முகப்பு

கரோனா தொற்றுக்கு பலியான முதல் பார்வையற்றவர், மகனும் கடும் சிகிச்சையில் இருப்பதாகத் தகவல்

30 ஜூன், 2020
graphic அருணாச்சலம்
அருணாச்சலம்
இந்திய மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவரும், பார்வையற்றோருக்கான நலன் மற்றும் உரிமைகள் சார்ந்து களப்பணியாற்றிய முன்னோடியுமான திரு. அருணாச்சலம் அவர்கள், கரோனா தொற்றுக்குள்ளாகி, இன்று பகல் 11 மணி அளவில் உயிரிழந்தார்.
அறுபது  வயதைக் கடந்த திரு. அருணாச்சலம், தன் மனைவி கீதா மற்றும் மகன் மணிகண்டனோடு சென்னை அடையாறில் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு, கரோனா தொற்றின் காரணமாக மூவருமே சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், அவர் மனைவி கீதா நேற்று இரவும், இன்று திரு. அருணாச்சலமும் உயிரிழந்துள்ளனர். அவருடைய மகன் மணிகண்டன் கடுமையான சிகிச்சையில் இருப்பதாகத் தெரியவருகிறது.
திரு. அருணாச்சலம் தன் மனைவியுடன் இணைந்து, கரோனா ஊரடங்கால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் பார்வையற்றோருக்கு மளிகைப் பொருட்கள் மற்றும் பண உதவி செய்து வந்துள்ளார். இவருடைய களப்பணி குறித்து கடந்த ஏப்ரல் 15ஆம் நாள் வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் செய்தி  வெளியானது. திரு. அருணாச்சலம் கரோனா தொற்றுக்குப் பலியான முதல் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.
 சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடக

No comments:

Post a Comment