முகப்பு

Showing posts with label relief pension. Show all posts
Showing posts with label relief pension. Show all posts

'இருள்சூழ் உலகு', கலங்கடித்துவிட்ட கலைஞர் செய்திகள் செய்தித் தொகுப்பு

14 [செப்டம்பர், 2020
கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட சுமார் 249 குடும்பங்களைத் தத்தெடுத்ததோடு, தன்னுடைய சொந்த சேமிப்பு நான்கறை லட்சத்தையும்        அவர்களுக்காகவே செலவிட்டிருக்கிறார் ஹரிகிருஷ்ணன். கடந்த மார்ச் 24 ஆம் தேதி தொடங்கிய கரோனா ஊரடங்கு, நான்கைந்து கட்டங்களைக் கடந்து, இப்போதும் சில தளர்வுகளுடன் நீடித்து வருகிறது. பெரும்பாலும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள இந்தக் கட்டத்திலும்கூட ரயில் போக்குவரத்து தொடங்கப்படாததால், ரயில் வணிகம் செய்து வாழும் பெரும்பாலான பார்வையற்றோர் குடும்பங்கள் இன்னமும் துன்பத்தில் உழன்றபடிதான் வாழ்கிறார்கள்.
கரோனா நோய்த்தொற்று பீதியால் தொடுதல், கைப்பற்றி நடத்தல் என எல்லாமே எச்சரிக்கைக்குரியவைகளாக மாறிப்போனதால், தங்களுடைய அன்றாட வாழ்வு எப்போது சாமானிய நிலையை அடையுமோ எனவும் ஏக்கத்தோடே காத்திருக்கிறார்கள் பல பார்வை மாற்றுத்திறனாளிகள்.
இந்நிலையில், கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட பார்வையற்றோர் குறித்து “பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை புரட்டிப்போட்ட Corona! - இருள் சூழ் உலகு! | COVID 19” என்ற தலைப்பில்  ஒரு செய்தித் தொகுப்பை வெளியிட்டிருக்கிறது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி. இதில் பங்கேற்றுப் பேசும் பல பார்வையற்றோரின் சொல்லுணாத் துயரம் நம்மைக் கலங்கடிக்கிறது என்றாலும், இறுதியாகப் பேசும் ஹரிகிருஷ்ணன் நம்மை ஒரு கனம் மூர்ச்சையாக்கிவிடுகிறார். நாமேல்லாம் பெரிதாய் என்ன செய்துவிட்டோம் என்று நம்மையே கிள்ளிப் பார்க்கச் செய்துவிடுகிறார்.
 முதல் கட்ட ஊரடங்கு தொடங்கிய காலத்தில், இல்லம் ஒன்றிற்கு உதவிய ஹரிகிருஷ்ணன், வேறு யாரெல்லாம் இந்த ஊரடங்கினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று தேடி, இறுதியாகப் பல பார்வை மாற்றுத்திறனாளி குடும்பங்களைக் கண்டடைகிறார். சுமார் 249 பார்வை மாற்றுத்திறனாளி குடும்பங்களை ஊரடங்கு முடியும்வரை தானே பார்த்துக்கொள்ளப்போவதாக முடிவெடுக்கும் திரு. ஹரி, தன்னுடைய திருமணத்திற்காக சிறுகச் சிறுகத் தான் சேமித்து வைத்திருந்த சுமார் இரண்டறை லட்சத்தைச் செலவு செய்கிறார். இத்தனைக்கும் அவர் ஒரு மிகப்பெரிய செல்வந்தக் குடும்பத்தைச் செர்ந்தவர் அல்லர். மாறாக, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சாமானியன். மே மாத இறுதிக்குள் தன்னுடைய சேமிப்பு அத்தனையும் கரைந்துவிடவே, செய்வதறியாது திகைத்த ஹரி, தன் மைத்துனரோடு சேர்ந்து தங்களிடமிருந்த நகைகளை அடகு வைத்து, சுமார் இரண்டு லட்சம் திரட்டி இந்தக் குடும்பங்களுக்கு உதவியிருக்கிறார்கள். இப்போது அதுவும் தீர்ந்துவிட்டதாகக் கூறும் ஹரி, “இப்போ நிறையத் தளர்வுகள் கொடுத்திருக்கு அரசாங்கம். அனேகமா வார 18ஆம் தேதியில இருந்து ரயில் ஓடுமுனு நம்பலாம். இந்தச் சூழ்நிலையில பார்வையற்றவர்கள் தங்களோட வியாபாரத்தைத் தொடங்கக்கூட காசில்லாமத் தவிக்கிறாங்க. நம்மகிட்ட அவுங்க சும்மாவெல்லாம் கேட்கல. கடனாத்தான் கேட்கிறாங்க. அதனால, உங்க பக்கத்தில கர்சிஃப், பர்ஃபி விக்கிற பார்வையற்றவர் இருந்தா, அவர் தொழில் தொடங்க கொஞ்சம் கொடுத்துதவுங்க” என்கிறார் இயல்பாக.
ஒரு தனிமனிதர், சொந்தப் பணம் நான்கறை லட்சம், 249 குடும்பங்கள். சத்தமில்லாமல் இப்படி ஒரு பக்கம் என்றால்,
ஆயிரம் கொடுத்ததையே அளப்பரிய சாதனை என்று தனக்குத்தானே விளம்பரம் செய்து பாயிரம் பாடிக்க்ஒண்டிருக்கிற குளசாமிகள் மறுபக்கம்.
நீங்களே சொல்லுங்கள்! குடும்பங்கள் காப்பவர்தானே குளசாமி?

சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

உட்கார்ந்த இடத்திலேயே சமூகப்பணி, உதவிக்கு விரைந்துவந்த மாவட்ட ஆட்சியர்; கரூரில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

10 ஜூலை, 2020
graphic மாரியப்பன்
கரூர் காவல்த்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருபவர் ஜெயபாலன். பார்வை மாற்றுத்திறனாளியான இவரின் நொடிநேர சமூகப்பணி அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்கிற 70 வயது மாற்றுத்திறனாளி தனது அடையாள அட்டை தொலைந்துவிட்டதால், அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவித்துள்ள ரூ. 1000 நிவாரணத்தைப் பெறமுடியாமல் தவித்து வந்திருக்கிறார். தனக்குப் புதிய அடையாள அட்டை வழங்கும்படி வட்டாட்சியரிடமும் மனு கொடுத்துள்ளார். இதற்கிடையே, மாரியப்பனுக்கு நிவாரணம் வழங்க மறுத்த கிராம நிர்வாக அலுவலர், அவரை மோசமாகத் திட்டியதாகவும், அதனால் மாரியப்பன் மிகவும்மனமுடைந்து போனதாகவும்  செய்தி வெளியானது. இந்தச் செய்தியைப் படித்த மறுகணமே, திரு. ஜெயபால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொலைபேசி செய்து, செய்தியை மேற்கோள் காட்டி, தொடர்புடைய அந்த மாற்றுத்திறனாளி முதியவருக்கு நிவாரணம் பெற்றுத்தருமாறு வலியுறுத்தியுள்ளார்.
திரு. ஜெயபால் அவர்கள் புகார் செய்த ஓரிரு மணிநேரத்தில் அவர் அலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது. அந்தச் செய்தியில்,
மதிப்பிற்குரிய ஐயா,

கடவூர் வட்டம் இடையப்பட்டி மேற்கு கிராமம் மஜ்ரா அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மாரியப்பன் த/பெ பிச்சை என்பவருக்கு COVID-19 மாற்றுத்திறனாளி நிவாரண உதவித்தொகை இன்று  09.07.2020 வழங்கப்பட்டது.
மேற்படி, பயனாளி அசல் மாற்றுத்திறனாளி  அடையாள அட்டையை தொலைத்து விட்டமையால் உதவித்தொகை வழங்க இயலாத நிலை இருந்தது. தற்போது,  அவர் கையில் வைத்திருந்த நகல் (Xerox) மூலம் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் சரிபார்க்கப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும், இவருக்கு  மாற்றுத்திறனாளி அடையாள அட்டை (மறுபிரதி) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மூலமாக செய்தி அனுப்பியிருந்தார்.
உட்கார்ந்த இடத்திலேயே, ஒரே ஒரு அலைபேசி அழைப்பின் மூலம், மாற்றுத்திறனாளி முதியவரின் கண்ணீர் துடைத்த ஜெயபாலன் அவர்களுக்கு சவால்முரசு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
‘நயன் தூக்கின் நன்மை கடலினும் பெரிது’
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

"கரோனா நிவாரண நிதி வழங்குவதில் உள்ளாட்சி ஊழியர்களை பயன்படுத்த வேண்டும்" முதல்வருக்கு டாராடாக் கடிதம்

ஜூன் 22, 2020 
graphic டாராடாக் கடிதம்
கரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அடையாள அட்டை வைத்திருக்கும் சுமார் 13 லட்சத்து 35 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000 நிவாரணமாக வழங்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்பினைத் தொடர்ந்து அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்த நிவாரணத்தை மாவட்ட வாரியாகப் பகுத்து வழங்கிட, அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று, இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக இந்த நிதி வழங்கப்பட வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்கள் நேற்று வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார். இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் டாராடாக் முதல்வருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில்,

"கொரோனா ஊரடங்கு வாழ்வாதார நிதியாக மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 / - வழங்க அரசாணை வெளியிடப்பட்டு , வீடு வீடாக அத்தொகையை பட்டுவாடா செய்யும் வகையில் விதிமுறைகளை உருவாக்கி மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் வெளியிட்டுள்ளதை எமது சங்கம் வரவேற்கிறது. உள்ளாட்சித்துறை ஊழியர்கள் மூலம் இத்தொகையினை வழங்க மாநிலம் முழுவதும் ஒரே துறையை தேர்வு செய்யாமல் , பட்டுவாடா செய்யும் துறையை மாவட்ட ஆட்சியர்கள் தேர்வு செய்வர் என விதிமுறையில் அறிவிக்கப்பட்டுள்ளது ஏராளமான குழப்பங்களை உருவாக்கும் என ஐயப்படுகிறோம்.
எனவே , கிராமப்புறம் வரை அதிக ஊழியர்களை கொண்டுள்ள உள்ளாட்சித்துறை ஊழியர்கள் மூலம் இத்தொகையை பட்டுவாடா செய்ய , உரிய உத்தரவுகளை மாண்புமிகு முதலமைச்சர் பிறப்பிக்க எமது சங்கம் கோருகிறது. இடம்பெயர்ந்த மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கக் கூடாது, வேறு மாவட்டங்கள் அல்லது வேறு பகுதியை சேர்ந்தவர்களுக்கு மொத்தமாக விபரம் சேகரித்து , பின்னர் வழங்கப்படும் என விதிமுறை உருவாக்கி இருப்பது , இடம்பெயர்ந்த மாற்றுத்திறனாளிகளை பாதிக்கும் , தாமதமாகும் . எனவே , ஒரு முகவரியில் அடையாள சான்று பெற்று , பல காரணங்களால் வேறு முகவரியில் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கும் , அவர்கள் எந்த மாவட்டம் , பகுதியை சேர்ந்தவர்களானாலும் , அலைக்கழிக்காமல் நிவாரண தொகை வழங்க மாற்றுத்திறனாளிகள் இயக்குனரின் விதிமுறையில் உரிய திருத்தம் செய்திட முதலமைச்சர் உத்தரவிட வேண்டுகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "சங்கங்களுடன் கலந்தாலோசித்து செயல்பட மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனருக்கு உத்தரவிடுக" என அந்தக் கடிதத்தில்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

முதல்வர் அறிவித்த ரூ. 1000 கரோனா நிவாரணம்: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்

ஜூன் 21, 2020
graphic மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
கரோனா ஊரடங்கின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து அதுகுறித்த அரசாணை நேற்று, 20.ஜூன்.2020 வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில், மொத்தம் 13 லட்சத்து 35 ஆயிரத்து 219 மாற்றுத்திறனாளிகளுக்கு, ரூ. 133 கோடியே 52 லட்சத்து 19 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிதியை மாவட்டவாரியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பேற்று வழங்குவார்கள் எனவும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள் விரைவில் வெளியிடுவார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதனை அப்படியே கீழே தருகிறோம்.


கொரோனா வைரஸ் ( Covid - 19 ) நோய் தொற்று பரவலினை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு , இக்காலங்களில் ஏழை எளிய மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கியும் , பொருளாதார மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது ,
தற்போது 30.06.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இவ்வூரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13.35 இலட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 / - ரொக்கம் நிவாரணத்தினை அவர்கள் வீட்டிலேயே வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
இதற்கான அரசாணை நிலை எண் : 311 , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை , நாள் : 20.06.2020 நாளில் வெளியிடப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள் :
1) மாவட்ட ஆட்சித்தலைவர் இவ்வறிவிப்பினை செயல்படுத்தும் முதன்மை அதிகாரி  ஆவார்.
2) மாவட்ட ஆட்சியர் தங்களுடைய மாவட்டத்தில் இவ்வறிவிப்பினை செயல்படுத்தும் துறையினை தேர்வு செய்வார்.
3) இவ்வறிவிப்பினை செயல்படுத்தும் குழுவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் இவ்வறிவிப்பினை செயல்படுத்தும் துறையின் மாவட்ட அளவிலான அதிகாரி இடம் பெறுவார்கள்.
4) மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கேற்ப இந்நிவாரணத் தொகையினை மாற்றுத் திறனாளிகளின் வீட்டிற்கு சென்று வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்வார்.
5) நிவாரணத் தொகை வழங்கும்போது , உரிய கோவிட் -19 கொரோனா நோய் தடுப்பு பாதுகாப்பு முறைகளை முழுமையாக கடைப்பிடிக்கவேண்டும்.
6) மாற்றுத்திறனாளிகள் , நிவாரணத் தொகை வழங்க உள்ள அலுவலரிடம் விநியோகப் படிவத்தில் உள்ள விவரங்களை அளிக்கவேண்டும். மாற்றுத்திறனாளிகள் தங்கள் தேசிய அடையாள அட்டையின் அசலினை காண்பித்து அதன் நகலினை நிவாரணத் தொகை வழங்கும் அலுவலரிடம் சமர்ப்பித்து நிவாரணத் தொகை ரூ.1000 / - பெற்றுக்கொள்ளலாம்.
7) நிவாரணத் தொகை வழங்க உள்ள அலுவலர் , இவ்விவரத்தினை தேசிய அடையாள அட்டையுடன் கூடிய பதிவு புத்தகத்தில் உதவி வழங்கும் பக்கத்தில் முத்திரையிட்டு பதிவு செய்திட வேண்டும். " Covid - 19 நிவாரணத் தொகை
ரூ.1000 / வழங்கப்பட்டது
வழங்கும் அலுவலர் என முத்திரையிட்டு , கையொப்பமிட வேண்டும். நிவாரணத் தொகை வழங்கும் அலுவலர் இரண்டு 500 / - நோட்டுகளாகவே பயனாளிக்கு வழங்கவேண்டும்.
8) இவ்வுதவித் தொகையினை மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களின்
பெற்றோர்கள் அல்லது சிறப்பு சூழ்நிலையில் பாதுகாவலர்களிடம் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
9) வேறு மாவட்டங்களை அல்லது நிவாரணத் தொகை வழங்கும் அலுவலர் பகுதிக்குட்படாத பிற பகுதிகளை சார்ந்த மாற்றுத்திறனாளிகளின் விவரம் மற்றும் தேசிய அடையாள அட்டை மற்றும் மருத்துவ சான்றிதழினை பெற்று அவ்விவரங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு அனுப்ப வேண்டும். இவர்களுக்கு நிவாரண தொகை வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும்.
10) மாற்றுத்திறனாளிகளுக்கு ரொக்க நிவாரணத் தொகை விநியோக படிவம் மற்றும்  ஒப்புகை சீட்டு மாதிரிகள் மாற்றுத் திறனாளிகள் அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெற்று அச்சிடவேண்டும். ஒவ்வொரு புத்தகத்திலும் 50 படிவங்கள் இருக்கவேண்டும். நிவாரணத் தொகை வழங்கவுள்ள துறையின் மாவட்ட அளவிலான அதிகாரி இப்புத்தகங்களை விநியோகிக்கும் அலுவலர்களுக்கு வழங்கிய விவரங்களை பராமரிக்கவேண்டும்.
11) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் நிவாரணத் தொகை வழங்கும் துறையின் மாவட்ட
அளவிலான அதிகாரியுடன் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.
12) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம்,  இத்திட்ட செயலாக்கம் குறித்த விளம்பரங்களை செய்யவேண்டும். இவ்விளம்பரத்தில் இந்நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ள நாட்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் விநியோக படிவம் , பூர்த்தி செய்ய அளிக்க வேண்டி விவரங்களை தெரிவிக்கவேண்டும். மேலும் இத்தொகை கிடைப்பதில் சிரமம் ஏதேனும் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் மற்றும் தொலைபேசி எண்களை தெரிவிக்க வேண்டும். இவ்வுதவி மறுக்கப்படும் நிலையில் அல்லது மைய எண் : கிடைக்கப்பெறவில்லை எனில், மாநில அளவிலான உதவி 18004250111 - ஐ தொடர்பு கொள்ளலாம்.
13) அரசு மறு வாழ்வு இல்லங்கள் மற்றும் பிற இல்லங்களில் தங்கியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணத் தொகை சென்று அடைவதை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்கள் உறுதி செய்யவேண்டும்.
14) நிவாரணத் தொகை முழுவதுமாக வழங்கப்பட்ட பின் ஒப்புகை சீட்டுகள் அடங்கிய புத்தகங்களை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் நிவாரணத் தொகை வழங்கும் துறையின் மாவட்ட அதிகாரி தொகுத்து ஒப்படைக்கவேண்டும்.
15) மேலும் , பயன்படுத்தாத ஒப்புகைச்சீட்டுகளின் எண்ணிக்கை நிவாரணத் தொகை வழங்கும் துறையின் மாவட்ட அதிகாரி தொகுத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டும்.
16) மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் முன்னேற்ற அறிக்கையினை கீழ்க்கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து மாநில Help Line Application- ல் பதிவு செய்யவேண்டும்.
தேவைப்படும் விபரம் :
ரூ .1000 / - நிவாரணத் தொகை
தேதி
மாவட்டத்தின் பெயர்
தாலூகாவின் பெயர்
பயனாளிகளின் எண்ணிக்கை
வழங்கப்பட்ட தொகை விவரம்
17) நிவாரணத் தொகை வழங்கும் துறையின் மாவட்ட அதிகாரி மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தலா 5 சதவீதம் நிவாரணத் தொகை வழங்கும் பகுதியினை Random- மாக ஆய்வு மேற்கொள்ளவேண்டும். இவ்விவரத்தினை மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் , மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையருக்கும் அனுப்பவேண்டும்.
18) நிவாரணத் தொகை வழங்குவதில் ஏதேனும் முறைகேடு தெரியவந்தால் மாவட்ட ஆட்சியர் உரிய பணியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
19) அரசாணையில் ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலாக கூடுதல் நிதி தேவைப்படின் தேவையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையருக்கு தெரிவிக்கலாம். மிகுதியாக இருக்கும் மாவட்டங்களிலிருந்து நிதி மறு ஒதுக்கீடு வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர்கள் தங்களுக்கு ஒதுக்கிய நிதி முடியும் தருவாயில் இவ்விவரத்தினை மாநில ஆணையருக்கு தெரிவிக்கலாம்.
20) இத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் தனி வங்கிக் கணக்கில் பராமரிக்கவேண்டும்.
21) மாவட்ட ஆட்சித்தலைவர் இத்திட்ட செயலாக்கம் குறித்து நாள் தோறும்
கண்காணிக்கவேண்டும்.
22) அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒதுக்கியுள்ள தொகையினை காலதாமதமின்றி கருவூலத்தில் பட்டியலிட்டு சம்மந்தப்பட்ட கணக்கிற்கு வரவு வைக்கவேண்டும். இதற்கான அரசாணை மற்றும் முதன்மை செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களின் செயல் முறை கடித நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்கள் சம்மந்தப்பட்ட துறையுடன் இணைந்து செயல்பட்டு காலதாமதத்தினை தவிர்க்க வேண்டும்.
23) தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ( UDID ) வழங்கும் திட்ட செயல்பாட்டிற்காக இதுவரை UDID- க்காக விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் அவர்களின் புகைப்படம் , தேசிய அடையாள அட்டை மற்றும் மருத்துவ சான்றிதழ்களின் நகல், புகைப்படத்துடன் கூடிய அரசு அங்கீகரித்த அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் நகல் மற்றும் வசிப்பிடத்திற்கான அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் நகலினை நிவாரணத் தொகை வழங்கும் அலுவலரிடம் வழங்குமாறு கோரவும். இருப்பினும் இது நிவாரணத் தொகை பெறுவதற்கு கட்டாயமில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது .
ஓம் / ஜானி டாம் வர்கீஸ் .
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
வழிகாட்டு நெறிமுறையைப் பதிவிறக்க
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள்: மாவட்ட வாரியாக அரசு வழங்கிய பட்டியல் என்ன?

20 ஜூன், 2020
தமிழகத்தில் மொத்தம் 13 லட்சத்து 35 ஆயிரத்து 219 பேர் அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் என மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் பட்டியல் வழங்கியுள்ளார்.
கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 1000 வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 13 லட்சத்து 35 ஆயிரத்து 219 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்திருப்பதாகவும், எனவே அவர்களுக்கு நிவாரணமாக வழங்க ரூ. 133 கோடியே 52 லட்சத்து 19 ஆயிரம் தேவைப்படும் என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் வழங்கிய மாவட்ட வாரியான பட்டியலை மேற்கோள் காட்டி அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது .
அதன்படி, அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 65709 மாற்றுத்திறனாளிகளும், குறைந்தபட்சமாக  நீலகிரி மாவட்டத்தில் 13240 மாற்றுத்திறனாளிகளும் அடையாள அட்டை வைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலையைத் தொடர்ந்து திருச்சி, சென்னை, சேலம், கடலூர், தஞ்சை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளிகள் வசிப்பதாக அந்தப் பட்டியல் தெரிவிக்கிறது. அந்தப் பட்டியலைப் பார்வை மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக ஒருங்குறி வடிவில் கீழே கொடுத்துள்ளோம்.
s.no
district
Number of PWDs
allocated amount
1
ariyalur
14174
14174000
2
chengalpattu
31480
31480000
3
chennai
59679
59679000
4
coimbatore
48474
48474000
5
cuddaloore
56018
56018000
6
dharmapuri
34502
34502000
7
dindikal
33376
33376000
8
erode
35981
35981000
9
kallakurichi
32944
32944000
10
kancheepuram
42184
42184000
11
kanniyakumari
37188
37188000
12
karur
20960
20960000
13
krishnagiri
39637
39637000
14
madurai
46627
46627000
15
mayiladudhurai
17203
17203000
16
nagapatnam
15510
15510000
17
namakkal
24922
24922000
18
The nilgiris
13240
13240000
19
perambalur
14397
14397000
20
pudukkottai
29520
29520000
21
ramanathapuram
29326
29326000
22
ranipettai
31182
31182000
23
salem
58153
58153000
24
sivagangai
31356
31356000
25
thenkasi
27449
27449000
26
thanjavur
54142
54142000
27
trichy
63617
63617000
28
theni
23846
23846000
29
thiruvarur
29753
29753000
30
thiruvannamalai
65709
65709000
31
thiruvallur
37846
37846000
32
tirunelveli
28560
28560000
33
thirupattur
21771
21771000
34
thoothukudi
36267
36267000
35
viruthunagar
31972
31972000
36
villupuram
53535
53535000
37
vellore
38536
38536000
38
thiruppur
24183
24183000
சித்ரா உபகாரம்
சவால்முரசு: நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்