முகப்பு

இணையம்: கொரோனா வைரஸ்: தனித்து விடப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழந்த அவலம் - சீனா சோகம்

நன்றி BBC Tamil
graphic கொரோனா வைரஸ்: தனித்து விடப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழந்த அவலம் - சீனா சோகம்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தால் தனது தந்தை மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் தனிமைப்படுத்தப்பட்டதால் கவனிக்க ஆளின்றி 16 வயதாகும் மாற்றுத் திறனாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யான் செங் சிறு வயது முதலே மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது தந்தையும் சகோதரரும் கட்டாயமாகத் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வாரத்துக்கு பிறகு, புதன்கிழமையன்று, அவரது உடல் மீட்கப்பட்டது.
இந்த மரணத்தைத் தொடர்ந்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் தலைவர் மற்றும் ஹுவாஜியாஹே நகர மேயர் ஆகியோர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பராமரிக்க இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தால், அவரைக் கவனித்துக்கொள்ள யாரும் இல்லாமல் தனிமையில் தவிக்கவிடப்பட்டார் யான் செங்.

ஒரு வார காலத்தில் இரு முறை மட்டுமே அவருக்கு உணவு வழங்கப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தனது மகன் தனித்து விடப்பட்டிருப்பது குறித்தும், அவரது உடல்நிலை குறித்தும் அவரது தந்தை சீன சமூக ஊடகமான வெய்போவில், மகனைப் பராமரிக்குமாறு உதவி வேண்டி பதிவிட்டிருந்தார்.
இந்த சிறுவனின் நிலை குறித்த இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

யான் செங்கின் குடும்பம் வசித்து வந்த ஹுவாஜியாஹே நகரம் சீனாவில் கொரோனா வைரஸ் பரவலின் மையமாக உள்ள ஹூபே மாகாணத்தில் உள்ளது.
  வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

No comments:

Post a Comment