முகப்பு

அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நடைமுறையைப் பின்பற்றுக!



ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில், மாற்றுத்திறனாளிகள் உள் மாவட்டத்திற்குள் சென்றுவர பயன்படுத்தும் இலவச பயணச்சலுகை அட்டையை (bus pass) புதுப்பிக்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக, இந்த ஆண்டு அட்டை புதுப்பிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அட்டையை 31.ஆகஸ்ட் 2020 வரை புதுப்பிக்காமலேயே பயன்படுத்திக்கொள்ளலாம்என போக்குவரத்துத் துறை அறிவித்தது.
இந்த நிலையில்,அந்தக் காலக்கெடு முடிவடைந்ததால், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட பயனாளிகள்  அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரம், மதுரை மற்றும் நெல்லை மாவட்டங்களில் எதிர்வரும் 31.டிசம்பர் 2020 வரை அட்டையைப் புதுப்பிக்காமல் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கி, தொடர்புடைய போக்குவரத்துத் துறை அலுவலர்கள் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர். கரோனா நோய்ப்பரவல் அதிகரித்துவரும் இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் வீண் அலைச்சலைத் தவிர்க்கும் பொருட்டும், அவர்கள் தொற்றுக்குள்ளாகாமல் பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறையில் வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையினை ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் வரவேற்பதோடு, இதே நடைமுறையை அனைத்து மாவட்டங்களும் பின்பற்றிட வேண்டுமாறு, தொடர்புடைய துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கிடுமாறு மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்களிடம் எமது சங்கம் வலியிறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இங்கனம்,
U. சித்ரா,
தலைவர்
ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்
 சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

No comments:

Post a Comment