முகப்பு

ஐந்தாவது கருத்தரங்கிற்கு அழைக்கிறது பேரவை

பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவையின் ஐந்தாவது மாதாந்திர இணையவழிக் கருத்தரங்கம்
இன்று (16 August-2020,  நியாயிரு) காலை 11 மணிக்கு!
இந்தியத் திரைப்படங்களில் பார்வையற்றோர் குறித்த சித்தரிப்புகளின் அரசியல்.
ZOOM இணைப்பு:
https://us02web.zoom.us/j/84865754775
Meeting ID: 848 6575 4775
வணக்கம். பொது சமூகத்தில் ஊனமுற்றோர் குறித்த சரியான புரிதலை ஆழப்படுத்தி, பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் இடையே முற்போக்கு அரசியல், சமூக, பண்பாட்டு கருத்துக்களை விரிவாகக் கொண்டுசெல்வதை இலக்காகக் கொண்டு பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை  செயல்பட்டு வருகிறது. எமது பேரவையின் ஐந்தாவது மாதாந்திர இணையவழிக் கருத்தரங்கம் "இந்தியத் திரைப்படங்களில் பார்வையற்றோர் குறித்த சித்தரிப்புகளின் அரசியல்" என்ற பொருண்மையில் இன்று 16 August 2020 நியாயிரு காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
பார்வையின்மை மற்றும் பார்வையற்றோர் குறித்த சித்தரிப்புகள் பாலிவுட் மற்றும் கோலிவுட் திரைப்படங்களில் எவ்வாறு அமைந்திருக்கின்றன, அத்தகைய சித்தரிப்புகள் வெளிப்படுத்தும் சமூகப் பண்பாட்டு அரசியல் நிலைப்பாடுகள் யாவை போன்றவற்றை ஆழமாக விவாதிக்கும் இக்கருத்தரங்கில், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பின் துணைத்தலைவரும், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியருமான அனில் அநூஜா, ஈரோடு செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்புப்பள்ளி ஆசிரியரும் எழுத்தாளருமான க. செல்வம் ஆகியோர் கருத்தாளர்களாகப் பங்கேற்று உரையாற்றுகின்றனர். தொடர்ந்து பங்கேற்பாளர்களின் உரையாடலும் இடம்பெறுகிறது!
பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவையின் பூபதி வரவேற்பு மற்றும் அறிமுக உரை வழங்க, மகேந்திரன் நன்றியுரை ஆற்றுகிறார், நிகழ்வினை முருகானந்தன் ஒருங்கிணைத்து நெறிப்படுத்துகிறார்.
பார்வையற்றோர் மற்றும் பிற ஊனமுற்றோர் பற்றிய சினிமா ஊடகப் பதிவுகள், திரைப்படங்களின் வழியாகக் கட்டமைக்கப்படும் கருத்தியல்கள், ஊனமுற்றோர் குறித்த சமூகப் பண்பாட்டுச் சித்தரிப்புகள் என சமூக மாற்றத்திலும் ஊனமுற்றோர் நலனிலும் அக்கறை கொண்ட அனைவரையும் இக்கருத்தரங்கில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்!
வாருங்கள், இணய வழியில் சந்திப்போம், சமூக மாற்றத்திற்கான கருத்துப் பரிமாற்றத்தில் நம்மை இணைத்துக்கொள்வோம்! தொடர்புக்கு: ptfb.tn@gmail.com,
9787871008
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

No comments:

Post a Comment