முகப்பு

Showing posts with label AICFB. Show all posts
Showing posts with label AICFB. Show all posts

ஐந்தாவது கருத்தரங்கிற்கு அழைக்கிறது பேரவை

பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவையின் ஐந்தாவது மாதாந்திர இணையவழிக் கருத்தரங்கம்
இன்று (16 August-2020,  நியாயிரு) காலை 11 மணிக்கு!
இந்தியத் திரைப்படங்களில் பார்வையற்றோர் குறித்த சித்தரிப்புகளின் அரசியல்.
ZOOM இணைப்பு:
https://us02web.zoom.us/j/84865754775
Meeting ID: 848 6575 4775
வணக்கம். பொது சமூகத்தில் ஊனமுற்றோர் குறித்த சரியான புரிதலை ஆழப்படுத்தி, பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் இடையே முற்போக்கு அரசியல், சமூக, பண்பாட்டு கருத்துக்களை விரிவாகக் கொண்டுசெல்வதை இலக்காகக் கொண்டு பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை  செயல்பட்டு வருகிறது. எமது பேரவையின் ஐந்தாவது மாதாந்திர இணையவழிக் கருத்தரங்கம் "இந்தியத் திரைப்படங்களில் பார்வையற்றோர் குறித்த சித்தரிப்புகளின் அரசியல்" என்ற பொருண்மையில் இன்று 16 August 2020 நியாயிரு காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
பார்வையின்மை மற்றும் பார்வையற்றோர் குறித்த சித்தரிப்புகள் பாலிவுட் மற்றும் கோலிவுட் திரைப்படங்களில் எவ்வாறு அமைந்திருக்கின்றன, அத்தகைய சித்தரிப்புகள் வெளிப்படுத்தும் சமூகப் பண்பாட்டு அரசியல் நிலைப்பாடுகள் யாவை போன்றவற்றை ஆழமாக விவாதிக்கும் இக்கருத்தரங்கில், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பின் துணைத்தலைவரும், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியருமான அனில் அநூஜா, ஈரோடு செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்புப்பள்ளி ஆசிரியரும் எழுத்தாளருமான க. செல்வம் ஆகியோர் கருத்தாளர்களாகப் பங்கேற்று உரையாற்றுகின்றனர். தொடர்ந்து பங்கேற்பாளர்களின் உரையாடலும் இடம்பெறுகிறது!
பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவையின் பூபதி வரவேற்பு மற்றும் அறிமுக உரை வழங்க, மகேந்திரன் நன்றியுரை ஆற்றுகிறார், நிகழ்வினை முருகானந்தன் ஒருங்கிணைத்து நெறிப்படுத்துகிறார்.
பார்வையற்றோர் மற்றும் பிற ஊனமுற்றோர் பற்றிய சினிமா ஊடகப் பதிவுகள், திரைப்படங்களின் வழியாகக் கட்டமைக்கப்படும் கருத்தியல்கள், ஊனமுற்றோர் குறித்த சமூகப் பண்பாட்டுச் சித்தரிப்புகள் என சமூக மாற்றத்திலும் ஊனமுற்றோர் நலனிலும் அக்கறை கொண்ட அனைவரையும் இக்கருத்தரங்கில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்!
வாருங்கள், இணய வழியில் சந்திப்போம், சமூக மாற்றத்திற்கான கருத்துப் பரிமாற்றத்தில் நம்மை இணைத்துக்கொள்வோம்! தொடர்புக்கு: ptfb.tn@gmail.com,
9787871008
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

ஜூம் வழி கருத்தரங்கு: பார்வையின்மையும் மரபுவழி காரணிகளும்



05 ஆகஸ்ட், 2020
graphic AICFB
மரபணு ஆலோசனை என்றால் என்ன?
மரபுவழி தோன்றும் பார்வை குறைபாட்டினை தடுக்க இயலுமா?
எவ்வகை உறவுமுறை திருமணங்கள் பார்வை பாதிப்பை ஏற்படுத்துகின்றன?
பார்வை குறைபாடு உடையவர்களும், உறவுமுறையில் திருமணம் செய்துகொள்பவர்களும் மேற்கொள்ளவேண்டிய மரபணு பரிசோதனைகள் எவை?
பார்வை குறைபாட்டினை ஏற்படுத்தும் இதர காரணிகள் எவை?
இது போன்று தங்களுக்கு எழும் ஐயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள  வாருங்கள் ஜூம் அரங்கிற்கு.
 அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு
(All India Confederation of the Blind)
 மரபணு ஆலோசனை (Genetic Counseling)
இணைய வெளி கருத்தரங்கம்
குறிப்பு : இக்கருத்தரங்கம் தமிழில் மட்டுமே நடத்தப்படும்.
நாள் : 05.08.2020 புதன் கிழமை.
நேரம் : காலை 11.30 மணி.
தலைமை உரை(Presidential Address) :
திரு. A.K. மித்தல் (Mr. A.K. Mittal) தலைவர், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு (President, AICB). பொதுச்செயலாளர் (Secretary General, World Blind Union).
சிறப்பு அழைப்பாளர்கள் (Special Guests) :
Dr. S. ஸ்ரீப்ரியா அவர்கள். முதன்மை விஞ்ஞானி மற்றும் இணைப் பேராசிரியர்  மரபணு துறை சங்கர நேத்ராலயா (Dr S Sripriya,Principal Scientist, Associate Professor, SNONGC department of Genetics and Molecular Biology Vision Research Foundation.  Sankara Nethralaya, Chennai.
Dr. வசந்த கௌரி, கண் மருத்துவர், சென்னை.  (Dr Vasantha Gowri MBBS . DO, FICO (UK)  Consultant Ophthalmic Surgeon. Director, Aadithya eye care and Jupiter Hospital, Perambur, Chennai).
Meeting Link :
https://us02web.zoom.us/j/86901153476?pwd=QmJnVWNhNUxYMjdKMU85NzdONmw3Zz09
Meeting ID: 869 0115 3476
Passcode: 650521.
அரங்கில் இணைய இயலாதவர்கள் யூட்டூபில் நிகழ்வைக் காணலாம்.
https://www.youtube.com/channel/UCXIge-1IQ9jMbErimdLTHnw
ஒருங்கிணைப்பாளர் :
மு. முத்துச்செல்வி
துணைத்தலைவர்
அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு.
செல்பேசி : 9600116996
நன்றி.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

திரைவாசிப்பான்கள் பயன்படுத்தி, சமூக ஊடகங்களைக் கையாள்வது எப்படி?" அறிந்துகொள்ள ஒரு பயிலரங்கு அனைவரும் வாருங்கள்!


24 ஜூலை, 2020
graphic zoom
அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு
(All India Confederation of the Blind)
இணைய வெளி கருத்தரங்கம்
குறிப்பு : இக்கருத்தரங்கம் தமிழில் மட்டுமே நடத்தப்படும்.
பார்வையற்றோரின் உரிமைக் குரலை உடனுக்குடன் ஒலிக்கச் செய்ய இயலுமா?
பார்வையற்றோரின் திறமைகளை இந்த சமுதாயத்தில் பறைசாற்ற முடியுமா? இதுபோன்று தங்களுக்கு எழும் ஐயங்களைத் தெளிவுப்படுத்திக்கொள்ள  24.07.2020
வெள்ளிக் கிழமை காலை 11.00 மணி அளவில்
அகில இந்திய பார்வையற்றோர்
கூட்டமைப்பால்
“திரைவாசிப்பான் மூலம் சமூக ஊடகங்களை கையாளுதல்”
என்ற தலைப்பில் நடத்தப்படும் கருத்தரங்கில் இணையுங்கள்.
graphic AICFB
விவரம் பின்வருமாறு
சிறப்பு அழைப்பாளர் : திரு. மா. நாகராஜன்,
உதவிப் பேராசிரியர் ஆங்கிலம்,
மாநிலக்கல்லூரி, சென்னை.
மத்திய செயற்குழு உறிப்பினர்,
அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு.
graphic முத்துச்செல்வி
Topic: Webinar on handling social media using screen readers (face
book, twitter and youtube)
Time: Jul 24, 2020 10:45 AM India
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/81090764304?pwd=UjBSMG5DRjR3UGc3N3E2YldVOURRUT09
Meeting ID: 810 9076 4304
Passcode: 977767
மேலதிக விவரங்களுக்கு
மு. முத்துச்செல்வி
துணைத்தலைவர்
அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு.
செல்பேசி : 9600116996
மின்னஞ்சல் : muthump2007@gmail.com
நன்றி.
 சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்