முகப்பு

“இந்த ஆண்டு மட்டுமாவது மே மாத ஊதியம் தரவேண்டும்” அரசுக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை

graphic உடல்ச்சவால்கொண்ட பகுதிநேர ஓவிய ஆசிரியர் ஆனந்த்குமார்
படக்காப்புரிமை தி இந்து ஆங்கிலம்
 கடந்த 2012 ஆம் ஆண்டு, மாதம் 5000 என்ற தொகுப்பூதியத்தின் அடிப்படையில், இசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கான சிறப்பாசிரியர்கள் சுமார் 16549 பேர் பகுதிநேர ஆசிரியர்களாகப் பள்ளிக்கல்வித்துறையால் நியமிக்கப்பட்டனர்.
அவர்களுள் 200 மாற்றுத்திறனாளி பகுதிநேர ஆசிரியர்களும் அடங்குவர்.
ரூ. 5000 தொகுப்பூதியம் ரூ. 7700 ஆக உயர்த்தப்பட்டபோதிலும், ஒரு வருடத்தின் 11 மாதங்கள் மட்டுமே இவ்வகைப் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. மே மாதம் ஊதியம் எதுவும் வழங்கப்படுவதில்லை. தற்போதைய கரோனா ஊரடங்கின் நெருக்கடி நிலையைக் கவனத்தில்கொண்டு, தங்களுக்கு இந்த ஆண்டு மட்டும் மே மாதம் ஊதியம் வழங்க வேண்டுமென அவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பகுதிநேர ஓவிய ஆசிரியராகப் பணியாற்றும் திரு. ஆனந்த்குமார் (43) இதுகுறித்துக் கூறும்போது, “ஒவ்வொரு ஆண்டும் எங்களுக்கான மே மாத சம்பலம் அரசு வழங்கியதில்லை. ஆனால் இந்த ஆண்டு மட்டுமாவது எங்களுக்கு மே மாத ஊதியத்தினை அரசு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். வருமானம் எதுவும் இல்லாததால், என்னால் மூன்று மாதம் வீட்டு வாடகை கட்ட இயலவில்லை. எனவே நான் குடியிருந்த வீட்டினை காலி செய்துவிட்டு, என்னோடு பணியாற்றும் பார்வை மாற்றுத்திறனாளி நண்பரின் உதவியால் ஓர் சிறிய வீடமைத்து வசிக்கத் தொடங்கியிருக்கிறேன். எனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்கிட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

No comments:

Post a Comment