மாற்றுத்திறனாளிகள் வழக்கு:
சென்னை:
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வரும் 26ம் தேதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை தியாகராய நகரில் காலேஜ் ஸ்டூடன் அண்ட் கிராஜுவேட் அசோசியேசன் ஆப் தி பிளைண்ட் உள்ளிட்ட சங்கங்களின் சார்பாக மணிக்கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தேசிய தகுதி தேர்வில் (NET) சுமார் 4 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி பெற்றனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு எந்த பணியும் வழங்கவில்லை. அரசு உதவி பெறும் கல்லூரிகளி்ல் மாற்றுத்திறனாளிகளுக்காக 4 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஷேஷசாயி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக உரிய ஆவணங்களுடன் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை செப்டம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனற்.
இது தொடர்பாக பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. அ. மணிக்கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

"ஊனமுற்றோர் சட்டம் 1995 மற்றும் ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் 2016
அமல்படுத்தப்பட்டும், மாற்றுத் திறனாளிகளுக்கான குறிப்பாக
பார்வையற்றோருக்கான ஒரு சதவிகித இட ஒதுக்கீடானது அரசு உதவிப் பெற்று, இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் மறுக்கப்பட்டு வருவது நாம் அனைவரும்் அறிந்ததே.
இந்த உரிமை மீறலை எதிர்த்து நம் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள்
மற்றும் பட்டதாரிகள் சங்கமும், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பும் இணைந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கானது கடந்த ஆகஸ்ட் மாதம் இருபதாம் தேதி பதிவு செய்யப்பட்டு, இன்று (செப்டம்பர் ஆறு) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கை பிரபல
உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், மாற்றுத் திறனாளிகளின் உரிமைக்காக குரல் கொடுப்பவருமான திருமிகு. பிரபாகரன் ஐயா அவர்கள் நம் இரண்டு சங்கங்களின் சார்பில் வாதாடி வருகிறார்.
இவ்வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீடு அமுல்படுத்தியதற்கான அறிக்கையை நான்கு
வாரத்திற்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். மேலும், இந்த நான்கு
சதவிகித இட ஒதுக்கீட்டினை பின்பற்றாத கல்வி நிறுவனங்களுக்கு அரசால் வழங்கப்படும் நிதியினை ரத்து செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று சங்கங்களின் சார்பில் முறையிடப்பட்டுள்ளது."
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்
No comments:
Post a Comment