18 ஆகஸ்ட், 2020
கணினிக்கான செயலியைப் பதிவிறக்க:
https://zoom.us/download
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்
நினைவூட்டும் பொருட்டு:
இன்னும் ஓரிரு மணி நேரங்களில்,
ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் வழங்கும் இளையோருக்கான இணையவழி கருத்தரங்கு:
தலைப்பு: பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்கான கல்வி உதவித்தோகைகள்,
உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள்,
போட்டித் தேர்வு குறித்த வழிகாட்டல்கள்
நாள்: இன்று, Aug 18, 2020 செவ்வாய்க்கிழமை
நேரம்: மாலை நான்கு மணி
Meeting இணைப்பு:
https://us02web.zoom.us/j/86427568221Meeting ID: 864 2756 8221
யூட்டூப் நேரலை:
https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=publicஅன்புள்ள மாணவர்களே!
பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம்? எந்தப் படிப்பு படித்தாலும் செலவாகுமே என்ன செய்வது? கல்லூரியில் படித்துக்கொண்டே போட்டித்தேர்வுகள் எழுதலாமா? ஆம் என்றால், நம் முன்னே இருக்கும் போட்டித்தேர்வு வாய்ப்புகள் என்னென்ன?
உங்கள் மனதைக் குடையும் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விரிவாக விடையளிக்கிறார் வரலாற்றுத்துறையில் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றும் திருச்சியைச் சேர்ந்த திரு. J. அப்துல்ஜாஃபர் (M.A. M.Phil, M.Ed) அவர்கள்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் கணினி அல்லது அலைபேசியில் ஜூம் (zoom) செயலியைத் தரவிறக்கி, மேலே தரப்பட்டுள்ள இணைப்பை ஜூம் வழியாகத் திறந்து, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் நடத்தும் இந்தக் கருத்தரங்கில் திரளாய்ப் பங்கேற்பது மட்டுமே.
மொபைலுக்கான செயலியைப் பதிவிறக்க:
https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings கணினிக்கான செயலியைப் பதிவிறக்க:
https://zoom.us/download
சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களான திரு. M. ஜெயப்பாண்டி அவர்கள், நிகழ்விற்கான வரவேற்புரை வழங்கி, கேள்வி நேரத்தை ஓருங்கிணைக்க,
திரு. D. விஜய் ஆனந்த் அவர்கள் நன்றி உரை நவில,
இவர்களோடு இணைந்து நிகழ்வைத் தொகுத்து வழங்குகிறார் சங்கத்தின் தலைவர் செல்வி. சித்ரா உபகாரம் அவர்கள்.
நிகழ்வில் பங்கேற்க இயலாதவர்கள் சவால்முரசு யூட்டூப் தளத்தில் நேரலையைக் கண்டு பயன்பெறலாம்.
எதிர்காலம் புதிர் என்ற மனத்தடை களைய,
இளைய சமூகமே எழுந்து வா!
இணைந்து வழங்குவோர் சவால்முரசு:
நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்
No comments:
Post a Comment