பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவையின் மூன்றாவது இணையவழிக் கருத்தரங்கம் இன்று, 14 June-2020, நியாயிரு காலை 10.30 மணிக்கு!
பார்வையற்றோருக்குப் பெருகிவரும் பணிவாய்ப்புச் சிக்கல்கள்!Zoom இணைப்பு இதோ!
Meeting ID: 895 1306 0230
வணக்கம். பொது சமூகத்தில் ஊனமுற்றோர் குறித்த சரியான புரிதலை ஆழப்படுத்தி, பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் இடையே முற்போக்கு அரசியல், சமூக, பண்பாட்டு கருத்துக்களை விரிவாகக் கொண்டுசெல்வதை இலக்காகக் கொண்டு பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை செயல்பட்டு வருகிறது. எமது பேரவையின் மூன்றாவது இணையவழிக் கருத்தரங்கம் அருகிவரும் அரசு வேலைவாய்ப்புகள், நீர்த்துப்போகும் ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீடுகள், தனியார்த்துறையில் நிலவும் ஒவ்வாமை என பார்வையற்றோர் சமகாலத்தில் எதிர்கொண்டுவரும், தற்போதைய பொதுமுடக்கத்திற்குப் பிறகு எதிர்கொள்ளவிருக்கும் பணிவாய்ப்புச் சிக்கல்களை விவாதிக்கிறது!
மூத்த பார்வையற்ற குடிமைப் பணி அலுவலர் திரு D. T. தினகர் I.R.S., மனிதவளத் துறையில் நீண்ட பணி அனுபவம் பெற்றவரும், இணையத்தென்றல் மின்குழுமங்கள் மற்றும் அரக்கட்டளையின் அமைப்பாளர்களுள் ஒருவருமான வினோத் பெஞ்சமின், பார்வையற்றோர் உரிமைகளுக்காக தொடர்ந்து செயல்பட்டுவரும் கரூர் அரசுக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளர் முனைவர் ம. சிவக்குமார் ஆகியோர் கருத்தாளர்களாகப் பங்கேற்று உரையாற்றுகின்றனர், பங்கேற்பாளர்களோடு உரையாடுகின்றனர். பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் க. கார்த்திக் அறிமுக உரை வழங்க, ப. பூபதி நன்றியுரை வழங்குகிறார், உ. மகேந்திரன் கருத்தரங்கை ஒருங்கிணைக்கிறார்
மாணவர்கள், பணி நாடுநர்கள், செயல்பாட்டாளர்கள், பார்வையற்றோர் முன்னேற்றத்திலும் எதிர்காலத்திலும் அக்கறைகொண்டோர் என அனைவரையும் இக்கருத்தரங்கில் பங்கேற்றுப் பயன்பெறவும் பயனளிக்கவும் அன்புடன் அழைக்கிறோம்!
வாருங்கள், இணய வழியில் சந்திப்போம், சமூக மாற்றத்திற்கான கருத்துப் பரிமாற்றத்தில் நம்மை இணைத்துக்கொள்வோம்! தொடர்புக்கு: ptfb.tn@gmail.com,
இம்மாத கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர், U. மகேந்திரன், 9944505154.

சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்
No comments:
Post a Comment