முகப்பு

நன்றி இந்து தமிழ்த்திசை: உதவித் தொகை கிடைக்காமல் மாற்றுத்திறனாளிகள் அவதி

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்
மு.யுவராஜ் 
சென்னை
ஆணை பெற்று 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் உதவித் தொகை கிடைக்காததால் மாற்றுத்திறனாளிகள் தவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். 40 சதவீதம் ஊனம் அடைந்த மாற்றுத்திறனாளி களுக்கு வருவாய் துறை மூலம் மாதம்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித் தொகையைப் பெற குடும்ப அட்டை, ஆதார், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தக நகல், புகைப்படம் உள்ளிட்டவற்றை இணைத்து தாசில்தாரிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். வருவாய் ஆய்வாளர் மூலம் ஆய்வு செய்து, பயனாளியின் இருப்பிடம் உறுதி செய்யப்பட்டதும், பயனாளியின் வங்கிக் கணக்கில் உதவித் தொகை செலுத்தப்படும்.

ஆனால், திருவண்ணாமலை, விழுப்புரம், சிவகங்கை, ராமநாதபுரம் உட்பட தமிழகத்தின் பல் வேறு மாவட்டங்களில் ஆணை பெறப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி களுக்கு உதவித் தொகை வழங்கப் படவில்லை.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்டம் நாச்சானந்தல் கிராம த்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி எஸ்.முருகன் கூறியபோது, ‘‘3 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமில் உதவித்தொகைக் கான ஆணை வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை தொகை வரவில்லை. அதிகாரிகளிடம் முறையிட்டால் புதிதாக விண்ணப்பிக்கும்படி கூறுகின்றனர். புதிதாக விண்ணப்பித்தும் பயன் இல்லை. கூலி வேலை செய்யும் நான், இந்த உதவித் தொகையை பெறுவதற்காக, வேலைக்கு செல்லாமல் அலைகிறேன். இதனால், என் சம்பளத்தையும் இழக்க நேரிடுகிறது’’ என்றார்.

இதுபற்றி கேட்டபோது தமிழ் நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் கூறியதாவது:
பதிவு மூப்பு அடிப்படையில்தான் உதவித் தொகை வழங்க வேண்டும். ஆனால், வருவாய் துறையின் கீழ் நிலையில் இருக்கும் அதிகாரிகள் சிலர் முறைகேடாக பணம் அளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். இதனால், உண் மையான பயனாளிகள் உதவித் தொகை பெற முடியாமல் தவிக் கின்றனர்.
தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெற காத்திருக்கின்றனர். எனவே, ஆணை பெற்றும் உதவித் தொகை வழங்காதது குறித்து அரசு விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பயனாளிகளின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்போதுதான் பதிவு மூப்பு அடிப்படையில் உதவித் தொகை வழங்கப்படும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப் பட்ட ஆணைகள், ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
இதனால், சிலருக்கு உதவித் தொகைகள் வழங்கப்படாமல் உள்ளது. இருப்பினும், உதவித் தொகை பெற்று வருபவர்களில் யாராவது மறைந்தால், அவர் களுக்கு பதிலாக ஏற்கெனவே ஆணை பெற்றவர்களை தொடர்ந்து சேர்த்து வருகிறோம்.
நிதி பற்றாக்குறை காரணமாக புதிதாக பயனாளிகளை சேர்ப்பதில்லை. எனவே, ஏற்கெனவே ஆணை பெற்று உதவித் தொகை கிடைக்காதவர்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.பயனாளிகளின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்போதுதான் பதிவு மூப்பு அடிப்படையில் உதவித் தொகை வழங்கப்படும்.

No comments:

Post a Comment