முகப்பு

நன்றி இந்து தமிழ்த்திசை: 100 நாவல்களின் ஒலி நூல் வெளியீடு

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்
பார்வை மாற்றுத் திறனாளிகள் இணையதளத்தில் படிக்கலாம்
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாவல்களின் ஒலி நூலை மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார் வெளியிட, பெற்றுக் கொள்கிறார் ஜெகஜோதி பார்வையற்றோருக்கான தன்னார்வ வாசிப்பாளர் வட்ட நிர்வாகி பிரபா வெங்கட்ராமன்.படம்: எம்.நாத்
திருச்சி
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் தமிழின் சிறந்த 100 நாவல்களின் ஒலி நூல் நேற்று வெளியிடப்பட்டது.
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு கணினி மற்றும் பிற உபகரணங்கள் மூலம் ஒலி நூல்கள், மின் நூல்களைப் பயன்படுத்த பயிற்சி கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு செய்த தமிழின் சிறந்த 100 நாவல்களை மின் நூல் மற்றும் ஒலி நூல் வடிவில், வாசிப்போம் இணைய நூலகம் என்ற அமைப்பு உருமாற்றியுள்ளது. இந்த மின் நூல் மற்றும் ஒலி நூல் வெளியீட்டு விழா மாவட்ட மைய நூலகத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார் தலைமை வகித்து, ஒலி நூலை வெளியிட, ஜெகஜோதி பார்வையற்றோருக்கான தன்னார்வ வாசிப்பாளர் வட்ட நிர்வாகி பிரபா வெங்கட்ராமன் பெற்றுக்கொண்டார். விழாவில், வாசிப்போம் இணைய நூலகம் அமைப்பின் நிறுவனர் எஸ்.ரவிக்குமார், மைய நூலக முதல்நிலை நூலகர் சி.கண்ணம் மாள், வாசகர் வட்ட துணைத் தலைவர்கள் நன்மாறன், இல.கணேசன், ரோட்டரி பீனிக்ஸ் தலைவர் நடராஜ சுந்தரம், நிர்வாகி செல்வக்குமார் ஆகியோர் பேசினர்.
இந்த ஒலி நூல்கள் மற்றும் மின் நூல்களை www.vaasippom.blogspot.com என்ற இணையதளத்தில் பார்வை மாற்றுத் திறனாளிகள் படிக்கலாம். விழாவை, இரண்டாம் நிலை நூலகர் ஆ.தர்மர் ஒருங்கிணைத்தார். முன்னதாக, வாசிப்போம் இணைய நூலகம் அமைப்பின் நிர்வாகி சிவசந்திரன் வரவேற்றார். 

No comments:

Post a Comment