30 ஜூன், 2020
முதலும் இடையும்
சேர்ந்து
கடை திறந்தன;
கடை வளர வளர,
முதல் பெருகப்
பெருக,
இடை காணாமலே
போனது.
தன்னார்வ,
தொண்டு,
நிறுவனம்.
***
அந்தப் பார்வையற்ற
பெண்ண்உக்கு
அரசு வேலை
கிடைத்ததும்
வரன் பார்க்கும்
படலம்
தொடங்கினார்கள்
பெற்றோர்
அவள் தங்கைக்கு.
***
அரசு வேலை
கிடைத்ததும்
அந்தப் பார்வையற்றவன் வைத்துக்கொண்டான்
சாட்டுக்கு
ஸ்மார்ட் ஃபோன்,
பாட்டுக்கு பெரிய
பெரிய ஸ்பீக்கர்,
நியூசுக்கு ஒரு
பெரிய திரை எல்ஈடி;
அவர்களும்
வைத்துக்கொண்டார்கள்
அவர்களின்
எல்லாவற்றிற்குமான
ஒரு ஏடிஎம்
மிஷின்.
***
தடையைத் தகர்த்து
வென்ற
உடல்ச்சவால் கொண்ட
தடகள வீரனை
உயர்த்திப்
போற்றிப் பாராட்டிட
உயர் அதிகாரி
அழைக்கிறாராம்;
ஏவல் ஆள்
சொல்கிறான்
இரண்டாம் மாடி போ
என்று.
***
அனைவருக்குமான டிஜிட்டல்
இந்தியாவில்,
எனது அன்றாட இரயில்
பிழைப்பில்
பர்ஃபி வாங்கும்போது
அவர்களும்,
பாக்கி கொடுக்கும்போது
நானும்
கேட்டுக்கொள்ளும் கேள்வி
ஒன்றுதான்
‘இது எவ்வளவு?’
***
ப. சரவணமணிகண்டன்
தொடர்புகொள்ள: vaazhgavalluvam@gmail.com
அன்புக்குரிய வாசகர்களே!
உங்களுக்கும் இதுபோல
மாற்றுத்திறனாளிகளின் சவாலான வாழ்வியல் குறித்து, ஏதேனும் நறுக்கென்று சொல்லத் தோன்றுகிறதா? உடனே உங்களின் படைப்புகளை
பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிட்டு, எங்கள் நறுக்ஸ் நீதி பகுதிக்கு அனுப்பி வையுங்கள்.
நீங்கள் அனுப்ப வேண்டிய
மின்னஞ்சல் முகவரி,
அல்லது 9789533964
என்ற வாட்ஸ் ஆப் எண்ணைத்
தொடர்புகொள்ளுங்கள்.
மனதை வருட செய்தது வரன்
ReplyDelete