புரிந்துகொள்வதற்கும்,
கற்றுக்கொள்வதற்கும், ஒரு சிறந்த வாய்ப்பு. கர்ன வித்யா குழுமத்தால்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வறங்கத்தில், கணிதத்தைக் கற்றுக்கொள்வது
குறித்த வழிமுறைகள், விளக்கங்கள், அதற்கான உதவிக்குறிப்புகள்
கற்ப்பிக்கப்படும்.
அறங்கம் நடைபெரும் நாள்: 01/08/2020 [சனிக்கிழமை]
நேரம்: மாளை 4:30 PM முதல் 6:00 PM வரை.
மும்பையைச் சேர்ந்த, பவ்யா ஷா, கணித கற்றல் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து உரையாற்றவுள்ளார்.
இவர் ஒரு பார்வையற்ற STEM ஆர்வலர். அமெரிக்காவின் ஸ்டான்போர்ட்
பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பயில்கிராற். இவர் 97.50 percentile
JEE Mains மற்றும் 90.33% 12ஆம் . வகுப்பில் பெற்றுளார். கணிதத்தையும்
அறிவியலையும் மகிழ்ச்சியாக கற்று வரும் பாவ்யாவை, ஸந்திப்போம் வாரீர்!
ஆர்வமுள்ள பள்ளி மாணவ, மாணவியர், கீழே கொடுக்கப்பட்டுள்ள எண் அல்லது மின்னஞ்சலை தொடர்புகொண்டு, உங்கள் பெயரை பதிவு ஸெய்யவும்.
திரு. ராம்குமார்: 8838990027
kvftrainer7@gmail.com
zoom link
https://benetech.zoom.us/j/97358266031
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

எல்லோரும் இணைவோம், இடுக்கண் களைவோம்!

26 ஜூலை, 2020
graphic ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் லோகோ
அன்புள்ள மாற்றுத்திறனாளிகள் நல விரும்பிகளே!
இன்னும் சில மணிநேரங்களில் தொடங்கவிருக்கிற, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் முதல் இணையவழி கருத்தரங்கிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
தலைப்பு: ‘கரோனா பேரிடருக்குப் பிறகான, பார்வை மாற்றுத்திறனாளிகளின் சிக்கல்களும் அதன் தீர்வுகளும்’
நாள்: இன்று, (ஜூலை  26, 2020  ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை பதினோரு மணி
இடம்: சூம் (zoom) அரங்கம்.
Meetingஇணைப்பு:
https://us02web.zoom.us/j/89012128318
 
Meeting ID: 890 1212 8318

graphic zoom
வணக்கம்!
தனியாள் இடைவெளி என்கிற பதம் கரோனா பேரிடர் காலத்திலும், பேரிடருக்குப் பின்னான நாட்களிலும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் அன்றாடத்தில், அதிலும் குறிப்பாக சுயதொழில் மற்றும் வணிகம் செய்யும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்முறையில் ஏற்படுத்தப்போகிற எதிர்த் தாக்கங்கள், பாதிப்புகள் யாவை?
அவற்றிற்கான தீர்வுகள்தான் என்ன?
அவர்களிடமே கேட்போம், நமக்குத் தோன்றுவதையும் தீர்வாக முன்வைப்போம்.

முன்னிலை: உயர்திரு. ஜானி டாம் வர்கிஸ் இ.ஆ.ப.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள்
மற்றும்
துறை அலுவலர்கள்.

வரவேற்புரை: செல்வி U. [சித்ரா
தலைவர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்

கரோனா பேரிடர் காலத்தில் நமக்கு நாமே:
தொகுப்புரை: ரா. பாலகணேசன்
ஆசிரியர், விரல்மொழியர் மின்னிதழ்

களத்தில் கண்டதும் முன் வைக்கும் கோரிக்கைகளும்:
அனுபவ உரை: சுய தொழில் மற்றும் வணிகம் செய்யும் பார்வை மாற்றுத்திறனாளிகளான திரு. சு. கொலஞ்சிநாதன், திருமதி. தா. கஸ்தூரி மற்றும் திரு. க. செல்லமுத்து.

பேரிடரின் பிந்தைய பாதிப்புகளும் அதன் தீர்வுகளும்:

அழைப்பாளர்கள் உரை:
திரு. T. முத்துச்சாமி M.A.B.Ed
தலைவர், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்.

திரு. A. ரமேஷ் பட்டதாரி ஆசிரியர்
மாநிலப் பொதுச்செயலாளர், பார்வையற்றோர் ஆசிரியர் சங்கம்.

திருமதி. முத்துச்செல்வி பாண்டியராஜன்
துணைத்தலைவர், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு.

திரு. முனைவர் கு. முருகானந்தன்
ஒருங்கிணைப்பாளர்: பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை.

திரு. சங்கர்
மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நுட்ப ஆலோசகர்.

முன்னிலை உரை: உயர்திரு. ஜானி டாம் வர்கிஸ் இ.ஆ.ப.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள்.

நன்றி உரை: திரு. S. [சுரேஷ்குமார்
துணைத்தலைவர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.

நிகழ்ச்சி தொகுப்பு: திரு. ப. சரவணமணிகண்டன்
இணைச்செயலர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.

வாருங்கள்!
எல்லோரும் இணைவோம், இடுக்கண் களைவோம்.

இணைந்து வழங்குவோர்,
சவால்முரசு: ‘நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்’

குறிப்பு: கருத்தரங்கில் இணைய இயலாதவர்கள், எங்கள் சவால்முரசு யூட்டூப் தளத்தில் நேரலையைக் காணலாம். அதற்கான இணைப்பு நிகழ்வு தொடங்கும் தருணத்தில் பகிரப்படும்.
 சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவையின் நான்காவது மாதாந்திர இணையவழிக் கருத்தரங்கம் 19 July-2020, நியாயிரு காலை 11 மணிக்கு!

19 ஜூலை, 2020
graphic zoom
தொலைக்காட்சி ஊடகங்களில் ஊனமுற்றோர் குறித்த பதிவுகள்.Zoom இணைப்பு:
https://us02web.zoom.us/j/83738267875
Meeting ID: 837 3826 7875

வணக்கம். பொது சமூகத்தில் ஊனமுற்றோர் குறித்த சரியான புரிதலை ஆழப்படுத்தி, பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் இடையே முற்போக்கு அரசியல், சமூக, பண்பாட்டு கருத்துக்களை விரிவாகக் கொண்டுசெல்வதை இலக்காகக் கொண்டு பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை  செயல்பட்டு வருகிறது. எமது பேரவையின் நான்காவது மாதாந்திர இணையவழிக் கருத்தரங்கம் "தொலைக்காட்சி ஊடகங்களில் ஊனமுற்றோர் குறித்த பதிவுகள்" என்ற பொருண்மையில் எதிர்வரும் 19 July 2020 நியாயிரு காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
தொலைக்காட்சி ஊடகங்களின் செய்திகள், வர்த்தக நிகழ்ச்சிகள், தொடர்கள் போன்றவற்றில் ஊனமுற்றோர், அதிலும் குறிப்பாக பார்வையற்றோர், எவ்வாறு சித்தரிக்கவும் பிரதிநிதித்துவப் படுத்தவும் படுகிறார்கள், அத்தகைய சித்தரிப்புகளில் வெளிப்படும் சமூகப் பண்பாட்டு பொதுப் புத்தி, பிரதிநிதித்துவ அரசியல், அவற்றின் விளைவுகள் போன்றவற்றை விவாதிக்கும் இந்த மாதக் கருத்தரங்கில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் துணைத்தலைவரும், பக்தவச்சலம் நினைவு மகளீர் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளருமான அரங்க ராஜா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலரும் வலைபக்கங்களில் தொடர்ந்து எழுதி வருபவருமான வினோத் சுப்ரமணியன் ஆகியோர் கருத்தாளர்களாகப் பங்கேற்று உரையாற்றுகின்றனர், பங்கேற்பாளர்களோடு உரையாடுகின்றனர். பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் உ. மகேந்திரன் அறிமுக உரை வழங்க, கு. முருகானந்தன் நன்றியுரை வழங்குகிறார், க. கார்த்திக் கருத்தரங்கை ஒருங்கிணைக்கிறார்
ஊனமுற்றோர் உரிமைய்ச் செயல்பாட்டாளர்கள், பொதுவெளியில் ஊனமுற்றோர் பிரதிநிதித்துவம் குறித்தும்  சமூக மாற்றம் குறித்தும் அக்கறைகொண்டோர், ஊடக அரசியல் குறித்துச் சிந்திப்போர் என அனைவரையும் இக்கருத்தரங்கில் பங்கேற்றுப் பயன்பெறவும் பயனளிக்கவும் அன்புடன் அழைக்கிறோம்!
வாருங்கள், இணய வழியில் சந்திப்போம், சமூக மாற்றத்திற்கான கருத்துப் பரிமாற்றத்தில் நம்மை இணைத்துக்கொள்வோம்! தொடர்புக்கு: ptfb.tn@gmail.com, 9994988516.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

நன்றிகளும் வாழ்த்துகளும்


9 ஜூலை, 2020
graphic சித்ரா உபகாரம்
ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 அத்தியாயம் 16ல் பிரிவு 89, 92, 93 ஆகிய பிரிவுகளின்கீழ் மேற்கொள்ளவிருந்த சட்ட திருத்த நடவடிக்கையினைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது நடுவண் அரசு.
கரோனாவுக்குப் பின்னான காலகட்டத்தில், நாட்டின் தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்கும்பொருட்டு, நடுவண் அரசால் இயற்றப்பட்ட 19 சட்டங்களில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்தது நடுவண் அரசு. அதன்படி, ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின் உயிர்ப்பாகமான ‘குற்றமும் தண்டனைகளும்’ என்கிற 16ஆம் அத்தியாயத்தின் பிரிவுகளான 89, 92, 93 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராகப் பல்வேறு வகைகளில் இழைக்கப்படும் குற்றங்களுக்கான தண்டனைகளை குறைப்பதோடு, அவற்றின் விசாரணை நடைமுறைகளிலும் பல்வேறு மாற்றங்களைப் பரிந்துரைத்தது நடுவண் அரசு.
இது தொடர்பாக திருத்தத்தின் மீதான கருத்துக் கேட்பு என்கிற சம்பிரதாய நடவடிக்கைக்காக ஏழு மாற்றுத்திறனாளி அமைப்புகளுக்கு மட்டும் ஊனமுற்றோருக்கான அதிகாரமளித்தல் துறையால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. மிகக் குறுகிய கால அவகாசத்தை வழங்கும் வகையில், ஜூலை 10ஆம் தேதிக்குள் இந்த திருத்தங்களின் மீதான தங்களின் கருத்துகளைத் தெரிவிக்குமாறு அதில் கூறப்பட்டிருந்தது. நடுவண் அரசின் பரிந்துரையைக் கடுமையாக எதிர்த்த NCPED பிற அமைப்புகளின் கருத்துகளைத் திரட்டிடும் நோக்கத்தோடு அந்தக் கடிதத்தை வெளியிட்டது. கடிதம் வெளியானது முதலாகவே, பல மாற்றுத்திறனாளி அமைப்புகள் தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வந்தனர். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான மேடை (NPRD) மிகக் காத்திரமான முறையில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்ததோடு, ஏழு அமைப்புகளுக்கு மட்டும் கடிதம் அனுப்பிய நடுவண் அரசின் செயலை வன்மையாகக் கண்டித்திருந்தது.
தமிழகத்தில் இது தொடர்பான கருத்து கேட்பு மற்றும் கலந்துரையாடலை கடந்த 6.ஜூலை.2020 அன்று ஜூம் வாயிலாக முன்னெடுத்தது தமிழ்நாடு பார்வையற்றோர் முற்போக்கு சிந்ந்தனையாளர் பேரவை. அத்தோடு, மாநிலத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பினையும் ஒன்று திரட்டும் முயற்சியாக, திருத்தங்களுக்கு எதிரான வரைவினைத் தயாரித்தது. இந்த சட்டப் பிரிவு குறித்தும், நடுவண் அரசு மேற்கொள்ள விரும்புகிற திருத்தங்கள் குறித்தும் சட்ட திருத்தம் இல்லை, நீதித் திரிப்பு  என்ற தலைப்பில் சவால்முரசு மின்னிதழில், கடந்த 5.ஜூலை.2020 அன்று விரிவான கட்டுரையும் வெளியானது. இந்நிலையில், ஊனமுற்றோர் அதிகாரமளித்தல் துறையினால் நேற்று (ஜூலை 8) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருத்தங்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கைவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடுவண் அரசின் இந்த அறிவிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்குக் கிடைத்த முக்கியமான வெற்றியாகும். இதற்காகப் போராடிய பல்வேறு அமைப்புகள், தமிழகத்தில்இது தொடர்பான ஆழமான விவாதங்களை முன்னெடுத்த பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவை, ஜூம் கருத்தரங்கில் மட்டுமின்றி, தங்களுக்கு வாய்ப்புக் கிடைத்த தளங்கள் அனைத்திலும் திருத்தம் தொடர்பான புரிதல்களை ஏற்படுத்திய அனைத்திந்திய பார்வையற்றோர் சம்மேளனத்தின் துணைத்தலைவர் திருமதி. முத்துச்செல்வி பாண்டியராஜன், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் திரு. சிவக்குமார், பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவையின் முனைவர் திரு. முருகானந்தன் மற்றும் டிசம்பர் 3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் தீபக்நாதன் ஆகியோருக்கு ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது. மேலும், சமூகவலைதளங்களில் இந்தத் திருத்தங்களுக்கு எதிராக எதிர்வினை ஆற்றிய அத்தனை பேருக்கும்நன்றிகளும் வாழ்த்துகளும்.
வெற்றியைக் கொண்டாடுவோம், விழிப்பினைக் கைவிடாது.
U. சித்ரா உபகாரம்; தலைவர்
ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்
 சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்