9 செப்டம்பர், 2020
தொடக்க நாள்: செப்டம்பர் 9:
நேரம்: மாலை 7 மணி முதல் 8 மணி வரை.
அன்பார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி தோழர்களே!
பார்வையற்றோரின் பணிவாய்ப்பை அதிகரிக்க, அதிகமான பார்வை மாற்றுத்திறனாளிகள் போட்டித் தேர்வில் வென்றிட ஒரு சிறிய களத்தை அமைத்துச் செயலாற்ற விரும்புகிறது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம். அதன்படி, போட்டித் தேர்வு எழுத விரும்பும் பார்வை மாற்றுத்திறனாளிகளை ஊக்குவித்து, தேர்வுகள் தொடர்பான பல பரிணாமங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாக, இணைய வழியில் தொடர் பயிற்சி வகுப்புகளைத் தொடங்குகிறது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம். ஏற்கனவே முன்பதிவு செய்துகொண்ட 40 பார்வை மாற்றுத்திறனாளி தேர்வர்கள் இந்தத் தொடர் வகுப்பில் பங்கேற்க உள்ளனர். இவர்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு, ‘Coaching Centre for Competitive Exams by Helenkeller Association’ என்ற வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
தொடக்க நாள் நிகழ்வுகள்:
பயிற்சி வகுப்புகள் அறிமுக உரை – செல்வி. சித்ரா உபகாரம், தலைவர் ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
போட்டித் தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் தேர்வர்களுக்கான ஊக்க உரை – திரு. பாலநாகேந்திரன் இந்தியக் குடிமைப்பணிகள்.
பல்வேறு போட்டித் தேர்வுகள் குறித்த அறிமுக உரை – செல்வி. ஷியாமலா, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை.
இந்தப் பயிற்சி களத்தில் தன்னார்வமாக வகுப்பெடுக்க முன்வந்த பயிற்றுனர்கள்:
1. இந்தியப் பொருளாதாரம் மற்றும் அரசியல் – திரு. கோவர்த்தனன், ஆய்வாளர் கைத்தறித்துறை.
2. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் – திரு. பத்மநாபன், அறிவியல் அலுவலர் இந்திய உணவுக் கழகம்.
3. இந்தியப் புவியியல் – திரு. சௌண்டப்பன், ஆய்வாளர் கூட்டுறவுத்துறை.
4. இந்திய வரலாறு – திரு. செல்வம், உதவியாளர் பள்ளிக்கல்வித்துறை.
5. நடப்பு நிகழ்வுகள், ஆப்டிடியூட் மற்றும் ரீசனிங் – திரு. பாலநாகேந்திரன், இந்திய குடிமைப்பணிகள்.
6. பொதுவான ஆங்கிலம் – செல்வி. ஷியாமலா, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை.
நுண்மதி கொள்வோம்,
முன்விதி வெல்வோம்.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்
No comments:
Post a Comment