முகப்பு

Showing posts with label differently abled rally. Show all posts
Showing posts with label differently abled rally. Show all posts

பன்மடங்கு அதிகரித்து வரும் கொரோனா பேரபாயம் காரணமாக ஜுன் -10 காலவரையற்ற போராட்டம் ஒத்திவைப்பு

graphic போராட்டம்
கரோனா பேரிடர் கால ஊரடங்கின்போது பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு ரூ. 5000 நிவாரணமாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று ஜூன் 10 முதல் மாற்றுத்திறனாளி உரிமைகள் கூட்டு இயக்கத்தால் அறிவிக்கப்பட்ட காலவரையற்ற போராட்டம், பன்மடங்காகப் பெருகிவரும் கரோனா தொற்று காரணமாகக் கைவிடப்படுவதாக கூட்டு இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், " கொரோனா பேரிடர் ஊரடங்கு நிவாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மாதம் . ரூ .5000 / - வழங்க வேண்டுமென்ற நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி ஜுன் -10 முதல் கோரிக்கை நிறைவேறும் வரை மாநிலம் தழுவிய அளவில் காலவரையற்ற போராட்டம் நடத்த மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் ஜுன் -2 அன்று அறிவித்திருந்தது .
இந்நிலையில் , போராட்டம் அறிவித்த நாள் முதல் , கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்புகளும் , உயிரிழப்புகளும் பன்மடங்கு தொடர்ந்து அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி , மருத்துவத்துறையினரும் , மாற்றுத்திறனாளிகள் மீது நல்லெண்ணம் கொண்ட சமூக , ஜனநாயக சக்திகளும் , ஆர்வலர்களும் , பேரபாயம் காரணமாக போராட்டத்தை ஒத்தி வைக்குமாறு எமது கூட்டு இயக்கத்துக்கு வேண்டுகோள் வைத்து வருகின்றனர் .
இந்த வேண்டுகோள்களை கணக்கில் கொண்டு போராட்டத்தை ஒத்தி வைக்க மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டியக்கம் இன்று ஜுன் -9 மாலை நடந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளதை இதன் மூலம் அறிவிக்கின்றோம் .
அதே நேரத்தில் , நீடிக்கும் கொரோனா பேரிடர் ஊரடங்கு காரணமாக அல்லல் படும் மாற்றுத்திறனாளிகளின் துயர் துடைக்க தமிழக அரசு மாதம் ரூ .5000 / - வழங்க மீண்டும் எமது கூட்டியக்கம் வலியுறுத்துகிறது . இந்தக் கோரிக்கையை அனைத்து ஜனநாயக சக்திகளும் வலியுறுத்த வேண்டுமென நமது கூட்டியக்கம் வலியுறுத்துகிறது .
தற்போதைக்கும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் நடத்திட மாற்றுத்திறனாளிகளையும் , ஆர்வலர்களையும் எமது கூட்டியக்கம் வேண்டுகோள் வைக்கிறது . கொரோனா பேரிடர் அபாயம் நீங்கியவுடன் , களத்திற்கு வந்துப் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் ." என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

அனைவரும் வாரீர், ஆதரவு தாரீர்!

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்
 உயர வளர்ச்சி தடைபட்டோருக்கான உலக தினம்! | 22.10.2019 செவ்வாய் மாலை 3.30 மணி (சைதாப்பேட்டை மெட்ரோ இரயில் நிலையம் அருகில்) = வழிபனவு மனிதச் சங்கிலி அன்புடையீர்.. வணக்கம். உயர வளர்ச்சி தடைபட்போரின் சொல்ல முடியாத துயரங்கள், பாதிப்புகள், அவதிகளை உலக சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் உலக தினமாக அக்-25 பல்வேறு நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது. தமிழக அரச..! மாற்றுத்திறினாளிகள் நலத்துறையே..! > உயர வளர்ச்சி தடைபட்டோரை கடும் ஊனமுற்றோராக அறிவித்து திட்டங்களில் மூன்னுரிமை வழங்குக! கல்வி, வேலை வாய்ப்புகளுக்கான சிறப்பு திட்டங்களை உருவாக்கிடுக! > உயர வளர்ச்சி தடைபட்டோர் வசிக்க ஏற்ற அரசு வீடுகள் கட்டிக் கொடுத்திடுக! மாதாந்திர உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.3000/- ஆக உயர்த்தி வழங்கீடுக! மாவட்ட தலைநகரங்களில் சிறப்பு தங்கும் விடுதிகள் கட்டி பாதுகாத்திடுக! > அரசுப் பேருந்துகளில் மாவட்ட இலவசப் பேருந்துப் பயண பாஸ் வழங்கிடுக! > கேலி, கிண்டல் செய்வதை தடுக்க விழப்புணர்வு பிரச்சாரங்களை நடத்திடுக! தமிழக அரசே.. கோரிக்கைகளை கிடப்பில் போடாதே.. அலட்சியப்படுத்தாதே! என வலியுறுத்தி இந்த ஆண்டு உலக தினத்தை தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை ஒட்டி முன்கூட்டியே அக்-22 அன்று சென்னையில் அனுசரித்திட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. தலைமை: திரு.அப்பு (எ) வெங்கடேசன் முன்னிலை: திரு. M.சிவா திரு.R.கோபிநாத் திரு. B.ராதாகிருஷ்ண ன் 22.10.2019 காலை 10-30 மணிக்கு விழிப்புணர்வு பேரவை கூட்டம் (TARATDAC சங்க அலுவலகம் 69 VGP சாலை சைதாப்பேட்டை சென்னை -15) உயர வளர்ச்சி தடைபட்டோரே! ஓன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றிபெறுவோம்! தமிழ்நாடு அனைத்துவகை உயர வளர்ச்சி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் தடைபட்டோருக்கான உரிமைகளுக்கான சங்கம் (TARTDAC) மாநில சிறப்பு கிளை புது எண்: 89, V.G.P. சாலை, சைதாப்பேட்டை , சென்னை -600 015, போன்: 9841359935 படியுங்கள்... 044-24741384 www.oonam.org taratdac@gmail.com ஊனமுற்றோர் உரிமைக்குரல் NA NAI எலான்ற ஆண்டு சந்தா கு.6ol- pattur idl

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி

graphic சர்க்கர நாற்காலியில் பேரணி செல்லும் மாற்றுத்திறனாளிகள்
நன்றி இந்து தமிழ்த்திசை
அரியலூர்
தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அரியலூரில் நேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி.
அரியலூர்
மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அரியலூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
அரியலூர் அண்ணா சிலை அருகே தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில், 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அப்போது, 100 சதவீதம் வாக்களிப்போம், வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். பேரணி, முக்கிய சாலைகளின் வழியாக சென்று மீண்டும் அண்ணா சிலையில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நா.சத்தியநாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்