முகப்பு

அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய்: முதல்வர் அறிவிப்பைத் தொடர்ந்து வெளியிடப்பட்டது அரசாணை

20 ஜூன், 2020
graphic எடப்பாடி பழனிச்சாமி
கரோனா ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அடையாள அட்டை வைத்திருக்கும் சுமார் 13 லட்சத்து 35 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு, தலா ரூ. 1000 நிவாரணமாக வழங்கப்படும் என சில தினங்களுக்கு முன்ப்உ முதல்வர் அறிவித்தார். அதற்கான அரசாணை இன்று மாநில வருவாய் நிர்வாகத்துறையின் சார்பில் வெளியிடப்பட்டது.

முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அந்த அரசாணையின்படி, தமிழகத்தில் மொத்தம் 13 லட்சத்து 35 ஆயிரத்து 219 அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் இருப்பதாகவும், அவர்களுக்கு நிவாரணமாக ரூ. 133 கோடியே 52 லட்சத்து 19 ஆயிரம் தேவைப்படும் என மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்/இயக்குநர் பரிந்துரைத்திருக்கிறார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிதியை வழங்கிடும் பணியைத் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்வார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, இதற்கான உரிய வழிமுறைகளைமாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்/இயக்குநர் விரைவில் வெளியிடுவார் எனவும் அந்த அரசாணை தெரிவிக்கிறது. மேலும், இந்த நிதியானது, மாநிலப் பேரிடர் பொறுப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணையைப் பதிவிறக்க
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

No comments:

Post a Comment