முகப்பு

சர்தார் படேல் உதவித்தொகை: விண்ணப்பிக்கும் நேரம் இது

graphic Buddy for Study India
இளங்கலையில் கலை, அறிவியல், வணிகம் மற்றும் சிறப்புக் கல்வியில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பயின்றுவரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு படி ஃபார் ஸ்டடி இந்தியா (buddy for study India) என்ற அறக்கட்டளை சர்தார் படேல் உதவித்தொகை திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
உண்மையில் தேவையுடைய மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களின் இளங்கலைப் படிப்பை நிறைவுசெய்ய உதவுவதேஇந்தத் திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
இறுதித் தேதி: - ஜூன் 30 2020
விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள்:
1.கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் சிறப்பு கல்வி உள்ளிட்ட மூன்றாண்டு பட்டப்படிப்புகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படிப்பவராக இருக்க வேண்டும்.
2.மேல்நிலைப் பள்ளித் தேர்வில் 50 விழுக்காடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3.குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 6.00.000 ஆறு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4.அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் முழுநேரம் பயில்பவராக இருக்கவேண்டும்.
5.இந்தியக் குடியுரிமை பெற்றவராக இருக்கவேண்டும்.
உதவித்தொகை எவ்வளவு? – 15000.
மேலே சொல்லப்பட்ட நிபந்தனைகள் சரிபார்க்கப்பட்டு,
தொலைபேசி உரையாடல் நடத்தப்படும். தேவைப்படின் நேர்முக விசாரணைகள் வழியே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்புவார்கள்.
உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள் எவை?
1.புகைப்பட அடையாள அட்டை
2.முகவரிச் சான்று
3.தன்னொப்பம் இட்ட மேல்நிலைக்கல்வி மதிப்பெண் பட்டியல்
4.கல்லூரியில் சேர்ந்ததற்கான அனுமதி அட்டை அல்லது சேர்க்கைக் கட்டணம் செலுத்தியமைக்கான ஒப்புகைச் சீட்டு
5.நடப்பு ஆண்டிற்கான சேர்க்கைக் கட்டண ஒப்புகைச் சீட்டு
6.விண்ணப்பதாரரின் வங்கி விவரங்கள் அதாவது, வங்கிக் கணக்குப் புத்தகம் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை.
  சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

No comments:

Post a Comment