பேரிடர் காலங்களில் ஊனமுற்றோர் உரிமைகளும், உண்மை நிலையும்!
19 ஏப்ரல் 2020, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை.
நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர்,
உங்கள் திறன் பேசி அல்லது கணினியில் Zoom செயலியைத் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
கூகுல் ப்லே ஸ்டோரில் தரவிறக்க இங்கே சொடுக்குங்கள்
விண்டோசுக்கான செயலியைத் தரவிறக்க இங்கே சொடுக்குங்கள்
செயலியைத் திறந்தால், join meeting என்ற இடத்தில் சொடுக்கினால், உங்கள் பெயர் மீட்டிங் பாஸ்வேர்ட் கேட்கும். பெயர் என்ற இடத்தில் உங்களின் பெயரைக் கொடுத்துவிடவும்.
காலை 11 மணிக்கு மீட்டிங் தொடங்கவிருப்பதால், அதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக, மீட்டிங் இணைப்பான
https://us02web.zoom.us/j/89967200048?pwd=NFQrS0VhS1N3NktDaEZ5NUY3NjlUZz09
இந்த இணைப்பைச் சொடுக்கி, அதில் ஓப்பன் வித் zoom என்று கொடுத்து, நீங்கள் நேரடியாக மீட்டிங்கிற்குள் சென்றுவிடலாம்.
பாஸ்வேட் தேவை இருக்காது. பெயர் என்ற இடத்தில் உங்கள் கணினி அல்லது திறன் பேசியின் பெயர் இருந்தால், அதனை எடிட் செய்து உங்கள் பெயரை வழங்குவது, மீட்டிங்கை ஒருங்கிணைப்பவர்களுக்கு வசதியாக இருக்கும்.
வணக்கம். பொது சமூகத்தில் ஊனமுற்றோர் குறித்த சரியான புரிதலை ஆழப்படுத்தி, பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் இடையே முற்போக்கு அரசியல், சமூக, பண்பாட்டு கருத்துக்களை விரிவாகக் கொண்டுசெல்வதை இலக்காகக் கொண்டு பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை தொடங்கப்பட்டது. ஊனமுற்றோர் உரிமைகள் குறித்தும் பிற முற்போக்கு கருத்தியல்கள் குறித்தும் மாதந்தோறும் இணையவழியில் கருத்தரங்குகளை நடத்த பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை திட்டமிட்டுள்ளது. இந்த இணையவழிக் கருத்தரங்குகள் இடம் சார்ந்த தடைகளைத் தாண்டி பல்வேறு பகுதிகளிலும் வாழும் பார்வையற்றோர் கருத்தியல்ரீதியிலான விவாதங்களில் பங்கேற்கவும், தமது உரிமைகளை அறிவதற்கும், உணர்வுகளை பதிவுசெய்வதற்கும், தமது சமூக அரசீயல் புரிதல்களை விரிவுபடுத்தி ஒருங்கிணைவதற்கும் களமாக அமையும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

எமது பேரவையின் முதலாவது மாதாந்திர இணையவழிக் கருத்தரங்கம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2020 காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கம் காலத்தின் தேவை கருதி கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் நெருக்கடியிலும் முழு அடைப்பு தோற்றுவித்திருக்கும் பெருந்துன்பங்களிலும் சிக்கித் தவிக்கும் பார்வையற்றோர் மற்றும் பிற ஊனமுற்றோர் குறித்து விவாதிக்கிறது.
பேரிடர் காலங்களில் ஊனமுற்றோர் உரிமைகளும் உண்மை நிலையும் என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கில் பன்னாட்டுச் சட்ட விதிகள் மற்றும் இந்திய நாட்டின் சட்டங்களின் அடிப்படையில் ஊனமுற்றோர் பேரிடர் காலங்களில் பெற வேண்டிய உரிமைகள், வழங்கப்பட வேண்டிய சிறப்பு உதவிகள் குறித்து தமிழகத்தில் இருந்து இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப்பட்ட ஆய்வு மேர்க்கொண்டுவரும் ஸ்ருதி வெங்கடாசலம் விளக்குகிறார். தற்போதய நெருக்கடியான பேரிடர் காலத்தில் ஊனமுற்றோர் எதிர்கொண்டுவரும் சமூகப் பண்பாட்டுச் சிக்கல்கள், பொருளாதார நெருக்கடிகள் குறித்து களத்தில் இருந்து தொடர்ந்து பணியாற்றிவரும் பூவிருந்த வள்ளி பார்வையற்றோர் சிறப்புப் பள்ளி ஆசிரியரும், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் இணைச் செயலறுமான ப. சரவண மணிகண்டன் எடுத்துரைக்கிறார். மேலும் பங்கேர்ப்பாளர்களின் கருத்துக்களும் கேள்விகளும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.
பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் அமைப்புக் குழுவின் ப. பூபதி வரவேற்பு மற்றும் அறிமுக உரையாற்ற, கு. முருகானந்தன் கருத்தரங்க விவாதங்களை ஒருங்கிணைக்கிறார். க. கார்த்திக் நன்றியுரை வழங்குகிறார்.
ZOOM மென்பொருள் அல்லது செயலியைக்கொண்டு நீங்கள் இந்த இணையவழிக் கருத்தரங்கில் எளிதாகப் பங்கேற்கலாம். கருத்தரங்க இணையக் கூடம் 19 ஏப்ரல் காலை 10.30 மணிக்குத் திறக்கப்படும், காலை 11 மணிக்கு கருத்தரங்கம் தொடங்கும். முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனினும் தொழில்நுட்ப உதவிகள் அல்லது பிற தகவல்களுக்கு 9787871008 (முருகானந்தன்), 984363951 (பூபதி) ஆகிய எங்களுக்கு அழைக்கலாம் அல்லது வாத்சப் செய்யலாம். ptfb.tn@gmail.com என்ற எமது மின்னஞ்சல் முகவரிக்கும் தொடர்புகொள்ளலாம். இக்கருத்தரங்கில் பார்வையற்ற நண்பர்கள் மற்றும் ஆர்வலர்கள் பெருமளவில் பங்கேற்று பயன்பெறவும் பயனளிக்கவும் அன்புடன் அழைக்கிறோம்!
இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க, முதலில் ZOOM செயலியை உங்களது கணினியிலோ அல்லது திரன்பேசியிலோ பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.
கீழே உள்ள இணைப்பை 19 ஏப்ரல் காலை 10.30 மணிக்குமேல் சொடுக்கினால் போதும், நீங்கள் கருத்தரங்கக் கூடத்தில் நுழைந்துவிடுவீர்கள்!
கருத்தரங்கில் பங்கேற்பதற்கான இணைப்பு:
https://us02web.zoom.us/j/89967200048?pwd=NFQrS0VhS1N3NktDaEZ5NUY3NjlUZz09
வாருங்கள், இணய வழியில் சந்திப்போம், சமூக மாற்றத்திற்கான கருத்துப் பரிமாற்றத்தில் நம்மை இணைத்துக்கொள்வோம்!
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்
No comments:
Post a Comment